சோலார் மூலம் கிராமங்களுக்கு தடையற்ற மின்சாரம்!

பதிவு செய்த நாள் : 01 டிசம்பர் 2018ஜார்­கண்ட் மாநி­லத்­தில் வனப்­ப­கு­தி­யில் உள்ள கிரா­மங்­க­ளுக்கு பிர­தான் என்ற சமூக சேவை நிறு­வ­னம் சோலார் கிரிட் (சூரி­ய­ஒளி மூலம் மின் உற்­பத்தி) மூலம் மின்­சா­ரம் உற்­பத்தி செய்து விநி­யோ­கித்து வரு­கி­றது. இது வரை இருட்­டில் வாழ்ந்த இந்த கிராம மக்­கள் தற்­போது எல்.இ.டி பல்ப் மூலம் வெளிச்­சத்­தில் வாழ்­கின்­ற­னர். அத்­து­டன் மிக்ஸி, கிரைண்­டர், பிரிட்ஜ், டெலி­வி­ஷன் என அனைத்து நவீன சாத­னங்­க­ளை­யும் பயன்­ப­டுத்­தும் வாய்ப்­பும் ஏற்­பட்­டுள்­ளது. இந்த திட்­டத்­திற்கு பாங்க் ஆப் அமெ­ரிக்கா நிதி உதவி வழங்­கி­யுள்­ளது.  

தனது குடிசை வீட்­டில் சுவிட்ச் போட்­ட­வு­டன் விளக்கு எரி­வதை காண்­பித்து மங்­காரி தேவி (௭௫) ஆச்­சி­ரி­யத்­து­டன் “எங்­க­ளது கிரா­மம் நக­ரம் போல் ஆகி­விட்­டது” என்று மகிழ்ச்­சி­யு­டன் கூறு­கின்­றார்.

ஜார்­கண்ட் மாநி­லத்­தில் கும்லா மாவட்­டத்­தில் ராம்ஜா கிரா­மத்­தில் (கோபா பஞ்­சா­யத்து) பென்­டு­கோ­னா­வில் அமைந்­துள்­ளது மங்­காரி தேவி­யின் ஒரே அறை உள்ள குடிசை. கண­வரை இழந்த மங்­காரி தேவி தனி­யாக வசித்து வரு­கி­றார். இப்­போது இவர் இர­வி­லும் கூட சமைக்­கின்­றார். இதற்கு கார­ணம் மின் இணைப்பு கிடைத்து விளக்கு எரி­வதே.

‘பிர­தான்’ என்ற சமூக சேவை நிறு­வ­னம் சோலார் மூலம் (சூரிய ஒளி) மின்­சா­ரம் உற்­பத்தி செய்து  கும்லா மாவட்­டத்­தில் உள்ள ஆறு பஞ்­சா­யத்­து­க­ளைச் சேர்ந்த கிரா­மங்­க­ளுக்கு மின்­சார வசதி செய்து கொடுத்­துள்­ளது. இந்த திட்­டத்­திற்கு பாங்க் ஆப் அமெ­ரிக்கா நிதி உதவி அளித்­துள்­ளது. ஜார்­கண்ட் போன்ற மாநி­லங்­க­ளில் தடை­யற்ற மின்­சா­ரம் என்­பதே பகல் கனவு. மாநில தலை­ந­கர் ராஞ்­சி­யில் கூட தடை­யற்ற மின்­சா­ரம் என்­பது பகல் கனவே. பிர­தான் சமூக சேவை நிறு­வ­னத்­தின் வாயி­லாக கும்லா, ராய்­திக் ஆகிய இரண்டு பஞ்­சா­யத்து யூனி­யன்­க­ளில் உள்ள ௧௨ கிரா­மங்­க­ளுக்கு ௨௪ மணி நேர­மும், வரு­டம் முழு­வ­தும் தடை­யற்ற மின்­சார வசதி செய்து கொடுக்­கப்­பட்­டுள்­ளது. இத­னால் ௫௦௦ குடும்­பங்­கள் பலன் அடைந்­துள்­ளன.

இரண்டு குழந்­தை­க­ளுக்கு தாயான கீதா தேவி “ முன்பு எங்­கள் கிரா­மத்­தில் மின்­சார வசதி இல்லை. நாங்­கள் இர­வில் மண்­ணென்­னெய் விளக்கை பயன்­ப­டுத்­தி­னோம். தற்­போது வெளிச்­சத்­திற்­காக பல்பு மட்­டும் பயன்­ப­டுத்­து­வ­தில்லை. மற்ற மின்­சா­ரத்­தில் இயங்­கும் மிக்ஸி போன்­ற­வை­க­ளை­யும் பயன்­ப­டுத்­து­கின்­றோம்” என்று தெரி­வித்­தார். இப்­போது இவ­ரது இரண்டு குழந்­தை­க­ளும் இருட்­டிய பிற­கும் மின்­சார பல்பு வெளிச்­சத்­தில் படிக்­கின்­ற­னர்.

