ஏமன்: தொட­ரும் குழந்­தை­க­ளின் இறப்பு

பதிவு செய்த நாள் : 30 நவம்பர் 2018

வளை­குடா நாடு­க­ளில் ஒன்­றான ஏம­னில், ஐந்து வய­துக்­கும் குறை­வான குழந்­தை­க­ளில் சுமார் 85 ஆயி­ரம் பேர் ஊட்­டச்­சத்து குறை­பாட்­டால் இறந்­துள்­ள­தாக, ஒரு முன்­னணி தொண்டு நிறு­வ­னத்­தின் அறிக்கை தெரி­விக்­கி­றது.

அங்கே தொட­ரும் உள்­நாட்­டுப் போர், மிக மோச­மான மனி­தா­பி­மா­னச் சிக்­க­லாக உரு­வெ­டுத்­துள்­ளது. சென்ற மாதத்­தில் ஐ.நா. சபை, 1.4 கோடி ஏமன் மக்­கள் பஞ்­சத்­தில் சிக்­கி­யி­ருக்­க­லாம் என்று எச்­ச­ரித்­தது. இப்­போ­ரி­னால் இது­வரை, குறைந்­தது 7 ஆயி­ரம் பேர் வரை உயி­ரி­ழந்­தி­ருக்­க­லாம். 10 ஆயி­ரத்­திற்­கும் மேற்­பட்­டோர் காயம் அடைந்­தி­ருக்­க­லாம் என்று செய்­தி­கள் கூறு­கின்­றன. மோச­மான இந்த உள்­நாட்­டுப் போரை முடி­வுக்­குக் கொண்டு வரு­வ­தற்கு ஐ.நா. சபை முயற்சி செய்து வரு­கி­றது.