கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 146

பதிவு செய்த நாள் : 24 செப்டம்பர் 2018

கேமரா கண் தந்த கமல் கோஷ்!

தமிழ்­நாடு முதல்­வர் எடப்­பாடி கே.பழ­னி­சாமி சென்னை அருகே உள்ள பைய­னூ­ரில் பெப்சி எம்.ஜி.ஆர். நூற்­றாண்டு படப்­பி­டிப்­புத் தளத்தை அண்­மை­யில் திறந்து வைத்­தார்.

படப்­பி­டிப்பு ஸ்டூடி­யோக்­கள் ஒன்­றன்­பின் ஒன்­றாக இன்று மூடு­விழா கண்­டு­விட்­டா­லும், ஒரு காலத்­தில் சென்­னை­யின் கோடம்­பாக்­கம் பகு­தி­யில் திரும்­பிய திசை­யெல்­லாம் படப்­பி­டிப்பு நிலை­யங்­கள் இருந்­ததை நினை­வூட்­டி­னார் முதல்­வர்.

அவர் குறிப்­பட்ட அந்­தக் காலத்­தில், தமிழ், தெலுங்கு, மலை­யா­ளம், கன்­ன­டம் என்று தொடங்கி, இந்தி, ஒரியா, துளு என்று பல மொழி­க­ளி­லும் சென்­னை­யில் படங்­கள் உரு­வாகி வந்­தன. இந்­தி­யா­வின் பல பகு­தி­க­ளி­லி­ருந்து சென்­னைக்கு வந்த தொழில்­நுட்­பக்­க­லை­ஞர்­கள் சென்­னை­யி­லேயே தங்கி,    திரைக்­க­லை­யின் வளர்ச்­சிக்­குப் பங்­க­ளிப்­புச் செய்­தார்­கள்.

அப்­படி செய்­த­வர்­க­ளில் முக்­கி­ய­மான ஒரு­வர், கோல்­கட்­டா­வி­லி­ருந்து 1930க ளில் வந்த கமல் கோஷ். இவர் பெய­ரைப் பலர் தவ­றாக, கமால் கோஷ் என்று குறிப்­பி­டு­வ­துண்டு. ஆனால் இவ­ரு­டைய திறமை, யாரும் மறக்­க­மு­டி­யா­த­படி, ‘சந்­தி­ர­லேகா’ (1948) திரைப்­ப­டம் நெடு­க­வும், குறிப்­பாக முரசு நட­னத்­தில் வெளிப்­பட்­டது.

இந்­திய திரைத்­து­றை­யில் மிக­வும் மதிப்பு வாய்ந்த ஒரு திரைப்­பட இயக்­கு­நர், தேவகி போஸ். வெளி­நாட்­டுப் பரிசு வாங்­கிய முதல் இந்­திய திரைப்­பட இயக்­கு­ந­ரான தேவகி போஸ், நாற்­பது படங்­க­ளுக்கு மேல் டைரக்ட் செய்­த­வர். அவ­ரு­டன் கோல்­கட்­டா­வின் நியூ தியேட்­ட­ரில் பணி­யாற்­றி­ய­வர் அவ­ரு­டைய அக்­காள்  சாரு­பா­லா­வின் மகன், கமல் கோஷ். சுமார் இரு­பத்­தைந்து வயது இளை­ஞ­ரா­கச் சென்­னைக்கு வந்த கமல் கோஷ், சென்­னை­யி­லேயே தங்கி ஏரா­ள­மான தமிழ், தெலுங்கு, மற்­றும் இந்­திப் படங்­களை சிறந்த முறை­யில் படம்­பி­டித்­துக் கொடுத்­தார். கமே­ரா­வின் சினிமா மொழி அறிந்த கோஷ், தன்­னு­டைய தாய் மொழி­யான வங்­கா­ளத்­தைத் தவிர, இந்தி, ஆங்­கி­லம், தெலுங்கு, தமிழ் என்று பல மொழி­களை­யும் சர­ள­மா­கப் பேசக்­கூ­டி­ய­வ­ராக

இருந்­தார்.

