கட்சிகளின் செல்வாக்கு அடிப்படையில் தொகுதி வேண்டும்

பதிவு செய்த நாள் : 03 நவம்பர் 2018

பீகா­ரில் பா.ஜ,,தலை­மை­யி­லான தேசிய ஜன­நா­யக கூட்­ட­ணி­யில் இடம் பெற்­றுள்ள கட்­சி­க­ளுக்கு இடையே வரும் லோக்­சபா தேர்­த­லில் தொகுதி பங்­கீடு குறித்து கருத்து வேற்­றுமை ஏற்­பட்­டுள்­ளது. இந்த கூட்­ட­ணி­யில் இடம் பெற்­றுள்ள ராஷ்­டி­ரிய லோக் சமந்தா கட்சி தலை­வர் உபேந்­திர குஸ்­வகா, தங்­கள் கட்­சிக்கு நியா­ய­மான தொகு­தி­கள் ஒதுக்க வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­யுள்­ளார். இவர் நரேந்­திர மோடி தலை­மை­யி­லான அமைச்­ச­ர­வை­யில், மனி­த­வள மேம்­பாட்டு துறை இணை அமைச்­ச­ராக உள்­ளார். இது வரை ராஷ்­டி­ரிய லோக் சமந்தா, ஐக்­கிய ஜனதா தள தலை­வ­ரும், பீகார் முத­ல­மைச்­ச­ரு­மான நிதிஷ் குமார் மீது தாக்­கு­தல் தொடுத்து வந்­தது. இப்­போது பார­திய ஜனதா மீதும் வெளிப்­ப­டை­யாக குறை கூறி­யுள்­ளது.

பீகா­ரில் உள்ள ௪௦ லோக்­சபா தொகு­தி­க­ளில் பா.ஜ,வுக்கு ௨௦ தொகு­தி­க­ளும், மீத­முள்ள ௨௦ தொகு­தி­கள் கூட்­டணி கட்­சி­க­ளுக்கு ஒதுக்­கப்­ப­டும் என்ற வந்த செய்­தி­களை ராஷ்­டி­ரிய லோக் சமந்தா கட்சி  குறை கூறி­யுள்­ளது. அத்­து­டன் தொகுதி பங்­கீடு குறித்து பேச்­சு­வார்த்தை நடத்த வேண்­டும் என்­றும் கூறி­யுள்­ளது. இந்த கட்­சி­யின் செயல் தலை­வர் நாக­மணி, பார­திய ஜனதா, தங்­கள் கட்­சியை ராஷ்­டி­ரிய ஜனதா தளம், காங்­கி­ரஸ் கட்­சி­க­ளின் மகா கூட்­ட­ணியை நோக்கி தள்­ளு­வ­தாக குறை கூறி­யுள்­ளார். பா.ஜ., தங்­கள் கட்­சிக்கு போதிய மரி­யாதை கொடுக்­கா­விட்­டால், நாங்­கள் எந்த கட்­சி­யு­ட­னும் பேச்­சு­வார்த்தை நடத்­து­வோம் என்­றும் கூறி­யுள்­ளார். ரீ டிப் டாட் காம் இணை­ய­தள நிரு­பர் உத்­கார்ஸ் மிஸ்­ரா­வுக்கு ராஷ்­டி­ரிய லோக் சமந்தா கட்சி செயல் தலை­வர் நாக­மணி கொடுத்த பேட்­டி­யின் தமி­ழாக்­கம்.

கேள்வி: பா.ஜ., உங்­கள் கட்­சியை மகா கூட்­ட­ணியை நோக்கி தள்­ளு­கி­றது என்று ஏன் கூறு­கின்­றீர்­கள்?

