மக்களவை பொதுச்செயலாளரின் பதவிக்காலம் மேலும் ஒரு ஆண்டு நீட்டிப்பு

பதிவு செய்த நாள் : 08 நவம்பர் 2018 19:34

புதுடில்லி

மக்களவை பொதுச் செயலாளரான சினேஹலதா ஸ்ரீவஸ்தவாவின் பதவிக்காலம் மேலும் ஒரு வருடகாலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


சட்டத்துறை செயலாளராக இருந்த சினேஹலதா ஸ்ரீவஸ்தவா (வயது 35) பாராளுமன்ற மக்களவையின் பொதுச் செயலாளராக கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான சினேஹலதா நிதித்துறையிலும் கூடுதல் செயலாளர் பொறுப்பை வகித்துள்ளார்.

சினேஹலதா ஸ்ரீவஸ்தவாவின் பதவிக்காலம்  2018 நவம்பர் 30ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், அவருடைய பதவிக்காலm மேலும் ஒரு வருட காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மக்களவை தலைமையகம் வெளியிட்ட அறிக்கையில்,

”சபாநாயகரின் வேண்டுகோளுக்கு இணங்க சினேஹலதா ஸ்ரீவஸ்தவாவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 2018 டிசம்பர் 1ஆம் தேதி முதல் 2019 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி வரை இவரே மக்களவை பொதுச் செயலாளராக தொடர்ந்து பணியாற்றுவார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவையின் முதல் பெண் பொதுச் செயலாளர் என்னும் பெருமையை பெற்றவர் சினேஹலதா ஸ்ரீவஸ்தவா என்பது குறிப்பிடத்தக்கது.