உப்பளங்களில் சோலார் பம்ப்: டீசல் செலவு மிச்சம்

பதிவு செய்த நாள் : 03 நவம்பர் 2018

குஜ­ராத்­தில் உள்ள கட்ச் மாவட்­டத்­தில் உள்ள லிட்­டில் ரான் பகு­தி­யில் அமைந்­துள்ள உப்­ப­ளத்­தில், விஜி பென் தனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் வேலை செய்து வரு­கி­றார். ௫௧ வயது நிரம்­பிய விஜி பென், இது வரை அந்த பாலை­வ­னம் போன்ற பகு­தி­யில் கிடைக்­கும் சூரிய ஒளியை தண்­ணீர் இறைக்­க­வும் பயன்­ப­டுத்­த­லாம் என்று அறிந்­தி­ருக்­க­வில்லை. அவர் மட்­டு­மல்ல அந்த பகு­தி­யில் உப்­ப­ளங்­க­ளில் வேலை செய்­யும் மற்­ற­வர்­க­ளும் கூட, சூரிய ஒளியை பயன்­ப­டுத்­து­வதை பற்றி அறிந்­தி­ருக்­க­வில்லை. சில வரு­டங்­க­ளுக்கு முன், இங்கு சூரிய ஒளி­யில் இயங்­கும் பம்ப் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. இந்­தி­யா­வின் உப்பு உற்­பத்­தி­யில் ௭௦ சத­வி­கி­தம் லிட்­டல் ரான் பகு­தி­யில் உற்­பத்­தி­யா­கி­றது.

இங்கு அகா­ரியா என்ற ஜாதி­யைச் சேர்ந்த ௩௦ ஆயி­ரம் குடும்­பங்­கள் உப்பு உற்­பத்­தி­யில் ஈடு­பட்­டுள்­ளன. அதில் விஜி பென்­னும் அடக்­கம். இந்த ரான் பகுதி சில நூற்­றாண்­டு­கள் வரை கட­லாக இருந்­தது. நில நடுக்­கம் ஏற்­பட்­ட­தால் கடல் உள்­வாங்கி நிலப்­ப­குதி மேலே எழுந்­தது. இத­னால் வறண்ட பாலை­வ­னம் போன்ற நிலப்­ப­ரப்பு அர­பிக் கடல் வரை பரந்து விரிந்­தது என்று நிபு­ணர்­கள் கூறு­கின்­ற­னர்.

மழை காலங்­க­ளில் இந்த பாலை­வ­னப்­ப­குதி கடல்­நீ­ரால் சூளப்­பட்­டு­வி­டும். அக்­டோ­பர் மாதம் கடல் உள்­வாங்­கும் போது, அகா­ரியா ஜாதி­யைச் சேர்ந்­த­வர்­கள் வேலை செய்ய தொடங்­கி­வி­டு­வார்­கள். அவர்­கள் செவ்­வக வடி­வி­லான உப்­ப­ளங்­க­ளில், உப்பு தண்­ணீரை பம்ப் மூலம் இறைத்து நிரப்­பு­வார்­கள். உப்பு தண்­ணீர் சூரிய உஷ்­ணத்­தால் நீர் ஆவி­யாகி படி­யும் உப்பை எடுப்­பார்­கள். இவ்­வாறு உப்பு உற்­பத்தி செய்­வார்­கள்.

இவர்­கள் சில ஆண்­டு­க­ளுக்கு முன்பு வரை உப்பு தண்­ணீரை இறைத்து உப்­ப­ளங்­க­லில் நிரப்ப டீச­லில் இயங்­கும் பம்பு செட்டை பயன்­ப­டுத்தி வந்­த­னர். இப்­போது டீச­லில் இயங்­கும் பம்­பு­க­ளுக்கு பதி­லாக சூரிய ஒளி­யில் இயங்­கும் சோலார் பம்­பு­களை பயன்­ப­டுத்­து­கின்­ற­னர். இத­னால் இவர்­க­ளுக்கு டீசல் செலவு குறை­கின்­றது. அத்­து­டன் சுற்­றுச்­சூ­ழல் மாசு­ப­டு­வ­தும் குறை­கின்­றது. உப்பு உற்­பத்­திக்­கான செலவு குறை­வ­தால், லாபம் அதி­க­ரித்­துள்­ளது. “சோலார் பம்ப் செட்­டு­கள் எங்­கள் வாழ்க்­கையை மாற்­றி­விட்­டது” என்று கூறு­கின்­றார் விஜி பென்.

உப்­ப­ளங்­க­ளில் உப்பு தண்­ணீரை நிரப்­பு­வது ஒரு நாள் வேலை மட்­டு­மல்ல. இதற்­காக டீசல் பம்ப் பயன்­ப­டுத்­து­வ­தால் அதி­கம் செல­வா­கின்­றது. ஒவ்­வொரு மாத­மும் ஒரு­வ­ருக்கு உப்பு தண்­ணீர் இறைத்து உப்­ப­ளங்­க­ளில் நிரப்ப ௧,௨௦௦ முதல் ௧,௩௦௦ லிட்­டர் டீசல் வரை தேவை. டீச­லின் விலை, அதை கொண்­டு­வ­ரு­தற்­கான போக்­கு­வ­ரத்து செலவு என கணக்­கிட்­டால், பெருந் தொகை செல­வா­கின்­றது.

