மக­ளிர் உலக கோப்பை: ஆஸ்­தி­ரே­லியா சாம்­பி­யன்

பதிவு செய்த நாள் : 25 நவம்பர் 2018 23:40


ஆன்டிகுவா:

மே.இ.தீவு­க­ளில் மக­ளிர் உலக கோப்பை கிரிக்­கெட் போட்­டி­கள் நடந்­தது. நேற்று நடந்த இறுதி போட்­டி­யில் ஆஸ்­தி­ரே­லியா அணி 8 விக்­கெட் வித்­தி­யா­சத்­தில் இங்­கி­லாந்தை வீழ்த்­தி­யது. முத­லில் பேட்­டிங்  செய்த இங்­கி­லாந்து அணி 19.4 ஓவ­ரில் 105 ரன்­னுக்கு ஆட்­ட­மி­ழந்­தது. இங­கி­லாந்து அணி­யின் தொடக்க ஆட்­டக்­கா­ரர் வாட் அதி­க­பட்­ச­மாக 43 ரன் எடுத்­தார். 37 பந்­தில் 5 பவுண்­டரி ஒரு சிக்­ஸ­ரு­டன்43 ரன்­னில் கார்ட்­னர் பந்­தில் ஆட்­ட­மி­ழந்­தார்.

நைட் 25 ரன்­னில் கார்ட்­னர் பந்­தில் ஆட்­ட­மி­ழந்து பெவி­லின் திரும்­பி­ய­தும் மறற வீரர்­கள் சொற்ப ரன்­னில் நடையை கட்­டி­னர். அதனை தொடர்ந்து விளை­யா­டிய ஆஸ்­தி­ரே­லியா அணி 15.1 ஓவ­ரில் 2 விக்­கெட் இழப்­புக்கு 106 ரன் எடுத்து வெற்றி பெற்று கோப்­பையை வென்­றது. ஆஸி. அணி தரப்­பில் கார்ட்­னர் 33 ரன், லேனிங் 28 ரன்­னு­டன் ஆட்­ட­மி­ழக்­கா­மல் இருந்­த­னர்.

ஆஸ்­தி­ரே­லியா அணி 4 வது முறை­யாக கோப்­பையை வென்­றா­லும் லீக் சுற்று ஆட்­டத்­தில் இந்­தி­யா­வி­டம் படு­தோல்வி அடைந்­த­து­கு­றிப்­பி­டத்­தக்­கது. போட்­டி­யின் சிறந்த வீராங்­க­னை­யாக கார்ட்­ன­ரும், தொட­ரின்  சிறந்த வீராங்­க­னை­யாக ஹீலி­யும் தேர்வு செய்­யப்­பட்­ட­னர்.