வலுப்பெறும் திவிபுராலாந்து தனி மாநில கோரிக்கை

பதிவு செய்த நாள் : 03 நவம்பர் 2018

திரி­புரா சட்­ட­சபை தேர்­தல் நடை­பெ­று­வ­தற்கு முன் சென்ற பிப்­ர­வ­ரி­யில், தேர்­தல் பிர­சா­ரத்­தில் சுவ­பன் டெபர்மா மிக ஆர்­வ­மாக ஈடு­பட்­டார். திரி­புரா பழங்­குடி மக்­கள் முன்­ன­ணி­யின் மாண­வர் அமைப்­பான திரி­புரா பழங்­குடி மாண­வர்­கள் சங்­கத்­தின் துணை பொதுச் செய­லா­ளர் சுவ­பன் டெபர்மா. இவர் தகார்­ஜாலா தொகு­தி­யில் போட்­டி­யிட்ட திரி­புரா பழங்­குடி மக்­கள் முன்­ன­ணி­யின் தலை­வர் என்.சி.டெபர்­மா­வுக்­காக தேர்­தல் பிர­சா­ரத்­தில் ஈடு­பட்­டார். அப்­போது பிர­சா­ரத்­தின் போது “நாங்­கள் வீடு வீடாக சென்று பிர­சா­ரம் செய்­தோம். ஆட்­சி­யில் இருக்­கும் மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்சி அரசு, பழங்­குடி மக்­களை பற்றி கவ­லைப்­ப­டு­வ­தில்லை. பழங்­குடி மக்­கள் கட்சி ஆட்­சிக்கு வந்­தால் நமக்கு நல்­ல­கா­லம் பிறக்­கும்” என்று பிர­சா­ரம் செய்­தோம் என்று நினைவு கூறு­கின்­றார் சுவ­பன் டெபர்மா.

தகார்­ஜாலா தொகு­தி­யில் போட்­டி­யிட்ட என்.சி.டெபர்மா ௧௨,௬௫௨ வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெற்­றார். பார­திய ஜனதா அர­சில்  திரி­புரா பழங்­குடி மக்­கள் முன்­ன­ணி­யும் பங்­கேற்­றுள்­ளது. கூட்­டணி அரசு அமைந்து ஆறு மாதங்­கள் முடிந்­துள்­ளன. தற்­போது சுவ­பன் டெபர்மா, ஏமாற்­றப்­பட்­டுள்­ள­தாக கரு­து­கின்­றார். “நாங்­கள் திவி­பு­ரா­லாந்து கேட்ட போது , மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்சி அரசு எங்­களை ஒடுக்­கி­யது. எனவே நாங்­கள் பா.ஜ.,அரசை அமைத்­தோம். இவர்­க­ளும் அந்த மாதி­ரியே இருக்­கின்­ற­னர்” என்று அவர் கூறு­கின்­றார்.

திரி­பு­ரா­வில் ௨௫ வருட மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யின் ஆட்­சிக்கு முடி­வுக்கு வந்­தது. இப்­போது பழங்­குடி மக்­கள் வாழும் பகு­தியை தனி­யாக பிரித்து திவி­பு­ரா­லாந்து அமைக்­கும் கோரிக்கை மீண்­டும் வலுப்­பெற்று வரு­கி­றது. இந்த கோரிக்­கையை முந்­தைய மாநில அரசு செவி­ம­டுக்க மறுத்­தது. பா.ஜ., தலை­மை­யி­லான மத்­திய அரசு. தனி மாநில கோரிக்­கையை பரி­சீ­லிப்­ப­தாக கூறி­யது. சட்­ட­சபை தேர்­த­லுக்கு முன் மத்­திய உள்­துறை அமைச்­சர் ராஜ்­நாத் சிங், தனி மாநில கோரிக்கை குறித்து பரீ­சி­லனை செய்ய குழு அமைக்­கப்­ப­டும் என்று, திரி­புரா பழங்­குடி மக்­கள் முன்­ன­ணிக்கு வாக்­கு­று­தி­ய­ளித்­தார். இதன் பிறகே சட்­ட­சபை தேர்­த­லுக்கு பா.ஜ., தலை­மை­யி­லான கூட்­ட­ணி­யில், திரி­புரா பழங்­குடி மக்­கள் முன்­னணி இணைந்­தது. இந்த கூட்­டணி வெற்றி பெற்று ஆட்­சி­யை­யும் அமைத்­தது.