அத்­து­டன் டீசல் பம்­பு­க­ளுக்கு ரிப்­பேர் செலவு, உணவு போன்ற அத்­தி­யா­வ­சிய செல­வு­கள் போக, எட்டு மாதம் உப்பு உற்­பத்­தி­யில் ஈடு­பட்­டால் எல்லா செல­வும் போக கடை­சி­யில் ரூ,௩௫ ஆயி­ரம் முதல் ரூ.௪௦ வரையே மிஞ்­சு­கி­றது. உப்பு உற்­பத்­தி­யில் ஈடு­ப­டும் பெரும்­பா­லான அகா­ரியா  தொழி­லா­ளர்­கள், ஆரம்­பத்­தி­லேயே முன்­ப­ணம் வாங்­கி­வி­டு­கின்­ற­னர்.

“இவர்­கள் வாங்­கிய கடன் (முன்­ப­ணம்) கொடுத்த பிறகு, எட்டு மாதம் கஷ்­டப்­பட்டு வேலை செய்­யும் கடை­சி­யாக கையில் மிஞ்­சு­வது எது­வும் இல்லை” என்று கூறு­கி­றார் தேவேஸ் ஷா. இவர் சேவா என்ற அழைக்­கப்­ப­டும் சுய தொழில் செய்­யும் பெண்­கள் சங்­கம் தொடங்­கி­யுள்ள லாப நோக்­க­மின்றி செயல்­ப­டும் கிராஸ்­ரூட் டிரே­டிங் நெட்­வோர்க் பார் உமன் என்ற தொண்டு நிறு­வ­னத்­தின் தலைமை செயல் அதி­காரி. இந்த தொண்டு நிறு­வ­னத்­தின் மூல­மாக உப்பு உற்­பத்­தி­யில் ஈடு­பட்­டுள்ள பெண்­க­ளுக்கு சோலார் பம்­பு­கள் வழங்­கப்­ப­டு­கின்­றன.

“நாங்­கள் இந்த சோலார் பம்­பு­களை அகா­ரியா பெண்­க­ளுக்கு கட­னில் வழங்­கு­கின்­றோம். இது அவர்­க­ளுக்கு சுற்­றுச்­சூ­ழல் பாதிப்பு இல்­லாத பம்­பு­களை வாங்கி பயன்­ப­டுத்தி, செலவை குறைக்க உத­வு­கி­றது” என்று தேவேஸ் ஷா தெரி­வித்­தார்.

௨௦­௧­௩ல் ‘கிராஸ்­ரூட் டிரே­டிங் நெட்­வோர்க் பார் உமன்’ என்ற தொண்டு நிறு­வ­னம் பரிட்­சார்த்­த­மாக ௧௦ அகா­ரியா குடும்­பங்­க­ளுக்கு சோலார் பம்­பு­களை வழங்­கி­யது. இதை ஒரு மாதம் பயன்­ப­டுத்­திய பிறகு, அகா­ரியா தொழி­லா­ளர்­கள் ௪௦௦ லிட்­டர் டீசல் செல­வ­ழித்து டீசல் பம்ப் பயன்­ப­டுத்தி செய்­யும் வேலையை சோலார் பம்­பு­கள் செய்­வதை உணர்ந்­த­னர். “இத­னால் அவர்­க­ளின் உற்­பத்தி செலவு குறை­வ­து­டன், டீச­லுக்கு செல­வ­ழிக்­கும் பணம் மீத­மா­கின்­றது” என்று தேவேஸ் ஷா தெரி­வித்­தார்.

உப்பு உற்­பத்­தி­யில் ஈடு­பட்­டுள்ள அகா­ரியா ஜாதி­யைச் சேர்ந்­த­வர்­க­ளுக்கு, டீசல் பம்­பு­க­ளுக்கு பதி­லாக சோலார் பம்­பு­கள் பயன்­ப­டுத்­து­வ­தால் பெரு­ம­ள­வில் செலவு குறை­வது பய­னுள்­ள­தாக இருந்­தது. ௨௦­௧௫, ௨௦­௧௬ ஆகிய வரு­டங்­க­ளில் தலா ௨௦௦ பேருக்கு சோலார் பம்­பு­கள் வழங்­கப்­பட்­டது. அதற்கு அடுத்த வரு­டம் ௨௦­௧­௭ல் ௭௦௦ பேருக்கு சோலாப் பம்­பு­கள் வழங்­கப்­பட்­டது.