பதில்: நாங்­க­ளும், பார­திய ஜன­தா­வும் கூட்­டணி கட்­சி­கள். பா.ஜ.,எங்­களை கூட்­டணி கட்சி போல் நடத்த வேண்­டும். நாங்­கள் பா.ஜ.,வின் அடி­மை­கள் அல்ல. அவர்­கள் எதை கூறி­னா­லும், நாங்­கள் அதை ஏற்­றுக் கொள்ள, அவர்­கள் எங்­க­ளது எஜ­மா­னர்­கள் அல்ல. பா.ஜ. எங்­களை சம­மாக பாவித்து பேச்சு வார்த்தை நடத்த வேண்­டும். கட்­சி­க­ளின் பலத்தை பொருத்து தொகு­தி­கள் ஒதுக்­கப்­பட வேண்­டும். நிதிஷ் குமா­ருக்கு, அவர் சார்ந்த கும்கி ஜாதி­யி­ன­ரின் வாக்­கு­கள் ௧.௫ சத­வி­கி­தம் மட்­டுமே உள்­ளது. ஆனால் எங்­க­ளுக்கு ௧௦ சத­வி­கித வாக்­கு­கள் பல­மாக உள்­ளது. அவர்­கள் (பா.ஜ.,) நிதிஷ் குமா­ருக்கு ௧௫ முதல் ௧௭ தொகு­தி­கள் வரை கொடுக்­க­வும், எங்­க­ளுக்கு ௨ அல்­லது ௩ தொகு­தி­கள் வரை கொடுப்­ப­தாக பேச்சு அடி­ப­டு­கி­றது. இது ஏற்­றுக் கொள்­ளக்­கூ­டி­யதா? தொகுதி ஒதுக்­கீடு பற்றி முறை­யாக விவா­தித்து, கட்­சி­க­ளின் பலத்­தின் அடிப்­ப­டை­யில் தொகு­தி­கள் ஒதுக்­கப்­பட வேண்­டும். அவர்­கள் இதை செய்­ய­வில்லை எனில், எங்­கள் கட்சி வேறு எந்த கட்­சி­யு­ட­னும் பேச்சு வார்த்தை நடத்­தும்.

கேள்வி: இது போன்ற கூட்­டணி ஏற்­பட்­டால், நீங்­கள் உபேந்­திர குஸ்­வ­காவை முத­ல­மைச்­சர் வேட்­பா­ள­ராக அறி­விக்க வேண்­டும் என்று கூறு­கின்­றீர்­களே?

பதில்: இது எங்­கள் கட்­சி­யின் விருப்­பம். பீகா­ரில் பல ஜாதி­யைச் சேர்ந்­த­வர்­கள் முத­ல­மைச்­ச­ராக இருந்­துள்­ள­னர். ஏன் குஸ்­வகா ஜாதி­யைச் சேர்ந்­த­வர் முத­ல­மைச்­ச­ராக இருக்க கூடாது. முஸ்­லீம்­கள், யாதவ்­கள் வாக்­கு­க­ளுக்கு பிறகு, பீகா­ரில் குஸ்­வாகா ஜாதி­யி­ன­ரின்  வாக்­கு­கள் ௧௦ சத­வி­கி­தம் வரை உள்­ளது. இதுவே உபேந்­திர குஸ்­வ­காவை முத­ல­மைச்­சர் ஆக்க கேட்­ப­தற்கு ஒரு கார­ணம். இரண்­டா­வ­தாக உபேந்­திர குஸ்­வாகா மீது எந்த குற்­றச்­சாட்­டும் இல்லை. இத­னால் தான் எங்­கள் கட்சி உபேந்­திரா குஸ்­காவை முத­ல­மைச்­சர் வேட்­பா­ள­ராக அறி­வித்­தால், தேசிய ஜன­நா­யக கூட்­டணி, பீகா­ரில் உள்ள பெரும்­பான்­மை­யான லோக்­சபா தொகு­தி­க­ளில் வெற்றி பெறும். அப்­படி செய்­ய­வில்லை எனில், தேசிய ஜன­நா­யக கூட்­டணி படு தோல்வி அடை­வதை யாரா­லும் தடுக்க முடி­யாது.

