துரை கருணா எழுதும் ‘கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்..!’ – 1

பதிவு செய்த நாள் : 03 நவம்பர் 2018

கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்..!

‘‘பழை­யன கழி­த­லும்

புதி­யன புகு­த­லும்

வழு­வன கால 

வகை­யி­னாலே’’ – என்று சொல்­லப்­பட்­டா­லும், பழைய பண்­பாடு, கலாச்­சா­ரம், நாக­ரி­கம், அர­சி­யல் – நடை­முறை, வாழ்­வி­யல் நெறி­முறை ஆன்­றோர் – சான்­றோர்­க­ளின் அரும் பெரும் கருத்­துக்­கள், முக்­கிய வர­லாற்று நிகழ்­வு­கள் ஆகி­ய­வற்றை மீட்­டு­ரு­வாக்­கம் செய்­வது, அவற்றை கொஞ்­சம் திரும்பி பார்ப்­பது, நம்மை செம்­மைப்­ப­டுத்­திக் கொள்ள, மேலும் செழு­மைப்­ப­டுத்­திக் கொள்ள உத­வும் என்ற நோக்­கத்­தி­லேயே இந்த புதிய தொடர் பய­ணப்­ப­டு­கி­றது. நல்­ல­வற்றை நாடித் தேடி வாசிக்­கும் ‘தின­ம­லர்’ வாச­கர்­கள் இந்த தொட­ருக்­கும் தங்­க­ளின் பேரா­த­ரவை  நல்­கு­வார்­கள் என நம்­பு­கி­றோம்.

உயி­ரோட்­டம் ததும்­பும் கட­வுள்

இரா­ம­கி­ருஷ்ண பர­ம­ஹம்­ச­ரின் சிறப்­பு­கள், அவ­ரது பெரு­மை­கள் – குறித்து 1924ம் ஆண்டு அண்­ணல் மகாத்மா காந்தி அடி­கள் சில கருத்­துக்­க­ளைத்  தெரி­வித்­துள்­ளார்.

அதை இப்­போது காண்­போம் : ‘‘ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்­ச­ரின் வாழ்க்கை வர­லாறு,  பரம்­பொ­ருளை நேரா­கக் காண்­ப­தற்­கு­ரிய பயிற்­சி­யின் வர­லாறு. அவ­ரு­டைய வாழ்க்கை நம்­மைக் கட­வுளை நேருக்கு நேரா­கத் காணச் செய்­கி­றது, அவ­ரு­டைய வாழ்க்கை வர­லாற்றை படிக்­கும் எவ­ருக்­கும் கட­வுள் மட்­டுமே உண்மை; மற்­ற­வை­யெல்­லாம் பொய் என்­னும் நம்­பிக்கை ஏற்­ப­டா­மல் போகாது. ஸ்ரீராம கிருஷ்­ண­ரின் உப­தே­சங்­கள் வெறும் சாஸ்­தி­ரங்­களை படித்­த­வர்­க­ளின் உப­தே­சங்­கள் அல்ல. அவை அனு­ப­வம் என்­னும் புத்­த­கத்­தின் ஏடு­கள், அவ­ரு­டைய சொந்த வாழ்க்­கை­யின் அனு­ப­வங்­கள் எனவே, அவை­கள் படிப்­ப­வ­ரின் மனத்­தில் அழிக்க முடி­யாத முத்­தி­ரையை பதிக்­கின்­றன. எதை­யும் சந்­தே­கக் கண்­கொண்டு பார்க்­கும் இந்த காலத்­தில் ஸ்ரீ ராம­கி­ருஷ்­ணர், ஒளி­ம­ய­மான உயி­ரோட்­டம் ததும்­பும் கட­வுள் நம்­பிக்­கைக்கு உதா­ர­ண­மாக விளங்­கு­கி­றார். அவர் இல்­லை­யென்­றால் ஆயி­ரக்­க­ணக்­கான ஆண்­க­ளும், பெண்­க­ளும் ஆன்­மிக ஒளி­யின்றி வேத­னை­யில் வாடிக் கிடப்­பார்­கள். ஸ்ரீ ராம­கி­ருஷ்­ண­ரு­டைய வாழ்க்கை அகிம்சை வாழ்­வின் சிறந்த எடுத்­துக் காட்­டா­கும்.

