பதி­லடி கொடுக்­குமா இந்­தியா...: மும்­பை­யில் இன்று 4வது மோதல்

பதிவு செய்த நாள் : 29 அக்டோபர் 2018 01:32


மும்பை:

இந்­தி­யா–­வெஸ்ட்­இண்­டீஸ் அணி­க­ளுக்கு இடை­யே­யான நான்­கா­வது ஒரு­நாள் கிரிக்­கெட் போட்டி மும்­பை­யில் பக­லி­ரவு ஆட்­ட­மாக இன்று நடக்­கி­றது.

இந்­தியா வந்­துள்ள வெஸ்ட்­இண்­டீஸ் அணி 5 போட்­டி­கள் கொண்ட ஒரு­நாள் தொட­ரில் பங்­கேற்­கி­றது. கவு­காத்­தி­யில் நடந்த முத­லா­வது போட்­டி­யில் இந்­தியா 8 விக்­கெட் வித்­தி­யா­சத்­தில் அபார வெற்றி பெற்­றது. இதை­ய­டுத்து ஐத­ரா­பாத்­தில் நடந்த 2வது போட்டி ‘டை’யில் (சமன்) முடிந்­தது. புனே­யில் நேற்று முன்­தி­னம் நடந்த 3வது போட்­டி­யில் வெஸ்ட்­இண்­டீ­ஸக் 43 ரன் வித்­தி­யா­சத்­தில் அசத்­தல் வெற்றி பெற்­றது. இதை­ய­டுத்து ந்த தொடர் 1–1 என சம­நிலை வகிக்­கி­றது.

இந்த நிலை­யில், இவ்­விரு அணி­கள் மோதும் 4வது ஒரு­நாள் போட்டி மும்­பை­யில் பக­லி­ரவு ஆட்­ட­மாக இன்று நடக்­கி­றது. இந்­தி­யா­வைப் பொறுத்­த­வரை பேட்­டிங்­கில் வலி­மை­யாக இருந்த போதும் கேப்­டன் விராத் கோஹ்லி, ரோகித் சர்மா இரு­வரை நம்­பியே அணி உள்­ளது. இந்த தொட­ரின் முதல் மூன்று போட்­டி­க­ளில் கோஹ்லி சதம் அடித்து அசத்­தி­னார். ஒரு­நாள் கிரிக்­கெட்­டில் ஹாட்­ரிக் சதம் அடித்த முதல் இந்­திய வீரர் என்ற பெரு­மையை பெற்­றார். ரோகித் ஒரு­ச­தம் அடித்­துள்­ளார். தவான் பார்­மில் இல்லை. நல்ல துவக்­கத்தை வீண் செய்­கி­றார். கடந்த போட்­டி­யில் அம்­பதி ராயுடு, ரிஷாப் பன்ட் இரு­வ­ரும் அவ­ர­ச­ரப்­பட்டு ஆட்­ட­மி­ழந்­த­னர். ஒரு­கால கட்­டத்­தில் சூப்­பர் பினி­ஷ­ராக ருந்த தோனி ரன் எடுக்க சிர­மப்­ப­டு­கி­றார். மத்­திய வரி­சை­யில் ஒரு ஆல்­ர­வுண்­டர் இல்­லா­தது அணிக்கு பல­வீ­னத்தை கொடுத்­துள்­ளது. இதை தவிர்க்க இன்­றைய போட்­டி­யில்­க­லீல் அக­மது இடத்­தில் கேதர் ஜாதவ் விளை­யா­டு­கி­றார்.