பேசும் படத்­தின் ஆரம்ப காலத்­தில், தமிழ் இயக்­கு­நர்­க­ளும் தயா­ரிப்­பா­ளர்­க­ளும் கோல்­கட்டா, மும்பை, பூனா ஆகிய  நக­ரங்­க­ளுக்­குச் சென்று, அங்­குள்ள ஸ்டூடி­யோக்­க­ளில் தமிழ்ப் பட­வே­லை­க­ளை­யெல்­லாம் முடித்­துக்­கொண்டு வரு­வது வழக்­கம். இந்த வகை­யில், தமிழ் சினி­மா­வின் முன்­னோடி இயக்­கு­ந­ரான கே.சுப்­ர­ம­ணி­யம், கோல்­கட்டா நியூ தியேட்­டர்­ஸில் கண்­டெ­டுத்த ஒரு முத்­து­தான், கமல் கோஷ்.

சைலன் போஸ் கேம­ராவை இயக்­கிய ‘பால­யோ­கினி’ படத்­திற்கு, உதவி கேம­ரா­மே­னாக 1937ல் பணி­யாற்­றி­னார் கமல் கோஷ். அவ­ரு­டைய தனிப்­பொ­றுப்­பில் முத­லில் படம்­பி­டித்த ‘அனா­தைப் பெண்’, மிகப்­பெ­ரிய தோல்­வி­யைத் தழு­வி­யது (1938). கண்­ணீர் மழை­யா­கக் கொட்­டிய படத்­தைப் பார்க்­கப் பெண்­களே கூட பயந்­தார்­க­ளாம்! ஜூபி­டர் பிக்­சர்ஸ் என்ற பின்­னா­ளைய பிர­பல ஸ்தாப­னத்­தின் முதல் தோல்­விப்­ப­ட­மாக, ‘அனா­தைப்­பெண்’ அமைந்­தது.

முதல் படமே தோல்­வி­யில் முடிந்­தா­ லும், கமல் கோஷின் திரைப்­ப­ய­ணம் நன்­றா­கத் தொடர்ந்­தது. அதற்­குக் கார­ணம் இயக்­கு­நர் கே. சுப்­ர­ம­ணி­ய­மும் நடிகை கண்­ணாம்­பா­வும்­தான்.  கமல் கோஷின் மீதும் அவ­ரு­டைய திற­மை­யின் மீதும் அவர்­கள் நம்­பிக்கை வைத்­தி­ருந்­தார்­கள்.

கே. சுப்­ர­ம­ணி­யம் இயக்­கிய  ‘பக்த சேதா’   (1940) என்ற படத்­தில்,  கமல் கோஷ் அடுத்­துப் பணி­யாற்­றி­னார்.  தை மாதப் பிறப்­பில் மதுரை சிந்­தா­மணி டாக்­கீ­ஸில் வெளி­வந்த ‘பக்த சேதா’, வெற்­றிப்­ப­ட­மாக அமைந்­தது. மகா­பா­ரத காலத்­தில் வாழ்ந்த சேதா என்ற செருப்­புத் தைப்­ப­வ­ரின் கதை இது. ‘பக்த சேதா’­­வாக பாப­நா­சம் சிவன் நடித்­தார்.  பக­வா­னுக்கு ஜாதி பேத உணர்ச்­சி­கள் கிடை­யாது என்­பதை பிஞ்சு உள்­ளங்­களை வைத்­துக் காட்­டி­யி­ருந்­தார் சுப்­ர­ம­ணி­யம். இந்த உத்­திப் பலித்­தது. படத்­தில் முக்­கி­ய­மான திருப்­பத்­தில், தந்­தி­ரக்­காட்­சி­க­ளும் இருந்­தன. அவற்­றைக் கமல் கோஷ் நன்­றாக எடுத்­தி­ருந்­தார்.