பரத கண்­டம் ஒரு பார்வை :

1940ம் ஆண்டு, ‘இந்­தி­யா­வும் விடு­த­லை­யும்’ எனும் தலைப்­பில் நூல் ஒன்றை எழுதி வெளி­யிட்ட, முது­பெ­ரும் தமி­ழ­றி­ஞர் மறைந்த திரு.வி. கலி­யாண சுந்­த­ர­னார் எனும் ‘திரு.வி.க’ வெளி­யிட்ட நம் ‘பரத கண்­டம்’ குறித்த வர­லாற்­றுப் பார்வை இது’.

‘‘இந்­தி­யா­வின் பழைய பெயர்­கள் இரண்டு. அவை நாவ­லந்­தீவு, பரத கண்­டம் என்­பன. நாவ­லந்­தீவு என்ற பெய­ருக்­குப் பின்னே இந்­தியா பரத கண்­டம் என்ற பெய­ரால் அழைக்­கப்­பட்­டது. பரத கண்­டம் பர­த­னால் ஆளப்­பட்ட கண்­டம். அப்­ப­ர­தன் எவன்? சகுந்­த­லா­வுக்­கும் துஷ்­யந்­த­னுக்­கும் பிறந்த பர­தன் என்று சில நூல்­கள் சொல்­கின்­றன. ஜைனத்­தின் தொல்­லா­சி­ரி­ய­ரா­கிய விரு­ஷப தேவ­ரின் மைந்­தன் பர­தன் என்று சில நூல்­கள் சொல்­கின்­றன.

பர­தன் அவ­னா­யி­னு­மாக; இவ­னா­யி­னு­மாக; வேறு எவ­னா­யி­னு­மாக, பர­த­னால் ஆளப்­பட்ட கார­ணத்­தால் நாவ­லந்­தீவு பின்னே பர­த­கண்­டம் என்ற பெயர் பெற்­ற­தென்க. பர­த­கண்­டம் பல நூல்­க­ளில் பேசப்­ப­டு­வது; சரித்­திர சம்­பந்­தம் உடை­யது கண்­டம் என்­பது நாட்­டின் ஒரு­மைப்­பாட்டை உணர்த்­து­வது.

இந்­நா­ளில் பரத கண்­டம் இந்­தியா என்று அழைக்­கப்­ப­டு­கி­றது. இந்­தியா எனும் பெயர் அய­ல­வர் அழைப்­பி­னின்­றும் பிறந்­தது. பார­சீ­கர், சிந்து நதிக்­க­ரை­யி­லி­ருந்­த­வர்­களை சிந்­துக்­க­ளென்­ற­ழைக்க முயன்­ற­னர். அவர்­தம்  நா, ‘சிந்­துக்­கள்’ என்று உச்­ச­ரிக்க இய­லாது, ‘ஹிந்­துக்­கள்’ என்று உச்­ச­ரித்­தது. அப்­பெ­ய­ரையே பர­த­கண்­டம் போந்த (புகுந்த) கிரேக்­கர் முத­லி­ய­வ­ரும் ஆண்­ட­னர். நாள­டை­வில் ஹிந்­துக்­கள் – இந்­துக்­கள் என்று மரு­வ­லா­யிற்று. இந்து வாழும் நாடு இந்­தியா என்று அழைக்­கப்­பட்­டது.

இப்­பொ­ழுது ஹிந்­துக்­கள் என்­னும் பெய­ரும், இந்­தி­யர் என்­னும் பெய­ரும் ஒரு பொருளை குறிக்­கொண்டு நிற்­க­வில்லை. ஹிந்­துக்­கள் என்­பது இந்­தி­யா­வில் வாழும் ஒரு சய­மத்­த­வரை உணர்த்தி நிற்­கி­றது; இந்­தி­யர் என்­பது பொது­வாக நாட்­ட­வ­ரைக் குறித்து நிற்­கி­றது.