எங்­க­ளி­டம் உள்ள வாக்­கு­கள் வெற்றி, தோல்­வியை நிர்­ண­யிக்­கும் வாக்­கு­கள். இது தேசிய ஜன­நா­யக கூட்­ட­ணிக்கு கிடைத்­தால், இந்த கூட்­ட­ணி­யின் கை ஓங்­கும். அவ்­வாறு அல்­லாது காங்­கி­ரஸ் தலை­மை­யி­லான ஐக்­கிய முற்­போக்கு கூட்­ட­ணிக்கு, எங்­கள் வாக்­கு­கள் கிடைத்­தால், அவர்­க­ளின் கை ஓங்­கும். இதுவே இரண்டு கூட்­ட­ணி­க­ளும், எங்­கள் கட்சி அவர்­கள் கூட்­ட­ணி­யில் இருக்க வேண்­டும் என்று விரும்­பு­வ­தற்கு கார­ணம். பத்­தி­ரிகை, ஊட­கங்­க­ளில் நிதிஷ் குமார் கட்­சிக்கு ௧௫ முதல் ௧௭ தொகு­தி­க­ளும், எங்­க­ளுக்கு ௨ முதல் ௩ தொகு­தி­கள் வரை கிடைக்­கும் என்று செய்தி வந்­துள்­ளது. இது நியா­யமா? பா.ஜ., நிதிஷ் குமாரை பார்த்து பயப்­ப­டு­கி­றதா அல்­லது நிதிஷ் குமார் கூறு­வது போல் பா.ஜ.,கேட்­கின்­றதா?

கேள்வி: உங்­கள் கட்­சி­யின் கருத்­துப்­படி எந்த விகி­தாச்­சா­ரத்­தில் தொகு­தி­கள் ஒதுக்­கப்­பட வேண்­டும்? எந்­தெந்த கட்­சிக்கு எத்­தனை தொகு­தி­கள் ஒதுக்­கப்­பட வேண்­டும்?

பதில்: இது பற்றி விவா­திக்க வேண்­டும். நாங்­கள் இதை ஊட­கங்­கள் மூலம் பேச விரும்­ப­வில்லை. நான் கூறு­வது என்­ன­வெ­னில், கட்­சி­க­ளின் பலத்­தின் அடிப்­ப­டை­யி­லும், மக்­க­ளி­டம் உள்ள செல்­வாக்கு அடிப்­ப­டை­யி­லும் தொகு­தி­கள் ஒதுக்­கப்­பட வேண்­டும். எங்­க­ளுக்கு மக்­க­ளி­டம் செல்­வாக்கு இல்லை எனில், ஏன் ராஷ்­டி­ரிய ஜனதா தளம் எங்­களை அவர்­கள் பக்­கம் இழுக்க வேண்­டும். அவர்­கள் இழுப்­ப­தற்கு கார­ணம், எங்­க­ளுக்கு செல்­வாக்கு இருப்­பதே. எங்­க­ளுக்கு உள்ள செல்­வாக்கை பா.ஜ., புரிந்து கொள்­ள­வில்லை. இந்த நில­மைக்கு கார­ணம் பிரா­காஷ் கிஷோர். தற்­போது ஐக்­கிய ஜனதா தளத்­தில் இணைந்­துள்­ளார்.  இவர் நரேந்­திர மோடிக்­கும், அமித் ஷாவுக்­கும் நெருக்­க­மா­ன­வ­ராக கரு­தப்­ப­டு­கி­றார். ஐக்­கிய ஜனதா தளத்­தின் பக்­கம் பா.ஜ., சாய்­கி­றது. எங்­கள் கட்­சியை புறக்­க­ணிக்­கி­றது. லோக்­சபா தொகுதி பங்­கீடு கட்­சி­க­ளின் செல்­வாக்கு அடிப்­ப­டை­யில் ஒதுக்­கப்­பட வேண்­டும் என்று கூறு­கின்­றேன்.

கேள்வி: உங்­கள் கட்­சிக்கு உள்ள எம்.எல்.ஏ.,க்களை விட ஐக்­கிய ஜனதா தளத்­திற்கு அதிக எம்.எல்.ஏ.,க்கள் உள்­ள­னரே? இது நீங்­கள் அதிக தொகு­தி­களை கேட்­ப­தற்கு தடை­யாக இருக்­காதா?

