தமிழக புதிய அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி ஒதுக்கீடு வழங்க அமைச்சர் தங்கமணி கோரிக்கை

பதிவு செய்த நாள் : 08 நவம்பர் 2018 17:20

புதுடில்லி

தமிழகத்தில் 2020 – 21ம் ஆண்டில் மின் உற்பத்தி தொடங்க உள்ள 6 அனல் மின் திட்டங்களுக்கு தேவையான நிலக்கரி ஒதுக்கீட்டினை வழங்கும்படி மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பியுஷ் கோயலை டில்லியில் நேரில் சந்தித்து தமிழக மின்சார அமைச்சர் பி. தங்கமணி இன்று (வியாழக்கிழமை) வலியுறுத்திக் கேட்டுக்கொண்டனர்.

இந்தச் சந்திப்பு தொடர்பாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.  தங்கமணி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் 2020-21ல் மின் உற்பத்தி தொடங்கயிருக்கும் வடசென்னை (திட்டம் 3 (1 x 800 MW)  உப்பூர் (2 x 800 MW)   உடன்குடி (2 x 660 MW) எண்ணூர் சிறப்பு பொருளாதாரமண்டலம் (2 x 660 MW) எண்ணூர் விரிவாக்கம் (1 x 660 MW) எண்ணூர் (மாற்று) (1 x 660 MW) ஆகிய அனல் மின் திட்டங்களுக்கு தேவையான நிலக்கரி ஒதுக்கீட்டினை உடனடியாக வழங்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் அனல் மின் நிலையங்களுக்கு தோராயமாக நாளொன்றுக்கு 72000 மெட்ரிக் டன்கள் நிலக்கரி தேவைப்படுகிறது. (அதாவது 20 நிலக்கரி தொடர்வண்டிகள்). மழைகாலங்கள் தொடங்க உள்ளதால் அனல் மின் நிலையங்களில் நிலக்கரியின் கை இருப்பை குறைந்தது 15 நாட்களுக்குஅதிகரிப்பதற்காக நாள் ஒன்றுக்கு 20 நிலக்கரி தொடர் வண்டிகள் அனுப்புமாறு கோரிக்கைவைக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து மாண்பு மிகு மத்தியமின்சாரம் மற்றும்  புதுப்பிக்கவல்ல எரிசக்தித்துறை அமைச்சர் (2 தனி பொறுப்பு) ஆர். கே. சிங் அவர்களை சந்தித்து தமிழ்நாட்டிற்கு மத்திய மின் தொகுப்பில்லிருந்து வரவேண்டிய 6312 மெகாவாட்டில் தற்போது 3376 மெகாவாட் மட்டும் தான் வந்து கொண்டிருக்கிறது எனவே மத்திய மின் தொகுப்பிலிருந்து முழுமையாக மின்சாரத்தை தமிழகத்திற்கு வழங்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு, தமிழக மின்சாரத்துறை அமைச்சர் பி. தங்கமணி செய்தியாளர்களிடம் கூறினார்.

அமைச்சர் தங்கமணியுடன் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானகழகத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் விக்ரம் கபூர், முதன்மை செயலர் / எரிசக்தித்துறை முகமது நசிமுதீன், ஆகியோர் மத்திய அமைச்சர் பியுஷ் கோயலை சந்தித்தனர்.

தமிழ்நாட்டில் காற்றாலை மின்சாரம் அதிகமாக கிடைக்கும் மாதங்களாகிய மே முதல் செப்டம்பர் மாதத்தில் கூடங்குளம் அணு மின் நிலையதின் வருடாந்திர பராமரிப்பு பணியினை மேற்கொள்ளுமாறு கோரிக்கைவைக்கப்பட்டுள்ளது எனமாண்பு மிகு மின்சாரம், மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு. பி. தங்கமணி அவர்கள் தெரிவித்தார்.