ராய்­திக் பஞ்­சா­யத்து யூனி­ய­னில் உள்ள பின்­ஜி­பூர் கிரா­மத்­தில் ௧௧௩ வீடு­கள் உள்­ளன. இந்த கிரா­மத்­தில் ௭௦௦ பேர் வசிக்­கின்­ற­னர். இந்த கிரா­மம் மாவட்ட தலை­ந­க­ரில் இருந்து ௬௦ கி.மீட்­டர் தொலை­வில் அடர்ந்த வனப்­ப­கு­தி­யில் அமைந்­துள்­ளது. சாலை வசதி இல்லை. இந்த கிரா­மத்­திற்கு செல்ல வேண்­டும் எனில் ௧௬ கி.மீட்­டர் அடர்ந்த வனப்­ப­கு­தி­யில் செல்ல வேண்­டும். மின்­சார வசதி இல்­லா­மல் இருந்த பின்­ஜி­பூர் கிரா­மத்­திற்கு சென்ற வரு­டம் பிர­தான் சமூக சேவை நிறு­வ­னம் மின்­சார வச­தியை செய்து கொடுத்­துள்­ளது.

கும்லா மாவட்ட பிர­தான் சமூக சேவை நிறு­வ­னத்­தின் ஒருங்­கி­னைப்­பா­ளர் திபஞ்­சன் கடாக் கூறு­கை­யில், “ முன்பு இந்த பின்­ஜி­பூர் கிரா­மத்­தைச் சேர்ந்­த­வர்­கள் மண்­ணென்­னெய் விளக்கை பயன்­ப­டுத்தி வந்­த­னர். இத­னால் மனி­தர்­களை பாதிக்­கும் கார்­பன் மோனக்­ஸைட் வாயு­வும் அதிக அள­வில் வெளி­யா­னது. அத்­து­டன் இதன் விலை­யும் மிக அதி­கம். ஒரு லிட்­டர் ரூ.௫௧ என்று விற்­பனை செய்­யப்­பட்­டது. ரேஷன் கடை­க­ளில் மண்­ணென்­னெய் விநி­யோ­கம் என்­பது முறை­யாக நடக்­க­வில்லை” என்று தெரி­வித்­தார்.

இப்­போது பின்­ஜி­பூர் கிரா­மத்­தில் உள்ள வீடு­க­ளில் மண்­ணென்­னெய் விளக்­குக்கு பதி­லாக மின்­சார பல்­பு­க­ளில் எரி­கின்­றன. இத்­து­டன் டெலி­வி­ஷன், மிக்ஸி, கிரைண்­டர் போன்­ற­வை­க­ளும் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. பெண்­கள் முன்பு அம்­மி­யில் அரைத்­துக் கொண்டு இருந்­த­னர். இப்­போது மிக்­ஸியை பயன்­ப­டுத்தி அரைக்­கின்­ற­னர். பிரிட்ஜ் பயன்­ப­டுத்­து­கின்­ற­னர். இந்த கிரா­மத்­தில் ௩௦க்­கும் அதி­க­மான வீடு­க­ளில் டெலி­வி­ஷன் மட்­டு­மல்­லா­மல் டி.டி.ஹெச் இணைப்­பும் உள்­ளன.

பின்­ஜி­பூ­ரில் வசிக்­கும் பஞ்­சா­யத்து உறுப்­பி­ன­ரான திரிக்­பால் சிங், “முன்பு நாங்­கள் வெளி­யு­லக தொடர்பு இல்­லா­மல் இருந்­தோம். இப்­போது டெலி­வி­ஷன் மூலம் உல­கத்­தில் என்ன நடக்­கின்­றது என்­பதை தெரிந்து கொள்­கின்­றோம்” என்று கூறி­னார்.

இந்த ௧௨ கிரா­மங்­க­ளுக்­கும் பிர­தான் சமூக சேவை நிறு­வ­னம் சோலார் மூலம் மின் உற்­பத்தி செய்து   மின்­சார விநி­யோ­கி­கத்தை தொடங்கி வெற்­றி­க­ர­மாக மூன்­றா­வது ஆண்­டில் அடி­யெ­டுத்து வைக்­கி­றது. இந்த திட்­டத்தை தொடங்­கி­ய­தில் இருந்து ஒரு நிமி­டம் கூட மின்­சார தட்­டுப்­பாடு என்­பதே இல்லை.