அதன் பிறகு இரண்டு கட்­சி­க­ளுக்­கும் இடையே உறவு சுமு­க­மாக இல்லை. இரண்டு கட்­சி­க­ளுக்­கும் இடையே பல்­வேறு பிரச்­னை­க­ளில் அடிக்­கடி மோதல்­கள் நடக்­கின்­றன. குறிப்­பாக திவி­பு­ரா­லாந்து தணி மாநி­லம் அமைப்­ப­தற்கு பா.ஜ., முயற்சி செய்­ய­வில்லை என்­ப­தால் மோதல்­கள் வலுக்­கின்­றன. சென்ற செப்­டம்­பர் மாதம் நிலைமை மோச­மா­னது. இந்த நெருக்­க­டியை தீர்க்க மத்­தி­யில் இருந்து பா.ஜ., தலை­வர்­கள் வந்து நிலை­மையை சமா­ளித்­த­னர். இருப்­பி­னும் இரண்டு கட்­சி­க­ளுக்­கும் இடை­யி­லான உற­வில் நெருக்­க­டியே நீடிக்­கி­றது.

மத்­திய உள்­துறை அமைச்­ச­கம் தனி மாநில கோரிக்கை குறித்து எவ்­வித நட­வ­டிக்­கை­யும் எடுக்­க­வில்லை என்று கூறி சென்ற அக்­டோ­பர் ௨ம் தேதி, தெற்கு திரி­பு­ரா­வில் உள்ள கில்லா மாவட்­டத்­தில், திரி­புரா பழங்­குடி மக்­கள் முன்­ன­ணி­யைச் சேர்ந்­த­வர்­கள் தொடர் உண்­ணா­வி­ரத போராட்­டத்தை நடத்­தி­னார்­கள். பா.ஜ., பழங்­குடி மக்­க­ளின் கோரிக்­கையை கேட்க வேண்­டும். இதை நீண்ட நாட்­க­ளுக்கு தள்­ளிப் போடக்­கூ­டாது என்று வலி­யு­றுத்­து­கின்­ற­னர்.

திரி­புரா பழங்­குடி மக்­கள் முன்­னணி துணை பொதுச் செய­லா­ளர் கிருஷ்ணா காந்தா ஜமா­தியா, “ நாங்­கள் ஆத­ரவு தெரி­வித்த கார­ணத்­தால் தான், பழங்­குடி மக்­கள் வாழும் பகு­தி­யில் பா.ஜ., வெற்றி பெற முடிந்­தது. இப்­போது அவர்­கள் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு, அவர்­க­ளில் யாரும் எங்­க­ளு­டன் பேச்சு நடத்த கூட முன்­வ­ர­வில்லை” என்று கூறி­னார்.

திரி­புரா சட்­ட­ச­பை­யில் மொத்­த­முள்ள ௬௦ இடங்­க­ளில் ௨௦ இடங்­கள் பழங்­குடி மக்­க­ளுக்கு ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது. பா.ஜ.,வுக்­கும், திரி­புரா பழங்­குடி மக்­கள் முன்­ன­ணிக்­கும் இடைய ஏற்­பட்ட கூட்­டணி உடன்­பாட்­டில் ௯ தொகு­தி­க­ளில் பழங்­குடி மக்­கள் முன்­னணி போட்­டி­யிட்­டது. இதில் ௮ தொகு­தி­க­ளில் வெற்றி பெற்­றது. பா.ஜ., ௧௧ தொகு­தி­க­ளில் போட்­டி­யிட்டு வெற்றி பெற்­றது.