இந்த சோலார் பம்பு அறி­மு­கம் செய்­யும் திட்­டம் வெற்றி பெறு­வ­தற்கு, டீசல் பம்பு செட்­டு­க­ளு­டன் ஒப்­பி­டும் போது இதன் விலை அதி­கம். இந்த பிரச்­னையை  தீர்க்க வேண்­டி­ய­தி­ருந்­தது என்று கூறு­கின்­றார் சேவா அமைப்­பின் மாவட்ட ஒருங்­கி­னைப்­பா­ளர் ஹீனா பென்.

ஒரு சோலாப் பம்­பின் விலை சுமார் ரூ.௧ லட்­சத்து ௮௦ ஆயி­ரம். இந்த அளவு எங்­க­ளி­டம் பணம் இல்லை என்று அகா­ரியா பெண்­கள் கூறி­னார்­கள். இவர்­க­ளுக்கு ஸ்ரீ மகிளா சேவா சகா­காரி வங்கி மூலம் கடன் வழங்­கு­வது என்று சேவா அமைப்­பும், கிராஸ்­ரூட் டிரே­டிங் நெட்­வோர்க் பார் உமன் ஆகிய தொண்டு நிறு­வ­னங்­கள் முடிவு செய்­தன. இந்த வங்கி சேவா அமைப்­பின் துணை நிறு­வ­னம். இவர்­க­ளுக்கு வழங்­கும் கடனை, உப்பு உற்­பத்தி செய்­யும் மாதங்­க­ளில் மட்­டும் திருப்பி செலுத்த ஏற்­பாடு செய்­தது.

சோலார் பம்ப் பயன்­ப­டுத்­து­வ­தால், உப்பு உற்­பத்­தி­யில் ஈடு­பட்­டுள்ள ஒரு பெண்­ணுக்கு மாதம் ரூ.௮ ஆயி­ரம் மிச்­சப்­ப­டு­கி­றது எனில், அவர் கடனை திருப்பி செலுத்­தும் தொகை ரூ.௬ ஆயி­ர­மாக நிர்­ண­யித்­த­னர். இத­னால் அந்த பெண்­ணுக்கு குடும்ப செல­வுக்கு ரூ.௨ ஆயி­ரம் கிடைத்­தது. இந்த கடன் திருப்பி செலுத்­தும் முறை நன்கு வேலை செய்தது. ஏனெ­னில் கடன் கொடுத்­தது போக, இவர்­க­ளுக்கு செல­வுக்கு பண­மும் கிடைக்­கின்­றது. இன்­டர்­நே­ஷ­னல் பைனான்ஸ் கார்ப்­ப­ரே­ஷன் போன்ற கடன் வழங்­கும் அமைப்­பும், அகா­ரியா பெண்­க­ளுக்கு கடன் கிடைப்­பது போல் சலுகை வழங்­கின.

அகா­ரியா பெண்­க­ளுக்கு உப்பு தர­மா­க­வும், அதிக அளவு உற்­பத்தி செய்­வ­தற்­கும் பயிற்சி அளிக்­கப்­பட்­டது. இத­னால் அவர்­கள் உற்­பத்தி செய்­யும் உப்­புக்கு அதிக விலை கிடைக்க பேரம் பேசும் சக்­தி­யும் கிடைத்­தது.            

சோலார் பம்பை பயன்­ப­டுத்­து­வ­தால், தனது வாழ்க்­கை­யில் மாற்­றம் ஏற்­பட்­டுள்­ளது என்று விஜி பென் மகிழ்ச்­சி­யாக உள்­ளார். “எனது மூன்று குழந்­தை­க­ளும் சோலார் பம்­பு­களை பயன்­ப­டுத்­து­கின்­ற­னர். இத­னால் அவர்­கள் பணம் மிச்­சப்­ப­டுத்த முடி­கின்­றது. எனது குழந்­தை­கள் தற்­போது அவர்­க­ளது குழந்­தை­களை பள்­ளிக்­கூ­டத்­திற்­கும் அனுப்­பு­கின்­ற­னர். முன்பு குழந்­தை­களை பள்­ளிக்கு அனுப்­பு­வது பற்றி நினைத்­து­கூட பார்க்க முடி­யாது. தொழில் நுட்­பம் வளர்ச்சி அடைந்­துள்­ளது. அத­னு­டன் நானும் இணைந்து பய­ணம் செய்­வது மகிழ்ச்­சி­யாக இருக்­கி­றது” என்று விஜி பென் கூறு­கின்­றார்.

கட்ச் மாவட்­டத்­தில் ரானா பகு­தி­யில் உப்பு உற்­பத்­தி­யில் ஈடு­பட்­டுள்ள அகா­ரியா பெண்­கள், உப்­ப­ளங்­க­ளில் டீசல் பம்­பிற்கு பதி­லாக சோலார் பம்­பு­களை பயன்­ப­டுத்தி பெண்­கள் பணத்தை மிச்­சப்­ப­டுத்­து­வ­து­டன், சூற்­றுச் சூழ­லை­யும் பாது­காக்­கின்­ற­னர்.

நன்றி: வில்­லேஜ் ஸ்கொயர் இணைய தளத்­தில் அஜிரா பிர­வீன் ரஹ்­மான்.