'உனது கரு­வியை வீட்­டில் மாட்டு!'

பதிவு செய்த நாள் : 09 நவம்பர் 2018

“2015இல், கல்­லூரி இறுதி ஆண்­டில், படிப்­பின் ஒரு­ப­கு­தி­யான புரா­ஜெக்­டுக்­காக உரு­வாக்­கப்­பட்­ட­து­தான், மின்­சா­த­னங்­க­ளின் மின் நுகர்வை, தனித்­த­னியே கண்­கா­ணிக்­கும் கருவி. புரா­ஜெக்­டுக்­காக உரு­வாக்­கப்­பட்ட கருவி, மின்­சே­மிப்­புக்­கான கண்­டு­பி­டிப்­பாக மாறி­விட்­டது” என்று பேசத் தொடங்­கி­னார் கோகுல் ஸ்ரீனி­வாஸ்.

இக்­கண்­டு­பி­டிப்­புக்­காக, துபாய் அர­சின் சிறந்த கண்­டு­பி­டிப்­புக்­கான விரு­தும், 10 தேசிய அள­வி­லான விரு­து­க­ளும் கோகு­லுக்கு கிடைத்­துள்­ளன. தொழில் தொடங்கி ஓராண்டு முடிந்­துள்ள நிலை­யில், இது­வரை 2 லட்­சம் டால­ருக்­கும் அதி­க­மாக வணி­கம் செய்­துள்­ளார்.

“கல்­லூரி புரா­ஜெக்­டுக்­காக உரு­வாக்­கிய அக்­க­ரு­வியை, அமே­சான் நிறு­வ­னத்­தில் வேலைக்­குச் சேர்ந்­த­வு­டன் மறந்­து­விட்­டேன். நண்­பர்­கள் சில­ரின் தூண்­டு­த­லால், 'மேக் இன் இந்­தியா' போட்­டி­யில், எனது கண்­டு­பி­டிப்பை அறி­மு­கம் செய்­தேன். அதற்கு, நாட்­டி­லேயே இரண்­டா­வது சிறந்த கண்­டு­பி­டிப்­புக்­கான விருது கிடைத்­தது. தொடர்ந்து, தேசிய அள­வில் 10க்கும் மேற்­பட்ட விரு­து­கள் கிடைத்­தன. சர்­வ­தேச விரு­து­க­ளும் கிடைத்­தன. அங்­கீ­கா­ரம் கிடைத்­தா­லும், இந்­தக் கரு­வியை வைத்து தொழில் தொடங்க வேண்­டும் என்று தோன்­ற­வில்லை.

ஒரு­முறை நாங்­கள் குடும்­பத்­து­டன் ஒரு­வா­ரம் வெளி­யூர் சென்­றோம். அப்­போது, வீட்­டி­லுள்ள ஹீட்­டரை அணைக்க மறந்­து­விட்­டோம். இத­னால், மின்­கட்­ட­ணம் அதி­க­மாக வந்­து­விட்­டது. எனது அம்­மா­தான், 'உனது கரு­வியை வீட்­டி­லேயே மாட்டு' என்று சொன்­னார். வீட்­டில் பொருத்­தி­ய­தால், மின்­நு­கர்வு பெரு­ம­ளவு குறைந்­தது.

தங்­க­ளுக்­கும் இது­போன்ற ஒன்­றைத் தரு­மாறு உற­வி­னர்­க­ளும், நண்­பர்­க­ளும் கேட்­ட­னர். அப்­போ­து­தான், இக்­க­ரு­வி­யைத் தயா­ரித்து விற்­க­லாம் என்ற எண்­ணம் வந்­தது.

நானும் என் நண்­பர் ராம் பிர­வீ­னும் இணைந்து 'மினி­யன் லேப்ஸ்' என்ற நிறு­வ­னத்தை பெங்­க­ளூ­ரு­வில் தொடங்­கி­னோம். துபாய், சிங்­கப்­பூர் நாடு­க­ளி­லும் எங்­க­ளது தயா­ரிப்பு அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. எங்­க­ளது கரு­வி­யில், 168 மின்­சா­த­னங்­க­ளின் மின்­நு­கர்வை தனித்­த­னியே கண்­கா­ணிக்க முடி­யும். இணை­யத்­தொ­டர்­பால் வெளி­யூ­ரில் இருந்­தும் கண்­கா­ணிக்­க­லாம்.

முத­லில், மருத்­து­வ­ம­னை­கள், கடை­கள், ஓட்­டல்­கள் மற்­றும் தொழிற்­சாலை பயன்­பாட்­டுக்­கான விற்­ப­னை­யில் மட்­டுமே கவ­னம் செலுத்­தி­னோம். ஆனால், வீடு­க­ளி­லும் பொருத்­து­வ­தற்கு மக்­கள் கேட்­கின்­ற­னர். இத­னால், வீட்டு உப­யோ­கத்­துக்­காக கருவி தயா­ரிக்­கும் பணியை மேற்­கொண்டு வரு­கின்­றோம்.” என்­றார் கோகுல்.