புதுடில்லி,
பாரதிய ஜனதா கட்சி மக்கள் மத்தியில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் இருக்க வேண்டும் என விரும்புகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ சமுகத்தினர் இடையே பிரிவினையை தூண்டுகிறது என பிரதமர் நரேந்திர மோடி இன்று குற்றம்சாட்டினார்.
இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் 5 மாநில பாஜக தொண்டர்களின் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி எதிர்கட்சியான காங்கிரஸை கடுமையாக சாடி பேசினார். குஜராத்தில் வெளிமாநிலத்தவர்கள் வெளியேற காங்கிரஸ் தான் காரணம் என்று பாஜக கூட்டத்தில் மோடி குற்றம்சாட்டினார். அவர் பேசியதன் விவரம். நடக்கவுள்ள 5 மாநில தேர்தலில் பாஜக வெற்றி பெறுவது அவசியம் என நினைப்பது நமது ஈகோவால் அல்ல. மாறாக மக்களுக்கு சேவை செய்ய கிடைக்கும் வாய்ப்புக்காகவே. | ![]() |
சோட்டு ராம் அவர்களின் சிலை திறப்பு, தூய்மை இந்தியா திட்டம் போன்ற அனைத்து விஷயங்களையும் தேர்தலுடன் முடிச்சு போட முயற்சி செய்தால் அது தேர்தலுக்கான முக்கியத்துவத்தையும் அரசு நலத்திட்டங்களின் நோக்கத்தையும் குலைத்துவிடும்.
பாஜக தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்து வருகிறது. பாஜக அதை தொடர்ந்து செய்து வரும் என மோடி தெரிவித்தார்.