மும்பையில் வெஸ்ட்இண்டீஸ் புஸ்: ரோகித் சர்மா, ராயுடு சதம் விளாசல்

பதிவு செய்த நாள் : 29 அக்டோபர் 2018 23:27


மும்பை:

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா (162), அம்பதி ராயுடு (100) சதமடித்து கைகொடுக்க இந்தியா 224 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்துது. 378 ரன்னை சேஸ் செய்த ஹோல்டர் அன் கோ 1553 ரன்னில் சுருண்டது.

இந்­தியா வந்­துள்ள வெஸ்ட்­இண்­டீஸ் அணி 5 போட்­டி­கள் கொண்ட ஒரு­நாள் தொட­ரில் பங்­கேற்­கி­றது. முதல் மூன்று போட்டி முடி­வில் இரு அணி­க­ளும் தலா ஒரு வெற்றி பெற்று சம­நி­லை­யில் உள்­ளன. ஐத­ரா­பாத்­தில் நடந்த 2வது போட்டி ‘டை’யில் (சமன்) முடிந்­தது நினை­வி­ருக்­கும். இந்த நிலை­யில், 4வது போட்டி மும்­பை­யில் பக­லி­ரவு ஆட்­ட­மாக நேற்று நடந்­தது. இதில், நான்­கா­வது முறை­யாக ‘டாஸ்’ வென்ற இந்­திய கேப்­டன் விராத் கோஹ்லி முத­லில் ‘பேட்­டிங்கை’ தேர்வு செய்­தார். இந்­திய அணி­யில் இரண்டு மாற்­றங்­கள் செய்­யப்­பட்­டன. இளம் வீரர் ரிஷாப் பன்ட், சாகல் நீக்­கப்­பட்டு ஜடேஜா, கேதர் ஜாதவ் சேர்க்­கப்­பட்­ட­னர். அதே நேரம் வெஸ்ட்ண்­டீஸ் அணி­யில் மெக்­காய் இடத்­தில் கீமோ பால் கள­மி­றக்­கப்­பட்­டார்.
இந்­திய அணிக்கு ரோகித், தவான் இரு­வ­ரும் சிறப்­பான துவக்­கம் தந்­த­னர். கடந்த இரண்டு போட்­டி­யில் சொதப்­பிய ரோகித், தனது சொந்த மண்­ணில் அத்­தி­னார். இவ­ருக்கு தவான் கம்­பெனி கொடுக்க இந்­தியா எடுத்­த­வு­டன் ‘டாப் கிய­ரில்’ எகி­றி­யது. இந்த ஜோடி முதல் விக்­கெட்­டுக்கு 71 ரன் (11.5 ஓவர்) சேர்த்த நிலை­யில், கீமோ பால் பந்­தில் தவான் ஆட்­ட­மி­ழந்­தார். வழக்­கம் போல் சிறப்­பாக விளை­யா­டத் துவங்­கிய நிலை­யில், தவான் 38 ரன் (40 பந்து, 4 பவுண்­டரி, 2 சிக்­சர்) எடுத்து ஆட்­ட­மி­ழந்­தார். பலத்த கர­கோ­ஷத்­திற்கு இடையே ‘ஹாட்­ரிக்’ சதம் நாய­கன் விராத் கோஹ்லி களம் வந்­தார். வழக்­கம் போல் தனது ஆட்­டத்தை துவக்­கிய கோஹ்லி 17 பந்­தில் 16 ரன் எடுத்த நிலை­யில், ரோச் ‘அவுட் ஸ்விங்’­க­ரில் விக்­கெட்­கீப்­பர் ஹோப்­பி­டம் கேட்சி கொடுத்து ஆட்­ட­மி­ழக்க ரசி­கர்­கள் அதிர்ச்சி அடைந்­த­னர். இருந்­தும் இந்­தியா 16.2 ஓவ­ரில் 100 ரன் எடுத்­தது.
இதன்­பின் ரோகித்­து­டன் அம்­பதி ராயுடு இணைந்­தார். இரு­வ­ரும் எதி­ரணி பந்து வீச்சை விளாச ஸ்கோர் ராக்­கெட் வேகத்­தில் பறந்­தது. ரோகித் சர்மா 60 பந்­தில் அரை­ச­தம் அடித்­தார். எதி­ரணி பந்து வீச்சை விளா­சிய அம்­பதி ராயுடு 51 பந்­தில் அரை­ச­தம் அடித்­தார். 33.1வது ஓவ­ரில் இந்­தியா 200 ரன் கடந்த போது இப்­போட்­டி­யில் பெரிய ஸ்கோரை இந்­தியா பதிவு செய்­யும் என்ற எதிர்­பார்ப்பு இருந்­தது. இதற்கு ஏற்­றார் போல் அரை­ச­தம் அடித்த கையோடு ரோகித் ‘ருத்­ர­தாண்­ட­வம்’ ஆடி­னார். யார் எப்­படி வீசி­னா­லும் பவுண்­டரி, சிக்­சர்­தான் அடிப்­பேன் என்­ப­தைப் போல் ரோகித் விளை­யாட வெஸ்ட்­இண்­டீஸ் கேப்­டன் ஹோல்­டர் என்ன செய்­வ­தென தெரி­யா­மல் முழித்­தார். இவர்­தான் இப்­படி என்­றால் நான் மட்­டும் என் சாதா­ர­ண­வனா என்­ப­தைப் போல் ரோகித்­து­டன் ராயு­டு­வும் தன்னை இணைத்­துக் கொள்ள பந்து நாலா புற­மும் பறந்­தது. இதைப் பார்த்த ரசி­கர்­கள் ஆர்ப்­ப­ரித்­த­னர்.
