சொந்த மக்­க­ளுக்­காக கள­மா­டிய வீரர்...!

பதிவு செய்த நாள் : 13 அக்டோபர் 2018 00:05


மஜோர்கா (ஸ்பெயின்) :

 சர்­வ­தேச டென்­னிஸ் தர வரி­சை­யில் உள்ள நம்­பர் ஒன் வீர­ரான ராபெல் நடால், எந்­தக் களத்­தி­லும் தானே நம்­பர் 1 இடத்­தில் இருப்­பேன் என்று நிரூ­பித்­து ள்­ளார். டென்­னிஸ் களத்­தில் ராபெல் நடாலை விரட்­டிக் கொண்­டி­ருக்­கும், நம்­பர் 2 இடத்­தில் உள்ள சுவிட்­சர்­லாந்­தின் ரோஜர் பெட­ரர் உட்­பட, ஒட்டு மொத்த விளை­யாட்டு வீரர்­க­ளும் இப்­போது சொல்­லும் ஒரே வார்த்தை... ‘‘சந்­தே­கம் வேண்­டாம். நடால் விளை­யாட்டு களத்­தில் மட்­டு­மல்ல, சேவைக் களத்­தி­லும் நம்­பர் ஒன். அவ­ரது சேவை எங்­களை சிலிர்க்க வைத்­து­விட்­டது. பணம் சம்­பா­தித்­தால் மட்­டும் போதுமா? சொந்த மக்­கள் துய­ரத்­தில் இருக்­கும்­போது, அதற்கு முன்­வந்து கண்­ணீ­ரைத் துடைப்­ப­வன் மனி­தன். அந்த வகை­யில் ராபெல் நடால் அசத்­திக் கொண்­டி­ருக்­கி­றார்’’ என்று பெட­ரர் பாராட்­டுப் பத்­தி­ரம் வாசித்­துக் கொண்­டி­ருக்­கி­றார்.

அப்­படி நடால் என்ன செய்­து­விட்­டார் என்று ரொம்­ப­வும் குழம்­பிட வேண்­டாம். கீழே உள்ள படத்தை வரி­சை­யா­கப் பார்த்­தால் தெரிந்­து­வி­டும். அதா­வது, வந்­துங்க ஸ்பெயின் நாட்­டில் சமீ­பத்­தில் பெய்த கன மழை­யால், வௌ்ள சேதம் ஏற்­பட்­டு­விட்­டது. இதில் ராபெல் நடா­லின் சொந்த ஊரான மஜோர்­கா­வுக்கு சேதம் அதி­கம். உள்­ளூர் மக்­க­ளில் நுாற்­றுக் கணக்­கா­னோர் வீடு இழந்­த­னர். 12 பேர் இறந்­த­னர். வாழ்­வா­தார உட­மை­கள் வௌ்ளத்­தில் அடித்து செல்­லப்­பட்­ட­தால், அடுத்த வேளை சாப்­பாட்­டுக்கே பலர் வழி­யின்றி தவித்­த­னர்.

சொந்த மக்­க­ளுக்கு ஏற்­பட்ட சோகத்­தைப் பார்த்து மனம் நொந்த நடால், நம்­மூர் ஆசா­மி­க­ளைப் போல் ஜன்­ன­லுக்­குப் பின்­னால் நின்று கவிதை சொல்­லா­மல், நான் கொடுத்த வரிப் பணம் என்­ன­வாச்சு என்ஸ் ஸ்பெயின் அர­சி­டம் கேள்வி கேட்­கா­மல், நேரத்தை வீண­டிக்­கா­மல் மண் அகற்­று­தல், கழிவு நீர் வெளி­யேற்­று­தல், ஜேசி­பி­யைக் கொண்டு வந்து குப்­பை­களை அகற்­று­தல், நகரை சீர் செய்­தல் என்று களத்­தில் இறங்­கி­விட்­டார். பல­ருக்கு நடா­லைக் கண்­ட­தும் உற்­சா­கம் தொற்­றிக் கொண்­டது. சொந்­தத் துய­ரத்தை மறந்து, நகரை சீர­மைப்­ப­தில் ஆர்­வம் காண்­பித்­த­னர்.

இவை எல்­லா­வற்­றுக்­கும் மேலாக, தான் பரா­ம­ரித்து வரும் மிக பிர­மாண்­ட­மான டென்­னிஸ் பயி்ற்சி அரங்­கத்தை மக்­க­ளுக்­காக திறந்­து­விட்ட நடால், அவர்­க­ளுக்கு 3 நேரம் உணவு, தங்­கு­வ­தற்கு கட்­டில், மெத்தை, உணவு மற்­றும் மருத்­துவ கவ­னிப்­புக்கு ஏற்­பா­டு­கள் செய்­தார். நடால் தன்­னைப் பற்றி ஒரு சிறு துளி­யும் கவ­லைப்­ப­ட­வில்லை. கையில் சேறு படி­கி­றது, கால் ஷூக்­க­ளில் சேறு ஒட்­டு­கி­றது என்று முகம் சுளிக்­க­வில்லை. அவ­ரது இந்த கள செயல்­பாட்டை உள்­ளூர் மக்­கள் படம் எடுத்து, இணை­யப் பக்­கத்­தில் பதி­வேற்ற...‘‘என்ன மனு­ஷன்யா நீ’’ என்று அனை­வ­ரும் ஆச்­சர்­யத்­தில் நெகிழ்­கின்­ற­னர்.