ஒப்­பந்த நிறு­வ­னங்­க­ளில் நாசா ஆய்வு

பதிவு செய்த நாள் : 30 நவம்பர் 2018

அமெ­ரிக்க விண்­வெளி ஆய்வு நிறு­வ­ன­மான நாசா, விண்­வெ­ளிக்கு வீரர்­களை அனுப்ப, ஸ்பேஸ் எக்ஸ், போயிங் ஆகிய தனி­யார் நிறு­வ­னங்­க­ளைத் தேர்வு செய்­துள்­ளது. அவற்­றின் பணி­யி­டப் பாது­காப்பை உறு­தி­செய்ய பரி­சோ­த­னை­களை மேற்­கொள்­ளப் போவ­தாக நாசா அறி­வித்­துள்­ளது. போதைப் பொருள் தவிர்ப்பு உள்­ளிட்ட பல்­வேறு பாது­காப்பு அம்­சங்­க­ளைப் பரி­சீ­லிக்க உள்ள இந்த மதிப்­பீட்டு ஆய்­விற்­குப் பின்­னரே அடுத்­த­கட்ட பரி­சோ­த­னை­கள் தொடங்­கும் என­வும் கூறி­யுள்­ளது.

ஸ்பேஸ் எக்ஸ் நிறு­வ­னர் எலன் மஸ்க், போதைப் பொருள் உப­யோ­கிக்­கும் காட்­சி­கள் சமீ­பத்­தில் வெளி­யா­னதே இந்­ந­ட­வ­டிக்­கை­யின் பின்­னணி என்று பத்­தி­ரி­கை­கள் தெரி­விக்­கின்­றன.