சபரிமலை பாரம்பரியத்தைக் காக்க ரதயாத்திரை: எடியூரப்பா தொடங்கி வைத்தார்

பதிவு செய்த நாள் : 08 நவம்பர் 2018 18:23

காசர்கோடு

    சபரிமலை ஐயப்பன் கோவிலின் பாரம்பரியத்தைக் காக்க வலியுறுத்தி கேரள மாநிலம் காசர்கோட்டில் ரத யாத்திரையை கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா இன்று தொடங்கி வைத்தார்.

 சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் சென்று வழிபாடு நடத்த அனுமதி வழங்கி கடந்த செப்டம்பர் 28ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக ஐயப்ப பக்தர்களும், இந்து அமைப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். நாடு முழுவதும் இந்த தீர்ப்பை எதிர்த்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் கேரள பாஜக சார்பில் சபரிமலை பாதுகாப்பு      ரத யாத்திரை இன்று தொடங்கியது. காசர்கோடு மாவட்டத்தில் இருந்து இந்த யாத்திரையை கர்நாடக மாநில பாஜக தலைவரும், கரநாடக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடியூரப்பா தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியை எடியூரப்பா, கேரள பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி ஒருங்கிணைப்பாளர் துஷார் வேலப்பள்ளி ஆகியோர் தலைமையில் தொடங்கி வைத்தனர்.

இந்த ரத யாத்திரை பல்வேறு மாவட்டங்கள் வழியாகச் சென்று வரும் 13ம்தேதி சபரிமலை அருகே உள்ள எருமேலியில் நிறைவடைய உள்ளது.