அபார ஆட்­டத்தை வெளிப்­ப­டுத்­திய ‘மண்­ணின் மைந்­தன்’ ரோகித் சர்மா ஒரு­நாள் போட்­டி­யில் தனது 21வது சதத்தை பதிவு செய்ய அரங்­கமே அதிர்ந்­தது. இவர் 98 பந்­தில் சதம் அடித்­தார். 43வது ஓவ­ரில் இந்­தியா 300 ரன் கடந்­தது. இந்த ஜோடி 3வது விக்­கெட்­டுக்கு 211 ரன்­கள் எடுத்த நிலை­யில், ஆஷ்லே நர்ஸ் ‘சுழ­லில்’ ரோகித் சர்மா சிக்­கி­னார். இவர் 162 ரன் (137 பந்து, 20 பவுண்­டரி, 4 சிக்­சர்) எடுத்­தார். அடுத்து தோனி களம் வந்­தார். இந்த நேரத்­தில் அம்­பதி ராயுடு 80 பந்­தில் சதம் அடித்து தன்னை அணி­யில் சேர்த்­ததை நியா­யப்­ப­டுத்­தி­னார். இது ஒரு­நாள் கிரிக்­கெட்­டில் ராயு­டு­வின் 3வது சத­மாக அமைந்­தது. ராயுடு 100 ரன்  (81 பந்து, 8 பவுண்­டரி, 4 சிக்­சர்) எடுத்து பரி­தா­ப­மாக ரன் அவுட் ஆனார். ‘ஹெலி­காப்­டர் ஷாட்’ அடிக்­கா­விட்­டா­லும் முக்­கிய கட்­டத்­தில் தோனி 15 பந்­தில் 23 ரன் எடுத்­தார். கடைசி நேரத்­தில் கேதர் ஜாதவ் (16), ஜடேஜா (7) கைகொ­டுக்க இந்­தியா 50 ஓவ­ரில் 5 விக்­கெட் இழப்­புக்கு 377 ரன்­கள் குவித்­தது. வெஸட்­இண்­டீஸ தரப்­பில் ரோச் 2, ஆஷ்லே நர்ஸ். கீமோ பால் தலா 1 விக்­கெட் சாய்த்­த­னர்.
கடின இலக்கை துரத்­திய வெஸ்ட்ண்­டீஸ் அணிக்கு துவக்­கம் சிறப்­பாக அமை­ய­வில்லை. புவ­னேஷ்­வர் குமார் வேகத்­தில் ஹேம்­ராஜ் (14) சரிந்­தார். இதைத் தொடர்ந்து இந்­தி­யா­வின் சூப்­பர் பீங்­டிங்­கால் ஹோப் (0), கைரன் பாவெல் (4) இரு­வ­ரும் முறையே குல்­தீப், கோஹ்­லி­யால் ரன் அவுட்  செய்­யப்­பட்டு பரி­தா­ப­மாக பெவி­லி­யன் திரும்­பி­னர். ஹோப் ஆட்­ட­மி­ழந்த நிலை­யில், வெஸட்­இண்­டீ­சின் ‘ஹோப்’ சரிந்­தது. இதை மேலும் உறுதி செய்­யும் வகை­யில் தன்­பங்­கிற்கு ஹெட்­ம­யர் (13) விக்­கெட்டை கலீல் அக­மது வீழ்த்தி இந்­தி­யா­வின் வெற்­றியை உறுதி செய்­தார். தொடர்ந்து அசத்­திய கலீல் அக­மது இம்­முறை ரோவ்­மேன் பாவெலை (1) வீழ்த்தி அசத்­தி­னார். வெஸ்ட்­இண்­டீஸ் 47 ரன்­னில் 5 விக்­கெட்­டு­களை இழந்து திண­றி­யது.
இந்த அணி­யில் வெஸ்ட்­இண்­டிஸ் கடை­சி­யாக நம்­பி­யி­ருந்த சாமு­வேல்ஸ் (18) ஏமாற்­றி­னார். இவ­ரது விக்­கெட்­டை­யும் கலீல் அக­மது வீழ்த்­தி­னார். குல்­தீப் ‘சுழ­லில்’ ஆலன் (10), ஆஹ்லே நர்ஸ் (8) சிக்­கி­னர். கீமோ பால் (19) ஏமாற்­றி­னார். அதே நேரம் பொறுப்­பு­டன் விளை­யாடி ஹோல்­டர் 61 பந்­தில் அரை­ச­தம் அடித்­தார். கடை­சி­யாக ரோச் (6) வெளி­யேற வெஸ்ட்ண்­டீஸ் 36.2 ஓவ­ரில 153 ரன்­னுக்கு ஆட­ட­மி­ழந்து படு­தோல்­வியை சந்­தித்­தது. ஹோல்­டர் (54) அவுட்­டா­கா­மல் இருந்­தார். இந்­திய தரப்­பில் கலீல் அக­மது, குல்­தீப் யாதவ் தலா 3 விக்­கெட் வீத்­தி­னர். ஜடேஜா, பவு­னேஷ்­வர் குமார் தலா 1 விக்­கெட் சாய்த்­த­னர். பேட்­டிங்­கில் கலக்­கிய ரோகித் சர்மா ஆட்­ட­நா­ய­க­னாக தேர்வு செய்­யப்­பட்­டார்.
இந்த வெற்­றி­யின் மூலம் ஐந்து போட்­டி­க­ளைக் கொண்ட ஒரு­நாள் தொடரை இந்­தியா 2–1 என முன்­னிலை வகிக்­கி­றது. ஐந்­தா­வது மற்­றும் கடைசி ஒரு­நாள் போட்டி திரு­வ­னந்­த­பு­ரத்­தில் வரும் நவம்­பர் 1ம் தேதி நடக்க உள்­ளது.