4 மணி நேரத்­தில் மூங்­கில் வீடு ரூ. 46 லட்­சம் பரிசு

பதிவு செய்த நாள் : 30 நவம்பர் 2018

பிலிப்­பைன்ஸ் நாட்­டைச் சேர்ந்த ஏர்ல் பார்­லேல்ஸ் (Earl Forlales) என்­ப­வர், மூங்­கி­லால் ஆன ஒரு வீட்டை நான்கே மணி நேரத்­தில் கட்டி, பரி­சாக 64,385 அமெ­ரிக்க டாலர் (இந்­திய ரூபா­யில் சுமார் 46 லட்­சம்) பரிசு வென்­றுள்­ளார்.

அந்­நாட்­டின் தலை­ந­கர் மணி­லா­வில் மக்­கள்­தொகை அதி­கம். அதில், மூன்­றில் ஒரு பகு­தி­யி­னர், குடி­சைப் பகு­தி­க­ளில் வசிக்­கின்­ற­னர். எனவே, தர­மான, அதே­நே­ரம் குறைந்த விலை­யில் நல்ல குடி­யி­ருப்­பு­க­ளைக் கட்­ட­வேண்­டிய தேவை ஏற்­பட்­டுள்­ளது.

இதற்­காக, ராயல் இன்ஸ்­டி­டி­யூட் ஆப் சார்ட்­டர்ட் சர்­வே­யர்ஸ் (Royal Institute of Chartered Surveyors - RICS) எனும் அமைப்பு 'வருங்­கால நக­ரங்­க­ளின் வடி­வ­மைப்பு' என்ற தலைப்­பில் ஒரு போட்­டியை அறி­வித்­தது. இதில் ஏர்­லின் இந்­தப் புதிய வீட்டு வடி­வ­மைப்பு முதல் பரிசை வென்­றுள்­ளது.