பதில்: ௨௦­௧௫ சட்­ட­சபை தேர்­த­லில் பெற்ற வெற்­றிக்கு கார­ணம் நிதிஷ் குமார் அல்­லது லாலு பிர­சாத் யாதவ் அல்ல. ஆர்.எஸ்.எஸ் தலை­வர் மோகன் பகத், இட ஒதுக்­கீடு கொள்கை மறு­ப­ரி­சீ­லனை செய்ய வேண்­டும் என்று கூறி­னார். இதை லாலு பிர­சாத் யாதவ் பெரிய பிரச்­னை­யாக மாற்­றி­னார். பிற்­ப­டுத்­தப்­பட்ட வகுப்­பி­ன­ரும், தலித்­து­க­ளும் பா.ஜ., ஆட்­சிக்கு வந்­தால் இட­ஒ­துக்­கீடு முடி­வுக்கு வந்து விடும் என்று கரு­தி­னர். முஸ்­லீம்­கள் ஏற்­க­னவே பா.ஜ.,வுக்கு வாக்­க­ளிப்­ப­தில்லை என்று முடிவு செய்­தி­ருந்­த­னர்.

 இத­னால் தலித்­து­கள், பிற்­ப­டுத்­தப்­பட்­டோர், முஸ்­லீம்­க­ளின் வாக்­கு­கள் ஒன்று சேரும் போது, உயர்­ஜா­தி­யி­ன­ரின் பத்து சத­வி­கித வாக்­கு­க­ளால் என்ன லாபம் கிடைக்­கும். எனவே அந்த வெற்றி தலித், முஸ்­லீம்­கள், பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் ஆகி­ய­வர்­க­ளின் வாக்­கு­கள் ஒன்று சேர்ந்­த­தால் கிடைத்த வெற்றி. நிதிஷ் குமா­ராலோ அல்­லது லாலு பிர­சாத் யாதவ்க்கோ கிடைத்த வெற்றி அல்ல. லாலு பிர­சாத் யாதவ்­விற்கு மக்­கள் செல்­வாக்கு உள்­ளது. ஆனால் நிதிஷ் குமா­ருக்கு ௧.௫ சத­வி­கித கும்கி ஜாதி­யி­னர் வாக்­கு­கள் மட்­டுமே உள்­ளது. அவ­ருக்கு எங்­களை பற்றி பேசு­வ­தற்கு அதி­கா­ர­மில்லை. இந்த முறை இதை பா.ஜ., சரி­யாக புரிந்து கொள்­ளா­விட்­டால், நிதிஷ் குமா­ரால் இழப்பே ஏற்­ப­டும்.

கேள்வி: பீகா­ரில் சட்­டம்–­­ஒ­ழுங்கு நிலைமை பற்றி உங்­கள் கருத்து என்ன?

பதில்: நான் ஏற்­க­னவே முத­ல­மைச்­சர் நிதிஷ் குமார் பைத்­தி­யக்­க­ரத்­த­ன­மாக நடந்து கொள்­கின்­றார் என்று கூறி­யுள்­ளேன். பீகா­ரில் சட்­டம்–­­ஒ­ழுங்கு இல்லை. பட்­டப்­ப­க­லில் கொலை நடக்­கா­மல் ஒரு நாளும் இருந்­த­தில்லை. தைரி­ய­மா­ன­வர் மட்­டுமே நிர்­வா­கத்தை நடத்த முடி­யும். நிதிஷ் குமார் தைரி­யத்­தை­யும், மரி­யா­தை­யை­யும் இழந்­து­விட்­டார். ஏனெ­னில் அவ­ருக்கு மக்­கள் ஆத­ரவு இல்லை. லாலு பிர­சாத் முத­ல­மைச்­ச­ராக இருக்­கும் போது, கல­வ­ரம் நடத்த திட்­ட­மிட்டு இருப்­ப­தாக செய்­தி­கள் வெளி­யா­யின. அப்­போது  அவர் கல­வ­ரம் செய்ய திட்­ட­மி­டு­ப­வர்­களை அடக்­கு­வேன் என்று கூறி­னார்.

