நைஜீரியாவில் துப்பாக்கி முனையில் 4 பாதிரியார்கள் கடத்தல்

பதிவு செய்த நாள் : 08 நவம்பர் 2018 17:50

லாகோஸ்

    நைஜீரியாவில் துப்பாக்கி முனையில் 4 பாதிரியார்கள் கடத்தப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து டெல்டா மாகாண செய்தி தொடர்பாளர் ஆன்ட்ரூ அனியமாகா கூறிய போது, ”தெற்கு நைஜீரியாவில் டெல்டா மற்றும் இடோ மாகாணங்களின் எல்லைப் பகுதியில் இந்த கடத்தல் சம்பவம் நிகழ்ந்துள்ளது” என்று கூறினார்.
”டெல்டாவில் இருந்து இடோ மாகாணத்தின் இக்போமா பகுதியில் நடக்கவிருந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்ற போது ரோமன் கத்தோலிக்க பாதிரியார்கள் கடத்தப்பட்டனர்” என்று போலீசார் தெரிவித்தனர். டெல்டா மாகாணத்தில் 5 கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் கடத்தப்பட்டு மூன்று வாரங்கள் கூட முடிவடையாத நிலையில், பாதிரியார்கள் கடத்தப்பட்டுள்ளதை டெல்டா மாகாணத்தில் உள்ள

வார்ரி கத்தோலிக்க மறை மாவட்டம் உறுதிப்படுத்தியுள்ளது. இரண்டு வாரங்களுக்கு பிறகு, சந்தேகத்துக்கிடமான ஒருவரை தவிர, மீதமுள்ள கன்னியாஸ்திரிகள் விடுவிக்கப்பட்டனர். ஆனால் அவர்களை விடுவிக்க பணம் கொடுக்கப்பட்டதா என்பது குறித்து எதுவும் கூற மறுத்து விட்டார்.

தென்கிழக்கு நைஜீரியாவில் நடந்த இறுதி சடங்கில் கலந்துகொண்டு டெல்டா திரும்பி கொண்டிருந்த போது, அவர்களது வாகனத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் இரண்டு கன்னியாஸ்திரிகள் காயமடைந்தனர்.

கடந்த ஜனவரி மாதம், நைஜீரியா பேராயர்கள் பணத்துக்காக கடத்துவது அதிகரித்திருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.