இந்­திய ஆட்­சி­முறை

சிறந்த தேச­பக்­த­ரும், காந்­தி­யப் பற்­றா­ள­ரு­மான ஸ்ரீமந் நாரா­யண அகர்­வால், ஆங்­கி­லத்­தில் எழு­திய ‘‘காந்­திய அர­சி­யல்’’ எனும் நூலை நாமக்­கல் கவி­ஞர் வெ.ராம­லிங்­கம் பிள்ளை தமி­ழில் மொழி­பெ­யர்த்­துள்­ளார். 1946–ம் ஆண்டு வெளி­யான அந்­நூ­லின் அறி­முக உரை­யில், இந்­திய ஆட்­சி­முறை குறித்து நாரா­யண அகர்­வால் எழு­தி­யுள்­ளதை பார்ப்­போம்:–

‘‘இந்­தியா ஒரு வெகு புரா­த­ன­மான நாடு. அதன் சரித்­தி­ரத்­தில் காணப்­ப­டு­கிற பழைய அர­சி­யல் முறை­களை கவ­னித்­தால், கிறிஸ்து பிறப்­ப­தற்கு பல ஆண்­டு­க­ளுக்கு முன்­னா­லேயே, ஏறத்­தாழ இப்­போது நாம் எண்­ணக்­கூ­டிய எல்­லா­வித அர­சாட்சி முறை­க­ளை­யும் இந்­தியா அனு­ப­வித்­தி­ருக்­கிற அறி­கு­றி­கள் தெரி­கின்­றன.

ஐரோப்­பா­வும், அமெ­ரிக்­கா­வும் நாக­ரி­கம் என்­ப­தன் எல்­லையை எட்­டிக் கூடப் பார்க்­கா­தி­ருந்த காலத்­தி­லேயே இந்­திய தேசம் முடி மன்­னர் ஆட்சி, யதேச் சாதி­கா­ரம், ஜன­நா­ய­கம், அர­ச­னில்லா பொது – ஜனத்­த­லை­வர்­க­ளின் ஆட்சி என்று சொல்­லத்­தக்க எல்­லா­வித ஆட்சி முறை­க­ளை­யும் கையாண்டு பரீட்சை செய்து முடித்­தி­ருக்­கி­ற­தாக அறி­கி­றோம்.

கே.பி. ஜெய்ஸ்­வால் என்­ப­வர் தாம் எழு­தி­யுள்ள ‘ஹிந்­துக்­க­ளின் அர­சு­முறை’ – என்ற புத்­த­கத்­தில் ‘பவுஜ்யா’ (வெறும்  சுக­போ­கங்­க­ளை­யும் பிர­ஜை­ன­க­ளை­யும் காப்­பது) ‘ஸ்வராஜ்யா’ (அங்­கங்கே அவ­ர­வர் ஆட்சி) ‘வைராஜ்ய ராஷ்ட்­ரிகா’ (அன்­னி­யர் ஆதிக்­கம்)  ‘த்வைராஜ்யா’ (அர­ச­னும் குடி­க­ளு­மான இரட்டை ஆட்சி) ‘அரா­ஜகா’ (சரி­யான அர­சில்­லாத குழப்­பம்) என்று பல­வித அரசு முறை­கள் புரா­தன இந்­தி­யா­வில் இருந்­த­தாக சொல்­லு­கி­றார். இவற்­றில் சில முறை­கள், இந்­தி­யா­வைத் தவிர வேறு நாடு­க­ளில் அனுஷ்­டிக்­கப் பட்­ட­தில்­லை­யென தோன்­று­கி­றது. ஆகை­யி­னால், இந்­தியா பழைய காலத்­தி­லி­ருந்து பல­வி­த­மான அர­சி­யல் முறை­க­ளின் உற்­பத்தி சாலை­யாக இருந்­தி­ருப்­ப­தாக கொள்­ள­லாம். ஆகை­யி­னால், இன்­னும் குழம்­பிக் கொண்டே தெளி­வ­டை­யா­மல் இருக்­கிற மேல்­நாட்டு அர­சி­யல் முறை­களை கலந்த ஒரு அர­சி­யல் அமைப்பை இந்­தி­யா­வுக்கு தயார் செய்­வது இந்த நாட்டை அவ­ம­திப்­பது மட்­டு­மல்­லா­மல், மனித வர்­கத்­தின் சமூக சமு­தாய வளர்ச்­சி­யின் சாஸ்­தி­ரத்­தைச் சிறி­தும் அறி­யா­மை­யும் ஆகும். ஏனெ­னில், அர­சி­யல் அமைப்­பு­க­ளெல்­லாம் சமூக அமைப்­பி­லி­ருந்தே வள­ர­வேண்­டிய விஷ­யங்­கள்; ஒரு நாட்­டின் சொந்த உணர்ச்­சி­க­ளுக்கு அன்­னி­ய­மான ஆட்சி முறையை அதில் திணிக்க முயல்­வது சரி­யல்ல. அர­சி­யல் முறை­களை ஒரு மண்­ணி­லி­ருந்து பிடுங்கி இன்­னொரு மண்­ணில் நட­மு­டி­யாது. அப்­படி பிடுங்கி நட முயல்­வ­தும் பிழை.