திரி­புரா பழங்­குடி மக்­கள் முன்­ன­ணி­யின் கீழ் மட்ட தலை­வர்­கள்  சென்ற ஜன­வரி மாதம் ராஜ்­நாத் சிங் திவி­பு­ரா­லாந்து மாநில கோரிக்கை பற்றி பரீ­சி­லிக்க கமிட்டி அமைக்­கப்­ப­டும் என்­றும், இந்த கமிட்டி மூன்று மாதங்­க­ளில் அறிக்­கையை சமர்ப்­பிக்­கும் என்­றும் கூறி­னார் என்­கின்­ற­னர். ஆனால் செப்­டம்­பர் மாதம் தான் கமிட்டி அமைக்­கப்­பட்­டது. அத்­து­டன் இந்த கமிட்­டி­யின் பரீ­சி­ல­னை­யில் தனி மாநில கோரிக்கை குறித்து எது­வும் நேர­டி­யாக குறிப்­பி­டப்­ப­ட­வில்லை. இந்த கமிட்டி பழங்­குடி மக்­க­ளின் சமூக, பொரு­ளா­தார, கலாச்­சார, மொழி மற்­றும் மற்ற மேம்­பாட்டு பிரச்­னை­கள் பற்றி பரி­சீ­லிக்­கும் என்று கூறப்­பட்­டுள்­ளது என்று தெரி­வித்­தார். இந்த கமிட்­டி­யைச் சேர்ந்­த­வர்­கள் சென்ற அக்­டோ­பர் ௧௧, ௧௨ ஆகிய தேதி­க­ளில், முதன் முறை­யாக திரி­பு­ரா­வுக்கு விஜ­யம் செய்­த­னர்.    

திரி­புரா பழங்­குடி மக்­கள் முன்­ன­ணி­யின் இளை­ஞர் பிரி­வைச் சேர்ந்த மோனி­லால் டெபர்மா, “எங்­க­ளுக்கு என தனி மாநி­லம் இல்­லா­மல் முன்­னேற்­றம் அடைய முடி­யாது என்­பது தெளி­வாக தெரி­கி­றது. ஆனால் எங்­களை விட பா.ஜ.,வுக்கு  அதிக எண்­ணிக்­கை­யில் எம்.எல்.ஏ.,க்கள் இருப்­ப­தால், எங்­கள் தலை­வர்­கள் கூறு­வ­தற்கு செவி சாய்ப்­ப­தில்லை. அப்­ப­டி­யெ­னில் கூட்­ட­ணிக்கு என்ன அர்த்­தம்”? என்று கேட்­கின்­றார்.

திரி­புரா பழங்­குடி மாண­வர்­கள் சங்­கத்­தின் துணைத் தலை­வ­ரான பிதர் டெபர்மா, “நாம் பா.ஜ.,வுடன் அர­சில் இருப்­ப­தால், ஏதோ ஒரு குறை உள்­ளது. நாம் பொறுத்­தி­ருந்து பார்ப்­போம்” என்று கூறு­கின்­றார்.

பழங்­குடி மக்­கள் மத்­தி­யில் திவி­பு­ரா­லாந்து தனி மாநி­லம் அமைப்­பது தாம­த­மா­வ­தால் மட்­டும் வெறுப்பு ஏற்­ப­ட­வில்லை. தேர்­தல் வெற்­றிக்கு கடு­மை­யாக உழைத்த பழங்­குடி இளை­ஞர்­கள் மத்­தி­யில் மாநில அர­சின் செயல்­பா­டு­க­ளி­லும் அதி­ருப்தி நில­வு­கி­றது. கோமாட்டி மாவட்­டத்­தில் உள்ள உதய்­பூ­ரைச் சேர்ந்த மோனி­லால் டெபர்மா, “நாங்­கள் ஏதா­வது மாற்­றம் வரும் என்று கருதி,  தேர்­தல் நேரத்­தில் கடு­மை­யாக உழைத்­தோம். ஆனால் நிறம் மற்­றுமே மாறி­யுள்­ளது. சிவப்பு நிறத்­திற்கு பதி­லாக காவி நிறம் வந்­துள்­ளது. அவர்­கள் எங்­கள் குரலை (கோரிக்­கையை) ஒடுக்­கு­கின்­ற­னர்” என்று கடு­மை­யாக சாடு­கின்­றார்.

