'பெண்'ணுக்கு எத்தனை பெயர்கள்?

பதிவு செய்த நாள் : 30 நவம்பர் 2018

பெண்ணைக் குறிக்கும் சொற்கள், தமிழில் ஏராளம் உண்டு. அதில், பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்று ஏழு பருவங்களுக்கும் தனித்தனிப் பெயர்கள். இவற்றைத்தவிர, வேறு சில சொற்களும் உள்ளன. அவை, அணங்கு, ஆடவள், ஆட்டி, இளம்பிடி, இளையாள், காந்தை, காரிகை, கோதை, சிறுமி, சுந்தரி, சுரிகுழல், தையல், நல்லாள், நாரி, நுண்ணிடை, பாவை, பூவை, பெண்டு, மகடூ, மகள், மடவரல், மடவோள், மாது, மாயோள், மானினி, மின், வஞ்சனி, வஞ்சி, வனிதை, நங்கை, மதங்கி, யுவதி, விறலி.