தன்­னு­டைய கார் டிரை­வர் முத்து அய்­ய­ரின் உற­வுக்­கா­ரப் பெண்­ணான பதி­னாறு வயது ஜி. சுப்­பு­லட்­சு­மியை, துரோ­ணாச்­சா­ரி­யா­ரின் மகள் சாந்தா என்ற முக்­கி­ய­மான வேடத்­தில் சுப்­ர­ம­ணி­யம் நடிக்க வைத்­தார். வெற்­றிப்­ப­டத்­தின் நல்ல பாத்­தி­ரம் என்­ப­து­டன் கமல் கோஷின் சிறப்­பான கேமரா கோணங்­க­ளும் சேர்ந்து கொண்டு, இந்­தப் புதிய

சுப்­பு­லட்­சு­மி­யை­யும் ஒரு நட்­சத்­தி­ரம்

ஆக்­கின.

கே. சுப்­ர­ம­ணி­யத்­தின் அடுத்த வெற்­றிப்­ப­ட­மான, ‘கச்ச தேவ­யானி’ (1941), இன்­னொரு நடி­கை­யைக் ‘கன­வுக் கன்னி’ ஆக்­கி­யது. தஞ்­சா­வூர் ராஜாயி என்­ப­வர், டி.ஆர்.ராஜ­கு­மாரி என்ற தமிழ் சினி­மா­வின் முதல் ‘கன­வுக் கன்­னி’­­யா­கப் பவனி வந்­தார். இதற்­குக் கமல் கோஷின் கேமரா வித்­தைத்­துணை புரிந்­தது. ‘கோயில் சிற்­பம்’, ‘தந்­தப் பதுமை’, ‘ஆடும் மயில்’ என்­றெல்­லாம் அந்­நா­ளைய பத்­தி­ரி­கை­கள் தண்­டோரோ கொட்­டி­ய­தற்­குக் கார­ணம், கோஷின் கேமரா கோணங்­க­ளும் ஒளி அமைப்­பு­க­ளும் ராஜ­கு­மா­ரிக்கு அளித்த கூடு­தல் வசீ­க­ரம்­தான்!
பசு­ப­லேடி கண்­ணாம்பா நடித்த முதல் தமிழ்ப் பட­மான ‘கிருஷ்­ணன் தூது’ (1940)என்­ப­தில் பணி­யாற்­றி­ய­தி­லி­ருந்து, கண்­ணாம்­பா­விற்­கும் அவ­ரு­டைய கண­வர் நாக­பூ­ஷ­ணத்­திற்­கும் வேண்­டி­ய­வ­ரா­கி­விட்­டார் கமல் கோஷ்! பி.யு.சின்­னப்­பா­ வும் கண்­ணாம்­பா­வும் ஜோடியாக நடித்த ‘ஹரிச்­சந்­தி­ரா’­­வைப் கமல் கோஷ் படம் பிடித்­தார் (1944).

கமல் கோஷின் செல்­வாக்கு, ஜெமினி ஸ்டூடி­யோ­வுக்கு அவர்  சென்­ற­போது  உச்­சத்­தைத் தொட்­டது. தென்­னாட்­டுத் திரைப்­ப­டத் துறை­யையே அகில இந்­திய அள­வுக்கு உயர்த்­திக் காட்­டிய பட­மான ‘சந்­தி­ர­லே­கா’­­வில் கமல் கோஷ் பணி­யாற்­றி­னார். அது தமி­ழில் வந்து சக்­கைப்­போடு போட்­ட­பின், சில பகு­தி­களை மீண்­டும் நேர­டி­யாக இந்­தி­யில் எடுத்­தார் தயா­ரிப்­பா­ளர் வாசன். பிரம்­மாண்­ட­மான விளம்­ப­ரத்­து­டன் இந்­தி­யா­வெங்­கும் இந்­திப் பதிப்பை வெளி­யிட்டு வெற்றி பெற்­றார். இதன் பிற­கு­தான் தென்­னாட்­டுத் தயா­ரிப்­பா­ளர்­க­ளால் இந்­திப் படங்­களை சென்­னை­யி­லேயே தயா­ரிக்க முடிந்­தது.