திபஞ்­சன் கடாக், “இந்த கிரா­மங்­க­ளில் தெரு விளக்­கு­க­ளை­யும் அமைத்­துள்­ளோம். இத­னால் பெண்­கள் இர­வில் எவ்­வித பய­மும் இல்­லா­மல் நட­மா­ட­லாம்” என்று கூறி­னார்.

இந்த கிரா­மங்­க­ளைச் சேர்ந்­த­வர்­க­ளுக்கு சோலார் மின்­சா­ரத்­தால் வாழ்க்­கை­யும் முன்­னே­றி­யுள்­ளது. விவ­சா­யத்­திற்கு தண்­ணீர் இறைப்­பது, மற்ற விவ­சாய வேலை­க­ளுக்கு சோலார் மின்­சா­ரம் பயன்­ப­டு­கி­றது. அத்­து­டன் இவர்­களை தொழில் முனை­வோர்­க­ளா­க­வும் மாற்றி உள்­ளது. ஜெராக்ஸ் கடை, குளிர்­பான கடை என­வும் தொடங்­கி­யுள்­ள­னர்.

சந்­தோஷி தேவி என்ற பெண்­மணி, “நான் சோலார் மின்­சா­ரத்­தால் இயங்­கும் சிறிய ரைஸ் மில் வாங்­கி­யுள்­ளேன். இதில் அரைக்க கிலோ­வுக்கு ஒரு ரூபாய் கட்­ட­ணம் வசூ­லிக்­கின்­றேன். இது என்னை தொழில் முனை­வோ­ராக மாற்­றி­யுள்­ளது” என்று தெரி­வித்­தார். இவர் அறு­வடை சம­யத்­தில் ரூ.௫ ஆயி­ரம் முதல் ரூ.௧௦ ஆயி­ரம் வரை சம்­பா­திக்­கின்­றார்.

விநோத் குமார் என்ற இளை­ஞர், அவ­ரது கிரா­மத்­தில் ஜெராக்ஸ் கடை தொடங்­கி­யுள்­ளார். “முன்பு ஜெராக்ஸ் எடுக்க வேண்­டும் எனில் ௨௫ கி.மீ தொலை­வில் உள்ள சந்­தைக்கு செல்ல வேண்­டும். தற்­போது சுற்­றி­யுள்ள மூன்று கிரா­மங்­க­ளைச் சேர்ந்­த­வர்­க­ளுக்கு எனது ஜெராக்ஸ் கடை உத­வு­கி­றது” என்று தெரி­வித்­தார். இவர் விவ­சா­யம் மூலம் கிடைக்­கும் வரு­மா­னத்­து­டன், ஜெராக்ஸ் கடை நடத்­து­வ­தால் மாதத்­திற்கு ரூ.௫ ஆயி­ரம் வரை சம்­பா­திக்­கின்­றார்.

சோலார் மின்­சா­ரத்­தால் பய­ன­டை­வோ­ரு­டன் இணைந்து பணி­யாற்­றும் பிர­தான் சமூக நிறு­வ­னத்­தைச் சேர்ந்த ராகுல் பதக்  கூறு­கை­யில், “௨௦­௧­௬ம் ஆண்டு பாங்க் ஆப் அமெ­ரிக்கா, சோலார் மின் உற்­பத்தி கிரிட் (சோலர் பேனல் அடங்­கிய அமைப்பு) அமைக்க நிதி உதவி செய்­தது. இதன் உரிமை தற்­போது கிராம மக்­க­ளுக்கு மாற்­றப்­பட்­டுள்­ளது. இந்த கிரா­மத்­தைச் சேர்ந்த பெண்­கள் சோலார் கிரிட்  அமைப்­பது முதல் அதை பரா­ம­ரிப்­பது வரை என எல்லா வேலை­க­ளை­யும் செய்­கின்­ற­னர். சோலார் கிரிட் அமைக்க தேவை­யான நிலம் கிராம பஞ்­சா­யத்து வழங்­கி­யது” என்று தெரி­வித்­தார்.

ஒரு குடும்­பத்­திற்கு தேவை­யான மின்­சா­ரம் உற்­பத்தி செய்ய சோலார் கிரிட் அமைக்க ரூ.௫௦ ஆயி­ரம் செல­வா­கும். கிரா­மத்­தில் ௫௦ குடும்­பங்­கள் இருந்­தால் ரூ.௨௫ லட்­சம் வரை செல­வா­கும்.

