பெரு­மைக்­கு­ரிய தலை­வர்!

பதிவு செய்த நாள் : 09 நவம்பர் 2018

கே.ஆர்.நாரா­ய­ணன்

27.10.1920 --– 9.11.2005

கோட்­ட­யம், கேர­ளம்.

கே.ஆர். நாரா­ய­ண­னுக்கு முன்­பி­ருந்த குடி­ய­ர­சுத் தலை­வர்­கள் யாரும் தேர்­த­லில் வாக்­க­ளித்­த­தில்லை. அந்த வழக்­கத்தை மாற்றி, 1998 மக்­க­ள­வைத் தேர்­த­லில் வரி­சை­யில் நின்று, குடி­ய­ர­சுத் தலை­வ­ராக இருந்து வாக்­க­ளித்து ஜன­நா­ய­கக் கட­மையை ஆற்­றிய பெருமை, 'கொச்­சே­ரில் ராமன் நாரா­ய­ணன்' என்ற கே.ஆர். நாரா­ய­ண­னையே சேரும்!

பள்­ளிப் படிப்­புக்­குப் பிறகு கேரள பல்­க­லைக்­க­ழ­கத்­தில் முது­நி­லைப் பட்­டப்­ப­டிப்பை முடித்­தார். இத­ழி­யல் படித்து இருந்­த­தால், ஆங்­கில நாளி­த­ழில் பத்­தி­ரி­கை­யா­ள­ராக வேலை பார்த்­தார். கல்­லூரி விரி­வு­ரை­யா­ள­ரா­க­வும் இருந்­தார். கல்வி உத­வித்­தொகை பெற்று லண்­டன் சென்று, பொரு­ளா­தா­ரக் கல்­விக் கழ­கத்­தில் அர­சி­யல் அறி­வி­யல் படித்­தார்.

அப்­போ­தைய பிர­த­மர் ஜவ­ஹர்­லால் நேரு­வின் கோரிக்­கையை ஏற்று நாடு திரும்பி, இந்­திய வெளி­யு­ற­வுத்­துறை பணி­யில் சேர்ந்­தார். பணி­யைச் சிறப்­பா­கச் செய்து நேரு­வின் பாராட்­டை­யும் பெற்­றார். பணி­க­ளில் இருந்து ஓய்­வு­பெற்று, ஜவ­ஹர்­லால் நேரு பல்­க­லைக்­க­ழ­கத்­தின் துணை­வேந்­தர் ஆனார்.

இந்­திரா காந்­தி­யின் வேண்­டு­கோளை ஏற்று, 1984இல் அர­சி­ய­லுக்கு வந்து தொடர்ந்து 3 முறை மக்­க­ளவை உறுப்­பி­ன­ரா­கத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டு, மத்­திய திட்­டத்­துறை, வெளி­யு­ற­வுத்­துறை, தொழில்­நுட்­பத்­துறை அமைச்­சர் பத­வி­களை வகித்­தார். ராஜீவ் காந்தி அமைச்­ச­ர­வை­யில் மத்­திய இணை­ய­மைச்­ச­ரா­க­வும் பொறுப்பு வகித்­தார். அதன் பிறகு பிர­த­மர் வி.பி.சிங்­கின் பரிந்­து­ரை­யில், 1992இல் இந்­தி­யா­வின் 9வது குடி­ய­ரசு துணைத் தலை­வ­ரா­கத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டார். இந்­தியா சுதந்­தி­ரம் அடைந்து பொன்­விழா கண்ட சம­யம் 1997இல் 10வது குடி­ய­ர­சுத் தலை­வ­ரான பெரு­மைக்­கு­ரி­ய­வர்.

பல்­வேறு பத­வி­கள் வகித்து, சமூக, பொரு­ளா­தார மாற்­றங்­க­ளுக்­காக இவர் மேற்­கொண்ட நட­வ­டிக்­கை­கள் இவ­ரது புகழை என்­றென்­றும் நிலைத்­தி­ருக்­கச் செய்­யும்.