மாவீரன்!

பதிவு செய்த நாள் : 09 நவம்பர் 2018

ஒரு காலத்­தில், ஐரோப்பா கண்­டத்தை சேர்ந்த, இத்­தா­லி­யின் தலை­ந­க­ரான, ரோம் நக­ரத்தை, டார்­கு­வின் என்ற மன்­னன் ஆண்டு வந்­தான். மக்­களை அடி­மை­க­ளாக நடத்­து­வது; மனம் போன போக்­கில் பொதுச் சொத்­துக்­களை கொள்­ளை­ய­டிப்­பது, இவன் வழக்­கம்!

பல­கா­லம் பொறுத்­தி­ருந்த மக்­கள், ஒரு நாள் பொங்கி எழுந்­த­னர். மன்­னன் டார்­கு­வினை, ரோம் நாட்டை விட்டு விரட்டி அடித்­த­னர்.

தப்பி ஓடிய டார்­கு­வின், இத்­தாலி, க்ளூசி­யம் நகரை ஆண்ட மன்­னன் போர்­சி­னா­வி­டம், தஞ்­சம் புகுந்­தான். காலப் போக்­கில், போர்­சி­னா­வின் அன்பை, பெற்­றான்; இழந்த ரோம் நாட்டை மீட்க, டார்­கு­வி­னுக்கு, பெரும்­ப­டையை கொடுத்து உத­வி­னான் போர்­சினா.

ரோம் நாட்டை கைப்­பற்ற வரு­கி­றான் டார்­கு­வின், என்­பதை அறிந்த ரோம் மக்­கள், அதிர்ச்சி அடைந்­த­னர்; இதைத் தடுக்க, புதுப்­படை ஒன்றை உரு­வாக்­கி­னர்.

ரோம் நாட்டு எல்­லைக்­குள் வந்த டார்­கு­வின், அங்­கி­ருந்த கிரா­மங்­களை முற்­றுகை இட்­டான். கண்­ணில் பட்­ட­வர்­களை எல்­லாம் கொன்று குவித்­தான். குடி­சை­க­ளுக்கு தீயிட்டு மகிழ்ந்­தான்; அவ­னு­டைய அரா­ஜ­கச் செயல்­களை கேள்­விப்­பட்ட ரோம் நகர மக்­கள், டார்­கு­வினை எப்­படி எதிர்ப்­பது என்று யோசித்­த­னர்.

டைபர் நதியை, டார்­கு­வின் கடந்து விட்­டால், ரோம் நாடு அவ­னுக்கு அடி­மை­யாகி விடும்; அத­னால், டைபர் நதியை கடக்க விடா­மல் டார்­கு­வினை தடுக்க, மக்­கள் படை­யி­னர் முடிவு செய்­த­னர்.

டைபர் நதி­யி­லி­ருந்த மரப்­பா­லத்தை தகர்ப்­ப­தன் மூலம், டார்­கு­வினை தடுத்து விட­லாம் என்று எண்ணி, அந்த மரப்­பா­லத்தை தகர்க்க துவங்­கிய போது, மரப்­பா­லத்­தின் எதிர்­மு­னையை, நெருங்கி விட்­டான் டார்­கு­வின்.

மரப்­பா­லத்­தின் காவ­லாளி, ரோம் மக்­கள் படை­யி­னரை பார்த்து, 'நாம் எண்­ணிக்­கை­யில் குறை­வாக இருக்­க­லாம், எதி­ரி­கள் எண்­ணிக்­கை­யில் அதி­க­மாக இருக்­க­லாம். ஆனால், கொடி­ய­வனை எதிர்க்­கி­றோம் என்­பதே நம் பலம். என்­னு­டன், இரண்டு வீரர்­கள் மட்­டும் வாருங்­கள். பாலத்­தின் துவக்­கத்­தில் நின்று, எதி­ரி­களை எதிர் கொள்­வோம்; மற்­ற­வர்­கள் மரப்­பா­லத்தை தகர்க்­கும் பணி­யில் ஈடு­ப­டுங்­கள்...' என்­றான்.