யாரும் கல­வ­ரம் செய்ய துணி­ய­வில்லை. இதில் இருந்து தெரி­வது என்­ன­வெ­னில் முத­ல­மைச்­சர் தைரி­ய­மா­ன­வ­ராக இருக்க வேண்­டும். நிதிஷ் குமா­ரைப் போல் பல­வீ­ன­வ­ராக இருக்­கக் கூடாது. துணை முதல்­வர் சுசில் குமார் மோடி, கிரி­மி­னல்­க­ளி­டம் குற்­றச் செயல்­க­ளில் ஈடு­ப­டா­தீர்­கள் என்று கையெ­டுத்து கும்­பிட்டு கேட்­டுக் கொள்­வ­தாக கூறு­கின்­றார்.  திரு­டர்­கள் இது போன்ற வேண்­டு­கோள்­க­ளுக்கு செவி­ம­டுப்­பார்­களா என்று கூறுங்­கள். அவர்­களை அடக்க வேண்­டும், வேண்­டு­ கோள் விடுக்­க­கூ­டாது. இது அரசு நிர்­வா­கத்­தின் தவறு. அவ்­வாறு செய்ய கூடாது என்றார்.

பங்­கீடு முடி­ய­வில்லை

பீகா­ரில் லோக்­சபா தொகுதி பங்­கீடு தொடர்­பாக சென்ற மாதம் ௨௨ ம் தேதி வெளி­யான செய்­தி­யில் மொத்­த­முள்ள ௪௦ தொகு­தி­க­ளில் பா.ஜ.,வுக்கு ௧௭, ஐக்­கிய ஜனதா தளத்­திற்கு ௧௬, ராம்­வி­லாஸ் பஸ்­வான் தலை­மை­யி­லான லோக் ஜன­சக்தி கட்­சிக்கு ௫, ராஷ்­டி­ரிய லோக் சமந்தா கட்­சிக்கு ௨ தொகு­தி­கள் ஒதுக்­கப்­ப­டும் என்று செய்­தி­கள் வெளி­யா­யின. ஆனால் பா.ஜ.,வும் ராஷ்­டி­ரிய லோக்­ச­மந்தா கட்­சி­யும் தொகுதி பங்­கீடு குறித்து வந்த செய்­தியை மறுத்­தன. ராம்­வி­லாஸ் பஸ்­வா­னின் தம்­பி­யும், மாநில கட்சி தலை­வ­ரு­மான பசு­பதி குமார் பராஸ், தேசிய ஜன­நா­யக கூட்­டணி கட்­சி­க­ளுக்கு இடையே தொகுதி பங்­கீடு முடி­ய­வில்லை. ஆனால் நாங்­கள் சென்ற தேர்­த­லில் போட்­டி­யிட்ட ஏழு தொகு­தி­க­ளுக்­கும் குறை­வாக ஏற்­றுக் கொள்ள மாட்­டோம். அத்­து­டன் எங்­கள் கட்­சி­யின் செல்­வாக்கு அண்டை மாநி­லங்­க­ளான ஜார்­கண்ட், உத்­த­ர­பி­ர­தே­சத்­தி­லும் விரி­வ­டைந்­துள்­ளது. அந்த மாநி­லங்­க­ளி­லும் தொகு­தி­களை எதிர்­பார்க்­கின்­றோம் என்று கூறி­யி­ருந்­தார்.

அவர் மேலும் கூறு­கை­யில், தொகுதி பங்­கீடு குறித்த பேச்­சு­வார்த்தை நவம்­பர் மாதம் நடு­வில் சாட் பூஜைக்கு பிறகே தொடங்­கும். டிசம்­ப­ரில் தொகுதி பங்­கீடு முடி­வுக்கு வரும் என்­றும் கூறி­யி­ருந்­தார்.  ௨௦­௧­௪ல் நடை­பெற்ற லோக்­சபா தேர்­த­லில் தேசிய ஜன­நா­யக கூட்­ட­ணி­யில் இடம் பெற்று இருந்த பா.ஜ., ௩௦ தொகு­தி­க­ளில் போட்­டி­யிட்டு ௨௨ தொகு­தி­க­ளில் வெற்றி பெற்­றது. லோக் ஜன­சக்தி ௭ தொகு­தி­க­ளில் போட்­டி­யிட்டு ௬ தொகு­தி­க­ளில் வெற்றி பெற்­றது. ராஷ்­டி­ரிய லோக் சமந்தா கட்சி ௩ தொகு­தி­க­ளில் போட்­டி­யிட்டு மூன்று தொகு­தி­க­ளி­லும் வெற்றி பெற்­றது.