சிப்­பாய்ப் புரட்­சி­யும் தமி­ழ­க­மும் :

வட­நாட்­டில் 1857ம் ஆண்டு நடை­பெற்ற சிப்­பாய்ப் புரட்­சி­யில் தமி­ழ­கம் உள்­ளிட்ட தென்­மா­நி­லத்­த­வர் பங்­கேற்­கா­தது குறித்து சிலம்பு செல்­வர் ம.பொ. சிவ­ஞா­னம் எழுதி வெளி­யிட்ட ‘விடு­த­லைப் போரில் தமி­ழ­கம்’ எனும் நூலில் தெளி­வு­ப­டுத்­தி­யுள்­ளதை பார்ப்­போம் :–

‘வட புலத்­தில் நடந்த சிப்­பாய் புரட்சி தோல்­வி­யுற்­ற­தற்கு, தமிழ்­நாடு உள்­ளிட்ட தென்­பா­ர­தம் அதில் கலந்து கொள்­ளா­த­து­தான் கார­ணம் என்று சொல்­வது தென்­னிந்­திய மக்­களை அவ­ம­திப்­ப­தா­கும். தென்­னிந்­தியா அதில் கலந்து கொள்­ளா­த­தற்கு கார­ணம் பிரிட்­டிஷ் விசு­வா­சத்­தோடு கூடிய அடிமை புத்­தி­யல்ல. வட­பு­லத்­தில் சிப்­பாய்ப் புரட்சி தோன்­று­வ­தற்கு அரை நூற்­றாண்­டு­க­ளுக்கு முன்பே, தென்­பா­ர­தத்­தில் ஹைதர்­அலி, திப்­பு­சுல்­தான், வீர­பாண்­டிய கட்­ட­பொம்­மன், ஊமைத்­துரை, மருது சகோ­தா­ரர், வேலூர் சிப்­பாய்­கள், தள­வாய் வேலுத்­தம்பி, கர்­நா­டக கிட்­டூர்­ராணி சென்­னம்­மாள் ஆகி­யோர் நடத்­திய புரட்­சி­கள் தோல்­வி­யுற்­ற­மை­யால் சிப்­பாய் புரட்­சி­யின் போது தென்­னாடு ஓய்ந்து போயி­ருந்­தது.

தென்­பா­ர­தம் வெள்­ளை­யரை எதிர்த்­துப் போரிட்­ட­போது, வட­பா­ர­தத்து மக்­க­ளும், மன்­னர்­க­ளும் தங்­கள் பங்­கைச் செய்ய முன் வந்­தி­ருந்­தால், 1857ல் நடந்த சிப்­பாய்ப் புரட்சி தேவைப்­ப­டா­மலே பார­தப் பெரு­நாடு சுதந்­தி­ரம் பெற்­றி­ருக்­கும் என்று நாமும்

சொல்­ல­லாம்.                 – தொடரும்