கே. ராம்­நாத் ‘சந்­தி­ர­லே­கா’­­வின் சில பகு­தி­களை படம்­பி­டித்­தி­ருந்­தார். சர்க்­கஸ் காட்­சி­கள் அவ­ரு­டைய கைவண்­ணத்­தி­லும் திட்­ட­மி­டு­த­லி­லும் பட­மா­கின. ஆனால் பெரும்­பா­லான படம் கமல் கோஷின் படப்­பி­டிப்­பில்­தான் அமைந்­தது. டைட்­டி­லில் கமல் கோஷின் பெயர்­தான் உள்­ளது.

உலக சினி­மா­வின் சரித்­தி­ரத்­தில் ‘பேட்­டில்­ஷிப் பொடெம்­கின்’ என்ற ரஷி­யப் படம் மிக முக்­கி­ய­மா­னது. அதில் வரும் ‘ஒடெஸ்ஸு ைஸட்ப்ஸ்’ என்ற காட்சி, அரு­மை­யான படத்­தொ­குப்­புக்கு ஒரு சிறந்த உதா­ர­ண­மா­கத் திகழ்­கி­றது.  இந்த முறை­யில் ‘சந்­தி­ர­லே­கா’­­வின் முரசு நட­னக் காட்­சி­யும் சிறந்து விளங்­கு­கி­றது. படத்­தின் உச்­சக்­கட்­டத்­திற்கு இட்­டுச் செல்­லும் அசத்­த­லான, ஆறு நிமி­டங்­க­ளுக்கு மேல் அமைந்த காட்சி இது. பின்­னணி இசை மட்­டும் ஒலிக்­கி­றது. காட்­சி­யின் பிரம்­மாண்­டம், நடன அசை­வு­க­ளின் நேர்த்தி, ஷாட்­டு­க­ளின் அழகு, அர்த்­த­புஷ்­டி­யான படத்­தொ­குப்பு என்று பல்­வே­று­வி­த­மான பலங்­க­ளு­டன் நெஞ்சை அள்­ளும் வகை­யில் இந்­தப் பகுதி வடி­வ­மைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. கமல் கோஷின் தலை­மை­யில் நான்கு கேம­ராக்­கள் செயல்­பட்­டி­ருக்­கின்­றன.  வானத்­தைப் பின்­பு­ல­மா­கக்­கொண்டு முர­சு­க­ளைப் படம்­பி­டித்த ஷாட்­டு

­க­ளில், அவற்றை நாற்­பது அடி மேலே தூக்­கி­வைத்­துப் படம்­பி­டித்­தார்­கள். முழு நட­னத்­திற்கு இரண்டு வரு­டங்­கள் ஒத்­தி­கைப் பார்த்து, நூறு நாட்­க­ளில் எடுத்து முடித்­தார்­கள்.