இது பற்றி ராகுல் பதக் கூறு­கை­யில், பாங்க் ஆப் அமெ­ரிக்கா, அவர்­க­ளின் கார்ப்­ப­ரேட் சோசி­யல் ரெஸ்­பாண்ஸ்­சி­பி­லிட்டி (நிறு­வன சமூக பொறுப்­பு­ணர்ச்சி) நிதி­யில் இருந்து நிதி வழங்­கி­னார்­கள். இதன் பேட்­ட­ரி­க­ளுக்கு ஐந்து வருட கியா­ரண்டி உள்­ளது. ஐந்து வரு­டங்­க­ளுக்கு பிறகு பேட்­ட­ரி­களை பரா­ம­ரிக்க செல­வா­கும். இந்த செலவை சமா­ளிக்க மின்­சா­ரம் பயன்­ப­டுத்­தும் வீடு­க­ளுக்கு மீட்­டர் பொருத்­தப்­பட்­டுள்­ளது. மின்­சா­ரத்தை பயன்­ப­டுத்­து­ப­வர்­கள் சிறிய அள­வில் கட்­ட­ணம் செலுத்த  வேண்­டும்” என்று தெரி­வித்­தார்.

சோலார் மின்­சா­ரத்தை பயன்­ப­டுத்­தும் வீடு­க­ளுக்கு குறைந்­த­பட்ச கட்­ட­ண­மாக மாதத்­திற்கு ரூ.௬௦ கட்­ட­ணம் வசூ­லிக்­கப்­ப­டு­கி­றது. அதற்கு மேல் பயன்­ப­டுத்­தும் மின்­சா­ரத்­தின் அளவை பொருத்து  கட்­ட­ணம் செலுத்த வேண்­டும். ஒவ்­வொரு குடும்­பத்­தா­ரும் சரா­ச­ரி­யாக மாதத்­திற்கு ரூ.௯௦ முதல் ரூ.௧௫௦ வரை செலுத்­து­கின்­ற­னர்.

“ஒவ்­வொரு கிரா­மத்­தி­லும் உள்ள பெண்­கள் குழு­வின் பெய­ரில் வங்­கி­யில் கணக்கு தொடங்­கப்­பட்டு, கட்­ட­ண­மாக வசூ­லிக்­கும் பணம் சேமிக்­கப்­ப­டு­கி­றது. இதில் இருந்து சோலார் கிரிட்­டு­களை பரா­ம­ரிப்­ப­வர்­க­ளுக்கு சம்­ப­ளம் வழங்­கப்­ப­டு­கி­றது. மீத­முள்ள பணம் பரா­ம­ரிப்பு செல­வுக்­காக சேமிக்­கப்­ப­டு­கி­றது” என்று ராகுல் பதக் தெரி­வித்­தார்.

பிர­தான் சமூக சேவை நிறு­வ­னம் சோலார் கிரிட் மூலம் மின்­சா­ரம் வழங்­கு­வது மூன்­றா­வது ஆண்­டில் அடி­யெ­டுத்து வைத்­துள்­ளது. இப்­போது ௧௨ கிரா­மங்­க­ளி­லும் சோலார் தண்­ணீர் சுத்­தி­க­ரிப்பு கரு­வியை பயன்­ப­டுத்தி சுத்­த­மான குடி­நீர் வழங்­கும் முயற்­சி­யில் இறங்­கி­யுள்­ளது. கும்­லா–­பார்சா, கான்­சிர், சிகோயி, கோப்ஜா, ஜார்­ஜட்டா, சிலாம், துமர்­திக் ஆகிய கிராம பஞ்­சா­யத்­து­க­ளில் அடங்­கி­யுள்ள ௧௨ கிரா­மங்­க­ளில் சுத்­த­மான குடி­நீர் வசதி ஏற்­ப­டுத்தி தர உள்­ளது.

இறு­தி­யாக திபஞ்­சன் கடாக் கூறு­கை­யில், “சோலார் தண்­ணீர் சுத்­தி­க­ரிப்பு மூலம் சுத்­த­மான குடி­நீர் வழங்­கும் திட்­டத்­தால் ௫௦௦ குடும்­பங்­கள் பய­ன­டை­யும். இதற்­கான வேலை­கள் நடை­பெற்­றுக் கொண்­டுள்­ளன. அடுத்த ஆறு மாதத்­தில் பணி­கள் முடி­வ­டைந்து, இவை கிராம மக்­க­ளி­டம் ஒப்­ப­டைக்­கப்­ப­டும்” என்று தெரி­வித்­தார்.

நன்றி: தி பெட்­டர் இந்­தியா டாட் காம் இணை­ய­த­ளத்­தில் கெல்லி கிசால்யா.