அக­தி­க­ளுக்­கும் அங்­கீ­கா­ரம் ஒலிம்­பிக் கவுன்­சில் முடிவு

பதிவு செய்த நாள் : 11 அக்டோபர் 2018 01:56பியூ­னஸ் அயர்ஸ்,:

சர்­வ­தேச விளை­யாட்­டுத் திரு­வி­ழா­வான ஒலிம்­பிக் போட்­டி­க­ளில், சர்­வ­தேச ஒலிம்­பிக் கவுன்­சி­லில் உறுப்­பி­ன­ராக உள்ள நாடு­கள் பங்­கேற்­கும். அல்­லது ஒரு நாட்­டில் இருந்து, பிறி­தொரு நாட்­டில் குடி­யே­றிய விளை­யாட்டு வீரர்­கள், தங்­க­ளுக்கு குடி­யு­ரிமை வழங்­கிய நாடு­க­ளின் வீரர்­க­ளாக விளை­யா­டு­வார்­கள். இப்­போது ஒலிம்­பிக் போட்­டி­க­ளில் நீண்ட துார ஓட்ட சாம்­பி­ய­னாக உள்ள மோபரா இங்­கி­லாந்து வீர­ராக அறி­மு­கம் ஆனா­லும், அவர் ஆப்­பி­ரிக்க கண்­டத்­தின் சோமா­லியா நாட்­டைச் சேர்ந்­த­வர்.

பல்­வேறு உள்­நாட்­டுப் பிரச்­னை­க­ளால் சொந்த நாடு­க­ளை­விட்டு வெளி­யே­றி­ய­வர்­க­ளில், பல திற­மை­யான விளை­யாட்டு வீரர்­க­ளும் இருப்­பார்­கள். இவர்­கள் எந்த கேட்­ட­கி­ரி­யில் பங்­கேற்­பது என்­பது தெரி­யா­மல் திண­றிக் கொண்­டி­ருந்­த­னர். இந்­நி­லை­யில் வரும் 2020ம் ஆண்­டில் டோக்­கியோ நக­ரில் நடை­பெ­ற­வுள்ள போட்­டி­யில், அக­தி­க­ளாக வாழும் வீரர்­களு க்கான புதிய பட்­டி­யல் அறி­மு­க­மா­க­வுள்­ள­தாக சர்­வ­தேச ஒலிம்­பிக் கவுன்­சில் தலை­வர் தாமஸ் பாக் தெரி­வித்­தார்.

பியூ­னஸ் அயர்ஸ் நக­ரில் நடை­பெற்ற ஒலிம்­பிக் கவுன்­சில் கூட்­டத்­தில், அகதி வீரர்­கள் அணியை உரு­வாக்­கிட, உறுப்­பி­னர்­கள் ஏகோ­பித்த ஆத­ரவு தெரி­வித்­த­தாக கூறப்­ப­டு­கி­றது. இதை­ய­டுத்து, வரும் 2020ம் ஆண்­டில் டோக்­கி­யோ­வில் நடை­பெ­ற­வுள்ள கோடை­கால ஒலிம்­பிக் போட்­டி­யில், நாடு­க­ளின் அணி­க­ளு­டன், அகதி வீரர்­கள் அணி­யும் பட்­டி­ய­லி­டப்­ப­டும் என்று ஒலிம்­பிக் கவுன்­சில் தெரி­வித்­துள்­ளது.

இது­கு­றித்து பேசிய தாமஸ் பாக், ‘‘ஒலிம்­பிக் போட்­டி­க­ளில் அகதி வீரர்­கள் அணி­கள் உரு­வாக்­கம் செய்­வ­தற்கு நிறைய கார­ணங்­கள் உள்­ளன. உல­கம் முழு­வ­தும் 6 கோடியே 85 லட்­சம் அக­தி­கள் உள்­ள­னர். அவர்­க­ளி்ன் வாழ்க்கை முறை கவ­லை­ய­ளிக்­கும் வகை­யில் உள்­ளது. அவர்­க­ளது நிலையை உல­கத்­தின் பார்­வைக்கு கொண்டு செல்­லும் வகை­யில், இது­போன்ற அணி­களை உரு­வாக்­கி­யுள்­ளோம். இது அவர்­க­ளின் வாழ்க்­கை­யில் ஒரு நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்­தும்.

ரியோ ஒலிம்­பிக் போட்­டி­யின்­போது இது எங்­க­ளுக்கு மிகுந்த நெருக்­க­டியை கொடுத்­தது. ஆனால், இப்­போது 2 ஆண்­டு­க­ளில் ஓர­ளவு இதற்­கான நட­வ­டிக்­கையை எடுத்­துள்­ளோம். இப்­போது 50க்கும் அதி­க­மான அகதி விளை­யாட்டு வீரர்­க­ளுக்கு நாங்­கள் முழு அள­வில் பயிற்சி, ஆத­ரவு வழங்கி வரு­கி­றோம். இந்­தக் குழு­வி­னர் வரும் 2020ம் ஆண்டு டோக்­கியோ ஒலிம்­பிக்­கில் தங்­கள் திறனை நிரூ­பிப்­பார்­கள்’’ என்­றார்.