தொடரை வென்­றது இந்­தியா: உமேஷ் யாதவ், ஜடேஜா அசத்­தல்

பதிவு செய்த நாள் : 15 அக்டோபர் 2018 07:52


ஐத­ரா­பாத்,:

வெஸ்ட்ண்­டீ­சுக்கு எதி­ரான 2வது டெஸ்­டில் 10 விக்­கெட் வித்­தி­யா­சத்­தில் அபார வெற்றி பெற்ற இந்­தியா 2–0 என தொடரை கைப்­பற்றி அசத்­தி­யது. இந்த வெற்­றி­யின் மூலம் தர­வ­ரி­சை­யில் இந்­தியா முத­லி­டத்­தில் நீடிக்­கி­றது.

இந்­தியா வந்­துள்ள வெஸ்ட் இண்­டீஸ் அணி இரண்டு போட்­டி­கள் கொண்ட டெஸ்ட் தொட­ரில் பங்­கேற்­கி­றது. முதல் டெஸ்­டில் வென்ற இந்­தியா 1–0 என தொட­ரில் முன்­னிலை வகிக்­கி­றது. இந்த நிலை­யில், இவ்­விரு அணி­கள் மோதும் இரண்­டா­வது டெஸ்ட் ஐத­ரா­பாத்­தில் உள்ள ராஜிவ் காந்தி சர்­வ­தேச ஸ்டேடி­யத்­தில் நடை­பெற்று வரு­கி­றது. இதில், ‘டாஸ்’ வென்ற வெஸ்ட்ண்­டீஸ் முத­லில் ‘பேட்­டிங்கை’ தேர்வு செய்­தது. துவக்­கத்­தில் தடு­மா­றிய வெஸ்ட்­இண்­டீஸ் அணி பின்­னர் ராஸ்­டன் சேஸ் மற்­றும் கேப்­டன் ஹோல்­டர் இரு­வ­ரின் அரை­ச­தத்­தால் சரி­வி­லி­ருந்து மீண்­டது. வெஸ்ட்­இண்­டீஸ் முதல் இன்­னிங்­சில் 311 ரன்­கள் எடுத்­தது. ராஸ்­டன் சேஸ் (106) சதம் அடித்­தார். ஹோல்­டர் (52) அரை­ச­தம் கடந்­தார். இந்­திய தரப்­பில் உமேஷ் யாதவ் 6 விக்­கெட் சாய்த்­தார். குல்­தீப் 3, அஷ்­வின் 1 விக்­கெட் வீழ்த்­தி­னர்.

அடுத்து தனது முதல் இன்­னிங்சை துவக்­கிய இந்­திய அணிக்கு ராகுல் (4) ஏமாற்ற, பிரித்வி ஷா (70) அரை­ச­தம் கடந்­தார். புஜாரா (10) சொதப்ப, கேப்­டன் விராத் கோஹ்லி (45) அரை­சத வாய்ப்பை தவ­ற­வி­ட­டார். சீரான இடை­வெ­ளி­யில் விக்­கெட்­டு­கள் சரிந்த நிலை­யில், ரகானே, ரிஷாப் பன்ட் இரு­வ­ரும் பொறுப்­பு­டன் விளை­யாடி அரை­ச­தம் கடந்­த­னர். இதை­ய­டுத்து இரண்­டாம் நாள் முடி­வில் இந்­தியா தனது முதல் இன்­னிங்­சில் 4 விக்­கெட்­டு­களை இழந்து 308 ரன்­கள் எடுத்­தி­ருந்­தது. ரகானே (75), ரிஷாப் பன்ட் (85) அவுட்­டா­கா­மல் இருந்­த­னர்.

இந்த நிலை­யில், போட்­டி­யின் மூன்­றாம் நாளான நேற்று, தனது இன்­னிங்சை இந்­தியா தொடர்ந்­தது. 2ம் நாள் முடி­வில் வெஸ்ட்­இண்­டீஸ் இரண்­டா­வது புதிய பந்தை எடுத்­தது. புதிய பந்­தில் கேப்­டன் ஹோல்­டர், கேப்­ரி­யல் இரு­வ­ரும் மிரட்­டி­னர். ஹோல்­டர் பந்­தில் ரகானே ஆட்­ட­மி­ழந்­தார். இவர் 80 ரன் (183 பந்து, 7 பவுண்­டரி) எடுத்­தார். இந்த ஜோடி 5வது விக்­கெட்­டுக்கு 152 ரன்­கள் சேர்த்­தது. தொடர்ந்து அசத்­திய ஹோல்­டர் ஜடே­ஜாவை ‘டக்—­அ­வுட்’ செய்­தார். சதம் அடிப்­பார் என எதிர்­பார்த்த நிலை­யில், கேப்­ரி­யல் வேகத்­தில் ரிஷாப் பன்ட் 92 ரன் (134 பந்து, 11 பவுண்­டரி, 2 சிக்­சர்) சரிந்­தார். குல்­தீப் யாதவ் (6), உமேஷ் யாதவ் (2) சொதப்­பி­னர். கடைசி கட்­டத்­தில் அஷ்­வின் (35) கைகொ­டுத்­தார். முடி­வில் இந்­தியா தனது முதல் இன்­னிங்­சில் 367 ரன்­னுக்கு (106.4 ஓவர்) ஆட்­ட­மி­ழந்­தது. ஷர்­துல் தாக்­கூர் (4) அவுட்­டா­கா­மல் இருந்­தார். வெஸ்ட்ண்­டீஸ் தரப்­பில் அபா­ர­மாக பந்து வீசிய ஹோல்­டர் 5 விக்­கெட் சாய்த்­தார். கேப்­ரி­யல் 3, வாரி­கன் 2 விக்­கெட் வீழ்த்­தி­னர். முதல் இன்­னிங்ஸ் முடி­வில் இந்­தியா 56 ரன் முன்­னிலை பெற்­றது.