மோனி­லால் டெபர்மா தொடர்ந்து கூறு­கை­யில், “இந்த கூட்­டணி தேர்­த­லின் போது கொடுத்த எந்த வாக்­கு­று­தி­யை­யும் நிறை­வேற்­ற­வில்லை. இளை­ஞர்­க­ளுக்கு ஆன்ட்­ராய்டு போன், நல்ல கல்வி, வேலை வாய்ப்பு கொடுப்­ப­தாக வாக்­கு­று­தி­ய­ளித்­த­னர். ஆனால் இது வரை எது­வும் கிடைக்­க­வில்லை” என்று கூறி­னார்.        

திரி­பு­ரா­வில் பழங்­குடி மக்­கள் வாழும் மலைப்­பி­ராந்­தி­யங்­க­ளில் வாழும் மக்­கள் ஏமாற்­றம் அடைந்­துள்­ளதை காண­மு­டி­கி­றது. கில்லா என்ற இடத்­தில் இறைச்சி விற்­பனை செய்­யும் ஹரி மோகன் ஜமா­டியா, பண நெருக்­கடி கடு­மை­யாக உள்­ளது. யார் கையி­லும் பணம் இல்லை. ஏனெ­னில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்­டத்­தில், எந்த வேலை­யும் நடை­பெ­று­வ­தில்லை. யாருக்­கும் வேலை கொடுப்­ப­தில்லை” என்று கூறி­னார்.

மலா­லாய் என்ற ஊரில் கடந்த ஆறு மாதங்­க­ளாக மலே­ரியா காய்ச்­சல் கடு­மை­யாக உள்­ளது. அத்­து­டன் மக்­கள் மத்­தி­யில் வேறு பல குறை­க­ளும் உள்­ளன. இந்த ஊரைச் சேர்ந்த பழங்­குடி இளை­ஞர், இந்த அர­சாங்­கத்­தின் மீது மக்­கள் மிகுந்த நம்­பிக்­கை­யு­டன் இருந்­த­னர். ஆனால் என்ன மாற்­றம் ஏற்­பட்­டுள்­ளது? மற்ற எந்த வரு­டங்­க­ளை­யும் விட மலே­ரியா கடு­மை­யாக உள்­ளது. மாநில அரசு அக்­கறை இல்­லா­மல் உள்­ளது. அத்­து­டன் பண நெருக்­க­டி­யும் கடு­மை­யாக உள்­ளது” என்று தெரி­வித்­தார்.

திரி­புரா பழங்­குடி மக்­கள் முன்­ன­ணி­யைச் சேர்ந்த மூத்த தலை­வர்­கள் சோர்­வ­டைந்து விட­வில்லை.  தேர்­தல் காலத்தை விட தற்­போது கட்­சிக்கு மக்­கள் மத்­தி­யில் அதிக ஆத­ரவு இருக்­கின்­றது என்று ஒரு சட்­ட­சபை உறுப்­பி­னர் கூறு­கின்­றார். அவர் மேலும் கூறு­கை­யில், பா.ஜ.,கூட்­டணி அரசு அமைந்த பிறகு, வேலை வாய்ப்பு திட்­டத்­தில் வேலை குறைந்­துள்­ளது. ஆனால் இதற்கு கார­ணம் மாநில அர­சின் கட்­டுப்­பாட்ற்கு அப்­பாற்­பட்­டது.