அந்த காவ­லா­ளி­யு­டன், ஹெர்­மி­னி­யஸ், லார்ட்­டஸ் என்ற, இரண்டு வீரர்­கள், பாலத்­தின் முன் பகு­திக்­குச் சென்­ற­னர். எதி­ரி­க­ளைச் சந்­திக்க, தீரத்­து­டன் மூன்று பேர் மட்­டும் நிற்­ப­தைக் கண்டு, எதி­ரிப் படை­யைச் சார்ந்த, மூன்று பேர் மட்­டும் போரிட வந்­த­னர். அந்த மூவ­ரை­யும், தாக்கி, நதி­யில் துாக்கி எறிந்­த­னர்.

அதன் பின், எதி­ரி­கள் படை­யைச் சேர்ந்த மற்ற மூவர் வந்­த­னர்; அவர்­க­ளுக்­கும், அதே கதி தான்.

அப்­போது, எதி­ரிப்­படை வீரன் ஒரு­வன், காவ­லா­ளி­யைக் குறி வைத்து தாக்­கி­னான்; எதி­ரி­யின் கத்தி, அந்த காவ­லாளி யின் தொடை­யைத் தாக்­கி­யது. இருப்­பி­னும், எதி­ரி­யின் நெஞ்­சில் ஈட்­டி­யைப் பாய்ச்­சி­னான் காவ­லாளி; எதிரி நதி­யில் விழுந்த போது, ரோம் மக்­கள் படை மரப்­பா­லத்தை தகர்த்­தது.

இனி, எதி­ரி­கள் நதி­யைக் கடந்து வர முடி­யாது என்­ப­தால், தங்­கள் வீரர்­களை திரும்ப வரும்­படி, அழைத்­த­னர் ரோம் மக்­கள் படை­யி­னர். ஹெர்­மி­னி­ய­ஸும், லார்ட்­ட­ஸும் நதி­யில் குதித்து, நீந்­திக் கரை சேர்ந்­த­னர்.

ஆனால், அந்­தக் காவ­லாளி மட்­டும் எதி­ரி­க­ளு­டன் போரா­டிக் கொண்­டி­ருந்­தான். மரப்­பா­லம் நதி­யில் இழுத்­துச் செல்­லப்­பட, எதி­ரி­க­ளி­டம் காவ­லாளி சிக்கி விடு­வாரோ என்று ரோம் மக்­கள் அஞ்ச, நெஞ்­சு­ரத்­து­டன் எதி­ரி­களை, துவம்­சம் செய்­துக் கொண்­டி­ருந்­தான் அந்த காவ­லாளி.

தனி மனி­த­னாக, காவ­லாளி போரா­டி­ய­தைக் கண்டு, எதி­ரி­கள் அஞ்­சி­னர். உடல் முழு­வ­தும் காய­ம­டைந்த காவ­லாளி, இறு­தி­யில், நதி­யில் குதித்து, கரைக்கு வந்­தான்.

ரோம் மக்­கள் அவ­னைக் கட்டி தழுவி, மகிழ்ந்­த­னர். எதி­ரி­களை முறி­ய­டிப்­ப­தற்­காக, மரப்­பா­லத்தை தகர்க்க, அவன் செய்த யுக்­தி­யை­யும், தனி மனி­த­னாக நின்று எதி­ரி­க­ளைப் பந்­தா­டிய, அவ­னு­டைய வீரத்­தை­யும் போற்­றிய, ரோம் மக்­கள், அந்த மாவீ­ர­னுக்கு, ரோம் நகர சந்­தைக்கு அரு­கில் சிலை வைத்­த­னர்.

இன்­றும், ரோம் நகர மக்­கள், அவன் வீரத்தை வியந்து பேசு­கின்­ற­னர்.

அவன் யார் என்று உங்­க­ளுக்கு தெரி­யுமா குட்­டீஸ்...

அந்த மாவீ­ரன் ஹோரேட்­டஸ்.