இளை­யோர் ஒலிம்­பிக்­கில் இந்­தி­யா...­கொடியேந்திய குமரி தங்கம் சுட்டார்

பதிவு செய்த நாள் : 11 அக்டோபர் 2018 01:56


பியூ­னஸ் அயர்ஸ்,:

 அர்­ஜென்­டி­னா­வின் பியூ­னஸ் அயர்ஸ் நக­ரில் நடை­பெற்று வரும் இளை­யோர் ஒலிம்­பிக் போட்­டி­க­ளில் இந்­தி­யா­வின் பயம் அறியா இளம் சிங்­கங்­கள் துணிச்­ச­லு­டன் விளை­யாடி, பதக்­கங்­களை வென்று வரு­கின்­ற­னர். பளு துாக்­கு­தல் பிரி­வில் ஜெர்மி தங்­கம் வென்ற நிலை­யில், துப்­பாக்கி சுடும் போட்­டி­க­ளில் இந்­தி­யா­வின் மன­பாக்­கர் தங்­கம் வென்­றார்.

மனு பாக்­கர், பியூ­னஸ் அயர்ஸ் இளை­யோர் ஒலிம்­பிக் குழு­வில் பங்­கேற்­றுள்ள இந்­திய அணிக்கு கொடி அணி வகுப்­பில் தலை­யேற்று சென்­ற­வர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. 10 மீட்­டர் ஏர் பிஸ்­டல் பிரி­வில் அவர் மொத்­தம் 236.5 புள்­ளி­க­ளு­டன் முத­லி­டம் பிடித்து தங்­கம் வென்­றார். ரஷ்­யா­வின் லானா இனினா வௌ்ளியும், நினோ குட்­ஷி­பெர்­டிஷ் வெண்­க­ல­மும் வென்­ற­னர்.  

* பேட்­மின்­டன் பெண்­கள் பிரி­வில் இந்­தி­யா­வின் வைஷ்­ணவி ரெட்டி ஜக்கா, பெர்­ஷி­யா­வின் ரிவா பெர்­னாண்­டாவை எதிர் கொண்­டார். இதில் 21–14, 21–8 என்ற செட்­க­ளில் வைஷ்­ணவி வெற்­றி­பெற்­றார்.

* பேட்­மின்­டன் ஆண்­கள் ஒற்­றை­யர் பிரி­வில் இந்­தி­யா­வின் ல­க்ஷயா சென், பிரே­சில் நாட்­டின் பாரி­யாஸ் பாப்­ரி­சி­யோவை எதிர்த்து விளை­யா­டி­னார். இதில், 21–6 மற்­றும் 21–16 என்ற செட்­க­ளில் ல­க்ஷயா சென் வெற்­றி­பெற்­றார்.

* கென்­யா­வு­டன் மோதிய இந்­திய ஆண்­கள் ஹாக்கி குழு­வி­னர் 7–1 என்ற கோல் கணக்­கில், கென்­யாவை வெற்றி கொண்­ட­னர்.

* இந்­திய பெண்­கள் ஹாக்கி அணி­யி­னர், வனு­வாட்டு நாட்­டின் மோதி­னர். இதில் இந்­திய அணி­யி­னர் 16–0 என்ற கோல் கணக்­கில் வெற்­றி­பெற்­ற­னர்.

* டேபிள் டென்­னிஸ் போட்­டி­க­ளில் இந்­தி­யா­வின் அர்ச்­சனா காமத் காலி­று­திப் போட்­டி­யில், அசர்­பெய்­ஜான் நாட்­டின் நிங்­ஜிங்­கு­டன் மோதி­னார். இதில் அர்ச்­சனா 4–3 என்ற செட்­க­ளில் வெற்­றி­பெற்று, அரை­யி­று­திக்­குள் நுழைந்­தார்.