 “நாங்­கள் தன்­னாட்சி மாவட்ட கவுன்­சில் பகு­தி­க­ளில் வேலை வாய்ப்பு உறுதி திட்­டத்தை அமல்­ப­டுத்த இய­ல­வில்லை. இதற்கு கார­ணம் புதிய அரசு ஆட்­சிக்கு வந்த உடன், தன்­னாட்சி மாவட்ட கவுன்­சி­லில் உறுப்­பி­னர்­க­ளாக இருந்த மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யைச் சேர்ந்த ௮௦ சத­வி­கித உறுப்­பி­னர்­கள் ராஜி­னமா செய்து விட்­ட­னர். நாங்­கள் பொறுப்பு அதி­கா­ரியை நிய­மித்­துள்­ளோம். ஆனால் அவ­ருக்கு நிதி சம்­பந்­தப்­பட்ட விஷ­யங்­க­ளில் குறைந்த அளவு அதி­கா­ரமே உள்­ளது. இந்த உறுப்­பி­னர் பத­வி­கள் காலி­யா­கவே உள்­ளன. தன்­னாட்சி மாவட்ட கவுன்­சில் உறுப்­பி­னர்­க­ளுக்­கான இடைத் தேர்­தல் நடை­பெற்று, உறுப்­பி­னர்­கள் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட பிறகு, எங்­கள் நேரடி கட்­டுப்­பாட்­டில் வரும் போது நிலைமை மாறும்” என்று கூறி­னார்.

பழங்­குடி இளை­ஞர்­கள் மத்­தி­யில் அதி­ருப்தி நில­வு­வதை பற்றி பா.ஜ., வெளிப்­ப­டை­யாக  எதை­யும் கூற­வில்லை. பா.ஜ.,வைச் சேர்ந்த துணை முத­ல­மைச்­சர் ஜிஸ்னு தேவ் வர்­மன் கூறு­கை­யில், “இளை­ஞர்­கள் உடனே வேலை­கள் நடக்க வேண்­டும் என்று எதிர்­பார்க்­கின்­ற­னர். ஆனால் அரசு நிர்­வா­கம்– அர­சி­யல் சட்ட வரம்­பிற்­குள் இயங்க வேண்­டும் என்று கூறி­னார்.

பா.ஜ.,வுக்­கும், திரி­புரா பழங்­குடி மக்­கள் முன்­ன­ணிக்­கும் இடையே கருத்து வேறு­பாடு ஏற்­பட்­டுள்­ளதை பற்றி ஜிஸ்னு தேவ் வர்­மன் கூறு­கை­யில், “ கூட்­டணி கட்­சி­க­ளுக்­குள் கருத்து வேறு­பாடு என்­பது இயற்­கையே. இல்­லை­யெ­னில் நாங்­கள் இணைந்து ஒரே கட்­சி­யாக மாறி­வி­டு­வோம். எல்­லோ­ரும் ஒரு குர­லில் பேச முடி­யாது என்று தெரி­வித்­தார்.

திரி­புரா பழங்­குடி மக்­கள் முன்­ன­ணி­யின், திவி­பு­ரா­லாந்து தனி மாநில கோரிக்கை பற்றி ஜிஸ்னு தேவ் வர்­மன் மிக சாது­ரி­ய­மாக பதி­ல­ளித்­தார். அவர் கூறு­கை­யில், இந்த கோரிக்கை எங்­கள் அர­சின் செயல் திட்­டத்­தில் இல்லை. ஆனால் பா.ஜ., கூட்­டணி கட்சி தனி மாநில கோரிக்­கையை எழுப்­பும் உரி­மையை அங்­கீ­க­ரிக்­கி­றது. இது ஜன­நா­யக விரோ­த­மா­னதோ அல்­லது அர­சி­யல் சட்­டத்­திற்கு எதி­ரா­னதோ அல்ல” என்று கூறி­னார்.

நன்றி: ஸ்கோரல் டாட் இன் இணைய தளத்­தில் அரு­ணாப் சைகியா  எழுதிய கட்டுரையின் சுருக்கம்.