சரி­வி­லி­ருந்து மீண்­டது வெ.இண்­டீஸ்: ராஸ்­டன் சேஸ், ஹோல்­டர் அசத்­தல்

பதிவு செய்த நாள் : 13 அக்டோபர் 2018 00:03


ஐத­ரா­பாத்:

இந்­தி­யா­வுக்கு எதி­ரான இரண்­டா­வது டெஸ்­டில் ராஸ்­டன் சேஸ் (97*), கேப்­டன் ஹோல்­டர் (52) கைகொ­டுக்க வெஸ்ட்ண்­டீஸ் முதல் இன்­னிங்­சில் 7 விக்­கெட் இழப்­புக்கு 295 ரன் எடுத்­துள்­ளது. குல்­தீப் 3 விக்­கெட் சாய்த்­தார்.

இந்­தியா வந்­துள்ள வெஸ்ட் இண்­டீஸ் அணி இரண்டு போட்­டி­கள் கொண்ட டெஸ்ட் தொட­ரில் பங்­கேற்­கி­றது. முதல் டெஸ்­டில் வெற்றி பெற்ற இந்­தியா 1–0 என தொட­ரில் முன்­னிலை வகிக்­கி­றது. இந்த நிலை­யில், இரு அணி­கள் மோதும் இரண்­டா­வது மற்­றும் கடைசி டெஸ்ட் ஐத­ரா­பாத்­தில் நேற்று துவங்­கி­யது. காயத்­தில் இருந்து மீண்டு வெஸ்ட் இண்­டீஸ் அணிக்கு திரும்­பிய கேப்­டன் ஹோல்­டர், ‘டாஸ்’ வென்று முத­லில் ‘பேட்­டிங்கை’ தேர்வு செய்­தார்.
இந்­திய அணி­யில் முக­மது ஷமிக்கு ஓய்வு தரப்­பட்டு, வேகப்­பந்து வீச்­சா­ளர் ஷர்­துல் தாகூர், 294வது டெஸ்ட் வீர­ராக அறி­முக வாய்ப்பு பெற்­றார். அதோடு, இந்த ஆண்­டில் டெஸ்ட் போட்­டி­யில் அறி­மு­கம் ஆகும் 5-வது வீரர் என்ற பெரு­மையை ஷர்­துல் பெற்­றார். வெஸ்ட் இண்­டீஸ் அணி­யில் கீமோ பால், லீவிஸ் நீக்­கப்­பட்டு வாரி­கன் அணிக்கு திரும்­பி­னார்.
வெஸ்ட் இண்­டீஸ் அணிக்கு பிராத்­வைட், பாவெல் இரு­வ­ரும் சுமா­ரான துவக்­கம் தந்­த­னர். அறி­முக வீரர் ஷர்­துல் தாக்­கூர் 2வது ஓவர் வீசிய நிலை­யில், காலில் ஏற்­பட்ட தசை­பி­டிப்பு கார­ண­மாக பெவி­லி­யன் திரும்­பி­னார். இதை­ய­டுத்து அஷ்­வின் பந்து வீசி வந்­தார். இவ­ரது ‘சுழ­லில்’ பாவெல் (22) சிக்­கி­னார். குல்­தீப் பந்­தில் பாவெல் (12) வெளி­யே­றி­னார். சற்றே நிதா­ன­மாக விளை­யா­டிய ஹோப் (36) உமேஷ் யாதவ் வேகத்­தில் சரிந்­தார். தொடர்ந்து அசத்­திய குல்­தீப் இம்­முறை ஹெட்­ம­யர் 912), அம்­ரிஸ் (18) விக­கெட்டை வீழ்த்தி அசத்­தி­னார். வெஸ்ட்­இண்­டீஸ் அணி 5 விக்­கெட்­டு­களை இழந்து 113 ரன்­கள் எடுத்து திண­றிய நிலை­யில், ராஸ்­டன் சேசு­டன் டவ்­ரிச் இணைந்­தார். இரு­வம் பொறுப்­பு­டன் விளை­யாடி ரன் எடுத்து வந்­த­னர். ஒரு­மு­னை­யில் ராஸ்­டன் சேஸ், இந்­திய சுழற்­பந்து வீச்சை அனா­ய­ச­மாக எதிர்­கொண்டு அசத்­தி­னார்.
எழுச்­சி­யு­டன் விளை­யா­டிய சேஸ் 80 பந்­தில் அரை­ச­தம் அடித்­தார். இது டெஸ்ட் கிரிக்­கெட்­டில் இவ­ரது 7வது அரை­ச­த­மா­கும். இந்த தொட­ரில் 2வது அரை­ச­தம். இந்த ஜோடி 6வது விக்­கெட்­டுக்கு 69 ரன்­கள் சேர்த்த நிலை­யில், உமேஷ் யாதவ் பந்­தில் டவ்­ரிச் (30) ஆட்­ட­மி­ழந்­தார். அடுத்து கேப்­டன் ஹோல்­டர் களம் வந்­தார். 66வது ஓவ­ரில் வெஸ்ட்­இண்­டீஸ் 200 ரன் எடுத்­தது. இந்த ஜோடி இந்­திய பந்­து­வீச்சை அனா­ய­ச­மாக எதிர்­கொண்டு ரன்­கள் எடுத்து வந்­தது. அசத்­த­லாக விளை­யா­டிய ஹோல்­டர் 66 பந்­தில் அரை­ச­தம் அடிக்க வெஸ்ட்­இண்­டீஸ் சரி­வி­லி­ருந்து மீண்­ட­தோடு வலு­வான நிலைக்கு சென்­றது. 88வது ஓவ­ரின் துவக்­கத்­தில் இந்­திய கேப்­டன் விராத் கோஹ்லி 2வது புதிய பந்தை எடுத்­தார். இதற்கு கைமேல் பலன் கிடைத்­தது. உமேஷ் யாதவ் வேகத்­தில் ஹோல்­டர் 52 ரன் (92 பந்து, 6 பவுண்­டரி) ஆட்­ட­மி­ழந்­தார். இந்த ஜோடி 7வது விக்­கெட்­டுக்கு 104 ரன்­கள் சேர்த்­தது.
முதல்­நாள் முடி­வில் வெஸ்ட்­இண்­டீஸ் அணி தனது முதல் இன்­னிங்­சில் 7 விக்­கெட் இழப்­புக்கு 295 ரன்­கள் (95 ஓவர்) எடுத்­துள்­ளது. ராஸ்­டன் சேஸ் 98 ரன் (174 பந்து, 7 பவுண்­டரி, 1 சிக்­சர்), தேவேந்­திர பிஷூ (2) அவுட்­டா­கா­மல் உள்­ள­னர். இந்­திய தரப்­பில் குல்­தீப் யாதவ், உமேஷ் யாதவ் தலா 3 விக்­கெட் வீழ்த்­தி­னர். அஷ்­வின் 1 விக்­கெட் மட்­டமே வீழ்த்­தி­யுள்­ளார்.