ரஷ்யாவில் நடைபெறும் ஆப்கன் – தலிபான் பேச்சுவார்த்தையில் இந்தியா பங்கேற்கும் : வெளியுறவு துறை அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 08 நவம்பர் 2018 20:45

புதுடில்லி,

    ரஷ்யாவில் நடைபெறும் ஆப்கன் – தலிபான் விவகாரங்கள் தொடர்பான அதிகாரபூர்வமற்ற வகையிலான பேச்சுவார்த்தையில் இந்தியா பங்கேற்கும் என்று இந்திய வெளியுறவு துறை இன்று அறிவித்தது.

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் நாளை (நவம்பர் 9) ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் ஆப்கன் அரசு மற்றும் தலிபான் பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.

ரஷ்யாவில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில் இந்தியா பங்கேற்கவுள்ளதாக இந்திய வெளியுறவு துறை பேச்சாளர் ரவீஷ் குமார் இன்று செய்தியாளர்களிடம் கூறினார். ஆப்கானிஸ்தானில் மீண்டும் அமைதி ஏற்பட வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம் என்றும் ரவீஷ் குமார் கூறினார்.