இளை­யோரை ஈர்க்­கும் பி.டி.எப். நாளி­தழ்

பதிவு செய்த நாள் : 30 நவம்பர் 2018

நிதி அரோரா, தனி­யார் நிறு­வ­னத்­தில் பணி­பு­ரி­ப­வர். வேலை நிமித்­த­மாக பல்­வேறு நேர்­மு­கத் தேர்­வு­களை நடத்­து­ப­வர். படிப்­பில் ஆர்­வத்­து­டன் ஈடு­பட்டு, நல்ல மதிப்­பெண்­க­ளோடு பட்­டம் பெறும் இளை­ஞர்­கள் மத்­தி­யில் நாளி­தழ் வாசிக்­கும் பழக்­கம் இல்லை.

விதி­வி­லக்­காக சில இளை­ஞர்­க­ளைச் சந்­திக்­கும் வாய்ப்­பும் அவ­ருக்­குக் கிடைத்­தது. விசா­ரித்­துப் பார்த்­த­தில், அவர்­கள் அனை­வ­ருமே சிறு­வ­யது முதலே நாளி­தழ் வாசிக்­கும் வழக்­கத்தை உடை­ய­வர்­கள் என்­பதை அறிந்­து­கொண்­டார் நிதி.

தனது 8 வயது மக­னுக்கு நாளி­தழ் வாசிக்­கும் பழக்­கத்தை ஆரம்­பிக்க வேண்­டிய நேரம் வந்­து­விட்­டதை உணர்ந்­த­போது, அவ­ரால் சிறு­வர்­க­ளின் புரி­த­லுக்கு ஏற்ற நாளி­த­ழைக் கண்­டு­பி­டிக்க முடி­ய­வில்லை.

தேடித்­தேடி சலிப்­ப­டைந்து, தம் வீட்­டி­லேயே 4 பக்­கம் கொண்ட சிறிய நாளி­தழை 2017ஆம் ஆண்டு தயார் செய்­தார். 'சில்ட்­ரன்'ஸ் போஸ்ட்' எனும் சிறு­வர்­க­ளுக்­கான ஆங்­கில நாளி­தழ் அப்­ப­டித்­தான் உரு­வா­னது. 'குர்­காவ் அன்­னை­யர்' எனும் முக­நூல் குழு­வில் இருந்த பெண்­க­ளின் ஆத­ர­வு­டன் அப்­பத்­தி­ரிகை வெளி­யா­கத் தொடங்­கி­யது.

8 முதல் 13 வய­துக்­குள் உள்ள இளை­யோ­ருக்­கா­கத் தயா­ரா­கும் இவ்­வி­தழ், பள்­ளி­க­ளுக்­கும் பெற்­றோர்­க­ளுக்­கும் பி.டி.எப். (PDF) வடி­வில் அனுப்பி வைக்­கப்­ப­டு­கி­றது. இதை அவர்­கள் A4 அளவு தாள்­க­ளில் அச்­சிட்டு இளை­யோ­ருக்­குத் தர முடி­யும்.

இதில் உல­கச் செய்­தி­கள், சுற்­றுச்­சூ­ழல், பொரு­ளா­தா­ரம், வர­லாறு, தொழில்­நுட்­பம், இந்­திய ஜன­நா­யக அமைப்பு என, எல்லா வகைச் செய்­தி­க­ளும் உண்டு. கவி­தை­கள், சிறு­க­தை­கள், கார்ட்­டூன்­கள், புதிர்­கள், கேள்வி பதில் பகுதி போன்ற பொழு­து­போக்கு அம்­சங்­க­ளும் நிறைந்த இந்த நாளி­த­ழின் இப்­போ­தைய வாச­கர் எண்­ணிக்கை 3,000 ஆகும்.