பந்­து­வீச்­சைப் பொறுத்­த­வரை பும்ரா, புவ­னேஷ்­வர் குமார் வரவு முக்­கி­யம் வாய்ந்­தது என்ற போதி­லும் கடந்த போட்­டி­யில் புவ­னேஷ்­வர் பந்து வீச்சு சிறப்­பாக இல்லை. இவர் தனது 10 ஓவ­ரில் 70 ரன் விட்­டுக்­கொ­டுத்­தார். அதே நேநம் அபா­ர­மாக பந்து வீசிய பும்ரா 4 விக்­கெட் சாய்த்­தார். கடைசி கட்­டத்­தில் இந்­திய பவு­லர்­கள் அதிக ரன்னை விட்­டுக் கொடுக்­கின்­ற­னர். ஒரு­கட்­டத்­தில் வெஸ்ட்­இண்­டீஸ் 7 நட்­சத்­திர பேட்ஸ்­மேன்­களை இழந்து 217 ரன்­கள் எடுத்­தி­ருந்­தது. இந்த நேரத்­தில் வெஸ்ட்­இண்­டீஸ் 250 ரன்னை தாண்­டுமா என்ற சந்­தே­கம் இருந்­தது. இந்த நெருக்­கடி கட்­டத்­தில் ஆஷ்லே நர்ஸ் அதி­ர­டி­யாக விளை­யாடி 40 ரன்­கள் எடுக்க வெஸ்ட்­இண்­டீஸ் 283 ரன்­கள் எடுத்­தது,, இந்­திய பவு­லர்­கள் தலை­களை வீழ்த்தி வாலை ஆட விட்டு வேடிக்கை பார்க்­கின்­ற­னர். பந்­து­வீச்­சுக்கு பலம் சேர்க்­கும் வகை­யில் இந்­திய பீல்­டிங் இல்லை. சாகல், குல்­தீப் இரு­வ­ரும் ‘சுழ­லில்’ சிறப்­பாக செயல்­ப­டு­கின்­ற­னர்.

வெஸ்ட்­இண்­டீ­சைப் பொறுத்­த­வரை புனே­யில் பெற்ற வெற்றி மன­ரீ­தி­யில் வீரர்­களை வலி­மை­யாக்கி உள்­ளது. தவிர இந்த தொட­ரில் வெஸ்ட்ண்­டீஸ் பெறும் முதல் வெற்றி இது­வா­கும். இந்த அணி­யும் பேட்­டிங்­கில் ஹோப், ஹெட்­ம­யர் ருவரை அதி­கம் நம்பி உள்­ளது. இதில், சுயற்­பந்து வீச்சை ஹோப் சிறப்­பாக எதிர்­கொண்டு ரன் எடுக்­கி­றார். அதே நேரம் ஹெட்­ம­யர் இந்­திய பந்­து­வீச்சை விளாசி சிக்­சர் மழை பொழி­கி­றார். அனு­பவ வீரர் சாமு­வேல்ஸ் பார்­மில் இல்­லா­தது அணியை பல­வீ­னப்­ப­டுத்தி உள்­ளது. பாவெல், ஹேம்­ராஜ் இரு­வ­ரும் அவ­ர­ச­ரப்­பட்டு ஆட்­ட­மி­ழக்­கின்­ற­னர். இருந்­தும் கடைசி கட்­டத்­தில் கேப்­டன் ஹோல்­டர், நர்ஸ, ரோச் ஆகி­யோர் அதி­ர­டி­யாக விளை­யாடி அணிக்கு கைகொ­டுக்­கின்­ற­னர்.

இத­வரை பல­வீ­ன­மாக இருந்து வந்த பந்­து­வீச்சு தற்­போது பலம் பெற்­றுள்­ளது. ஹோல்­டர், மெக்­காய் இரு­வ­ரும் வேகத்­தில் அசத்­து­கின்­ற­னர். ரோச் பந்­து­வீச்­சில் நலல்ல முன்­னேற்­றம் தெரி­கி­றது. சுழ­லில் ஆஷ்லே நர்ஸ், கடந்த போட்­டி­யில் அறி­முக வீர­ராக கள­மி­றங்­கிய பேபி­யன் ஆலன் இரு­வ­ரும் புனே போட்­டி­யில் அசத்­தி­னர். இவர்­கள் இரு­ரும் 9 ஓவர்­க­ளில் ஒரு­ப­வுண்­டரி கூட விட்­டுத் தரா­மல் கட்­டுக்­கோப்­பு­டன் பந்து வீசி­னர். இத்­த­னைக்­கும் கோஹ்லி களத்­தில் இருந்­தார். பந்­து­வீச்­சுக்கு பலம் சேர்க்­கும் வகை­யில் பீல்­டிங் உள்­ளது. ஹெட்­ம­யர், ஆலன் போன்­றோர் மிகச் சிறப்­பாக பீல்­டிங் செய்­கின்­ற­னர்.

வெற்­றியை தொடர வெஸ்ட்­இண்­டீ­சும், பதி­லடி கொடுக்க இந்­தி­யா­வும் போரா­டும் என்­ப­தால் இன்­றைய ஆட்­டம் ரசி­கர்­கள் மத்­தி­யில் பெரும் எதிர்­பார்ப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது. வழக்­கம் போல் பிற்­ப­கல் 1.30 மணிக்கு துவ­ங­கும் இந்த போட்­டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரடி ஒளி­ப­ரப்பு செய்­கி­றது.