அடுத்து வெஸ்ட்ண்­டீஸ் 2வது இன்­னிங்சை துவக்­கி­யது. உமேஷ் யாதவ் வேகத்­தில் பிராத்­வைட் ‘டக்–­அ­வுட் ஆனார். அஷ்­வின் ‘சுழ­லில்’ பாவெல் (0) சிக்­கி­னார். ஹோப் (28), ஹெட்­ம­யர் (17) ஏமாற்­றி­னர். கடந்த இன்­னிங்­சில் சதம் அடித்த ராஸ்­டன் சேஸ் (6) உமேஷ் யாதவ் பந்­தில் கிறீன் போல்­டா­னார். இதே போல் டவ்­ரிச் (0) வெளி­யேற வெஸ்ட்ண்­டீஸ் 6 விக்­கெட்­டு­களை இழந்து 70 ரன் எடுத்து திண­றி­யது. இந்த நிலை­யில், அம்­ரி­சு­டன் கேப்­டன் ஹோல்­டர் இணைந்­தார். இரு­வ­ரும் பொறுப்­பு­டன் விளை­யாடி ரன் எடுத்து வந்­த­னர். 32வது ஓவ­ரில் வெஸ்ட்­இண்­டீஸ் 100 ரன் எடுத்­தது. முக்ய கட்­டத்­தில் ஜடேஜா திருப்­பு­முனை தந்­தார். இவ­ரது பந்­தில் ஹோல்­டர் (19), அம்­ரிஸ் (38) நடையை கட்­டி­னர். வாரி­கன் (7) சொதப்­பி­னார். கக­டை­சியா உமேஷ் பந்­தில் கேபி­ரி­யல் (1) கிளீன் போல்­டாக வெஸ்ட்­இண்­டீஸ் 127 ரன்­னில் ஆட்­ட­மி­ழந்­தது. தேவேந்­திர பிஷூ (10) அவுட்­டா­கா­மல் இருந்­தார். இந்­திய தரப்­பில் உமேஷ் யாதவ் 4, ஜடேஜா 3, அஷ்­வின் 2, குல்­தீப் 1 விக்­கெட் வீழ்த்­தி­னர்.

முதல் இன்­னிங்ஸ் லீட் போக 72 ரன் எடுத்­தால் வெற்றி என்ற எளிய இலக்கை இந்­தியா சேஸ் செய்­தது. ராகுல், பிரித்வி ஷா இரு­வ­ரும் துவக்­கம் தந்­த­னர். பொறுப்­பு­டன் விளை­யா­டிய இவர்­கள் 10 விக்­கெட் வித்­தி­யா­சத்­தில் அணியை வெற்றி பெறச் செய்­த­னர். தேவேந்­திர பிஷூ பந்தை பிரத்வி ஷா பவுண்­ட­ரிக்கு விளாச இந்­தியா 16.1 ஓவ­ரில் விக்­கெட் இழப்­பின்றி 75 ரன் எடுத்து அபார வெற்றி பெற்­றது. ராகுல் (33), பிரித்வி ஷா (33) அவுட்­டா­கா­மல் இருந்­த­னர். பவு­லிங்­கில் அசத்­திய உமேஷ் யாதவ் (ஆட்­ட­நா­ய­கன்), பேட்­டிங்­கில் கலக்­கிய ரிஷாப் பன்ட் (தொடர்­நா­ய­கன்) விரு­து­கள் பெற்­ற­னர். இந்த வெற்­றி­யின் மூலம் இந்­தியா 2 போட்­டி­கள் கொண்ட தொடரை 2–0 என முழு­மை­யாக கைப்­பற்றி அசத்­தி­யது. இத­னால், இந்­திய அணி தர­வ­ரி­சை­யில் தொடர்ந்து முதல் இடத்­தில் நீடிக்­கி­றது.