ஆன்மிக கேள்வி – பதில் – மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்

பதிவு செய்த நாள் : 30 அக்டோபர் 2018

* புனித தீர்த்தம் (கங்கை) வீட்டில் இருந்தால் என்ன செய்ய வேண்டும்? ச. தண்டபாணி, ரவணசமுத்திரம்.

கங்கை முதலான தீர்த்த சொம்புகளை பூஜையறையில் வைத்து சுவாமியோடு பூஜிக்கலாம். மற்றபடி காசிக்குச்சென்று நிறைய கொண்டு வந்திருந்தால் கோயிலுக்கு அபிஷேகம் செய்யக் கொடுக்கலாம்.

என மனதில் ோன்றும்போ தெல்லாம் கழித்துக்கொண்டி ருக்கலாம்.

* பிறந்த குழந்தைகளுக்கு எத்தனை மாதங்கள் வரை செவ்வாய், வெள்ளிகளில் திருஷ்டி சுற்ற வேண்டும்? ஏ. வள்ளிநாயகம், முறப்பநாடு.

குழந்தை பிறந்து புண்யாகவாசனம் செய்யும் வரை திருஷ்டி சுற்றக்கூடாது. ஆரத்தி கரைத்து அதில் வேப்பிலை போட்டு மட்டும் வைத்தால் போதும். அதன் பிறகு இத்தனை மாதங்கள்தான் திருஷ்டி சுற்றவேண்டும் என்ற கணக்கு கிடையாது. திருஷ்டிப்பட்டது என மனதில் தோன்றும்போதெல்லாம் கழித்துக்கொண்டிருக்கலாம்.

* எழுத்துத்துறையில் சாதிக்க எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்? எஸ். கார்த்திகைaமைந்தன், நெல்லை.

கிருத்திகை விரதம் இருந்து முருகனை வழிபட்டு வந்தால் பேச்சாற்றல் எழுத்தாற்றல் அதிகரிக்கும்.

* திருமணம் நடத்த ஏற்ற மாதங்கள் எவை? எம். மணிமேகலை, சாத்தூர்.

ஆடி, புரட்டாசி ,மார்கழி, மாசி தவிர மற்ற மாதங்களில் திருமணம் செய்யலாம். மாசி மாதத்திலும் செய்யும் வழக்கம் சில குடும்பங்களில் உள்ளது.