ஹாக்கி பைன­லில் இந்­தியா: பாகிஸ்­தா­னு­டன் மோதல்

பதிவு செய்த நாள் : 29 அக்டோபர் 2018 01:31


ஸ்கட்:–

ஆசிய சாம்­பி­யன்ஸ் டிராபி ஹாக்கி தொட­ரின் அரை­இ­று­தி­யில் ஜப்­பானை வீழ்த்­திய இந்­தியா இறு­திப் போட்­டி­யில் பர­ம­எ­த­ரி­யான பாகிஸ்­தானை சந்­திக்­கி­றது.

ஓமன் தலை­ந­கர் மஸ்­கட்­டில், 5வது ஆசிய சாம்­பி­யன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் நடக்­கி­றது. இதில் நடப்பு சாம்­பி­யன் இந்­தியா, மலே­சியா, பாகிஸ்­தான், ஜப்­பான், தென் கொரியா, ஓமன் என, 6 அணி­கள் பங்­கேற்­கின்­றன. முத­லில் போட்­டி­கள் ரவுண்ட்­ரா­பின் லீக் முறை­யில் நடந்­தது. இந்த சுற்­றில் ஒவ்­வொரு அணி­யும் மற்ற அணி­யு­டன் ஒரு­முறை மோதின. இதில். இந்­திய அணி மலே­சி­யா­வுக்கு எதி­ராக ‘டிரா’ செய்­தது. அதே நேரம் மற்ற நான்கு அணி­களை வீழ்த்தி புள்­ளிப்­பட்­டி­ய­லில் முத­லி­டத்­தைப் பிடித்து அரை­இ­று­திக்கு முன்­னே­றி­யது. இதே போல் பாகிஸ்­தான், மலே­சியா, ஜப்­பான அணி­க­ளும் அரை­இ­று­திக்கு முன்­னேறி இருந்­தன.

இந்த நிலை­யில், இந்த மெகா தொட­ரிஜ் இரண்டு அ¬ரி­றதி ஆட்­டங்­கள் நேற்று நடந்­தன. இதன் ஒரு ஆட்­டத்­தில் இந்­தி­யாவை எதிர்த்து ஜப்­பான மோதி­யது. லீக் சுற்­றில் இந்­திய அணி ஜப்­பானை 9–0 என வென்­றி­ருந்­தது. இத­னால், இந்த முறை­யும் ஜப்­பானை இந்­தியா எளி­தாக வீழ்த்­தும் என்ற எதிர்­பார்ப்பு இருந்­தது. போட்­டி­யின் துவக்­கத்­தி­லி­ரு­பப்தே இரு அணி­யி­ன­ரும் விறு­வி­றுப்­பாக விளை­யாடி வந்­த­னர். இருந்­தும் 19-வது நிமி­டத்­தில் இந்­தி­யா­வின் குர்­ஜந்த் சிங் முதல் கோலை அடித்து 1–0 என முன்­னிலை படுத்­தி­னார். ஆனால், அடுத்த 3வது நிமி­டத்­தில் அதா­வது 22-வது நிமி­டத்­தில் ஜப்­பான் பதில் கோலை அடித்­தது. இந்த அணிக்கு கிடைத்த முத­லா­வது பெனா­லடி கார்­ன­ரில் வகாரு கோல் அடித்­தார். இதை­ய­டுத்து ஆட்­டம் 1–1 என சம­னா­னது. தவிர முதல் பாதி முடி­வில் இரு அணி­க­ளும் தலா 1 கோல் அடித்­தி­ருந்­தன.

இரண்­டா­வது பாதி­யில் இந்­திய வீரர்­கள் தடிப்­பு­டன் விளை­யா­டி­னர். 44வது நிமி­டத்­தில் இந்­தி­யா­வுக்கு கிடைத்த 4வது பெனா­லடி கார்­ன­ரில் சின்­லென்­சானா கோல் அடிக்க இந்­தியா 2-–1 என முன்­னி­லைப் பெற்­றது. தொடர்ந்து அசத்­திய இந்­தியா 55வது நிமி­டத்­தில் 3வது கோலை அடித்­தது. இந்­த­முறை தில்­பி­ரீத் சிங் அபா­ர­மாக பீல்டு கோல் அடித்­தார். இதை­ய­டுத்து ந்தியா 3–1 என முன்­னிலை பெற்­றது. அடுத்த நிமி­டத்­தில் ஜப்­பான் வீரர் ஜடானா அணிக்­கான இரண்­டா­வது கோலை அடித்­தார். கடைசி நான்கு நிமி­டத்­தில் ஜப்­பான் வீரர்­கள் எழுச்­சி­யு­டன் விளை­யா­டிய போதும் கோல் அடிக்க முடி­ய­வில்லை. இதை­ய­டுத்து இந்­தியா 3–2 என்ற கோல் கணக்­கில் வெற்றி பெற்று இறு­திப் போட்­டிக்கு முன்­னே­றி­யது.

மற்­றொரு அரை­இ­று­திப் போட்­டி­யில் பாகிஸ்­தான், மலே­சியா அணி­கள் மோதின. இப்­போட்­டி­யின் முதல் பாதி முடி­வில் பாகிஸ்­தான் 4–1 என முன்­னிலை பெற்­றி­ருந்­தது. இந்த நிலை­யில், இரண்­டா­வது பாதி­யில் அசத்­திய மலே­சிய வீரர்­கள் 3 கோல் அடித்­த­னர். இதை­ய­டுத்து ஆட்ட முடி­வில் இரு அணி­க­ளும் தலா 4 கோல் அடித்­தி­ருந்­தன. இதை­ய­டுத்து யாருக்கு வெற்றி என்­பதை தீர்­மா­னிக்க ‘பெனால்டி ஷூட் அவுட்’ முறை கடை­பி­டிக்­கப்­பட்­டது. இதில், அசத்­திய பாகிஸ்­தான் 3–1 என முன்­னிலை பெற்று வெற்றி பெற்று பைன­லுக்கு முன்­னே­றி­யது.

இந்த தொட­ரின் பைன­லில் பர­ம­எ­தி­ரி­க­ளான இந்­தியா, பாகிஸ்­தான் அணி­கள் மோது­கின்­றன. இந்த தொட­ரின் லீக் சுற்­றில் இந்­தியா 3–1 என பாகி­ஸ­தானை வீழ்த்தி இருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.