‘சந்­தி­ர­லே­கா’­­வின் அகில இந்­திய வெற்­றிக்­குப் பிறகு, கதா­நா­ய­க­னாக எம்.கே.ராதா இரட்டை வேடங்­க­ளில் நடித்த  ‘அபூர்வ சகோ­த­ரர்­கள்’ (1949) படத்­தில் கமல் கோஷ் பணி­யாற்­றி­னார். எம்.ஜி.ஆர்., இரட்டை வேடங்­க­ளில் 1971ல் நடித்த ‘நீரும் நெருப்­பும்’, ‘அபூர்வ சகோ­த­ரர்­கள்’  படத்­தைத் தழுவி எடுக்­கப்­பட்­டது. இரு வேறு பாத்­தி­ரங்­க­ளில் ஒரு நடி­கர் நடிக்­கும் போது, இரு பாத்­தி­ரங்­க­ளை­யும் ஒரே ஷாட்­டில் காண்­பிப்­பது, அது­வும் நேர்த்­தி­யா­கக் காண்­பிப்­பது, ஒரு கேம­ரா­மே­னுக்கு சவால் விடு­கிற விஷ­யம்­தான். இதில், ‘அபூர்வ சகோ­த­ரர்­கள்’ படத்­தில் கமல் கோஷ் நல்ல வெற்றி கண்­டார். அந்­நா­ளில் ‘குண்­டூசி’ சினிமா பத்­தி­ரி­கை­யில் வந்த விமர்­ச­னம் அவ­ரு­டைய திற­மை­யைப் பாராட்­டி­யது. ‘‘படத்­தின் ஒளிப்­ப­திவு அபா­ர­மாக இருக்­கி­றது. ஒரே நடி­கரே, இரு பாகங்­க­ளில் ஒரே காட்­சி­யில் தோன்­று­தைப் படம்­பி­டிப்­பது  மிக­வும் சிர­ம­மான, நுட்­ப­மான வேலை­யா­கும். அதை மிக­வும் பிர­மிக்­கத்­த­குந்த முறை­யில் செய்து முடித்­தி­ருக்­கி­றார்­கள். இரு சகோ­த­ரர்­க­ளும்  அரு­க­ருகே குதி­ரை­யில் வரு­வது, விக்­ர­மனை விஜ­யன் கன்­னத்­தில் அறை­வது, அவர்­க­ளுக்­குள் நடக்­கும் கட்­டா­ரிச் சண்டை, இவை ஒளிப்­ப­தி­வா­ள­ரின் அபார திற­மைக்கு சில எடுத்­துக்­காட்­டு­கள்,’’ என்று  கமல் கோஷிற்­குக் ‘குண்­டூசி’ புக­ழா­ரம் சூட்­டி­யது.

ஜெமினி தன்­னு­டைய வெற்­றிப்­ப­ட­மான ‘மங்­கம்மா சப­த’த்தை ‘மங்­கலா’ என்ற பெய­ரில் இந்­தி­யில் எடுத்­த­போது  கமல் கோஷ்­தான் அகில இந்­தி­யத் தரத்­தில் மீண்­டும் படப்­பி­டிப்பை செய்து கொடுத்­தார். அவ­ரு­டைய பணி­யின் தரம் பாராட்­டப்­பட்­டது.

பானு­ம­தி­யின் ‘காதல்’ (தெலுங்­கில் ‘பிரேமா’ 1952), அஞ்­ச­லி­தே­வி­யின் ‘பூங்­கோதை’ (தெலுங்­கில் ‘பர­தேசி’) ஆகிய இரு­மொ­ழிப் படங்­க­ளில் பணி­யாற்­றி­னார் கமல் கோஷ். ‘பரா­சக்­தி’க்கு மாதம் ரூ.250 சம்­ப­ளம் பெற்­றுக்­கொண்டு, படம் வருமா வராதா என்று சிவாஜி தவித்­துக்­கொண்­டி­ருந்த கால­கட்­டத்­தில், ‘பூங்­கோதை’  படத்­திற்கு 25,000 ரூபாய் பெற்­றுக்­கொண்டு, கமல் கோஷின் கேமரா இயக்­கத்­தில் நடித்­தார். தெலுங்­கி­லும் நீண்ட வச­னம் பேசி அசத்­தி­ய­தா­கக்

கூறு­வார்­கள்.

சில படங்­க­ளைக் கமல் கோஷ் இயக்­கி­னார். மாது­ரி­தே­வி­யின் ‘ரோஹிணி (1953), ஷோபா பிலிம்­ஸின் ‘பரோ­ப­கா­ரம்’ (1953) ஆகி­ய­வற்­றைக் கூற­லாம். இரண்டு படங்­க­ளின் கதை­க­ளும் வங்­கா­ளத்தை மூலம் கொண்­டவை. ஆனால் கோஷ் இயக்­கிய இந்­தப் படங்­கள் வெற்­றி­யும் பெற­வில்லை, வேறு எந்த விதத்­தி­ லும் பேசப்­ப­ட­வும் வில்லை.

ஆகவே,  கமல் கோஷ் இயக்­கு­வதை விட்­டு­ விட்­டார். நண்­பர் டி.எஸ்.துரை­ராஜ் ‘பானைப் பிடித்­த­வள் பாக்­கி­ய­சாலி’  படத்தை தயா­ரித்து, இயக்கி, அதில் முக்­கிய வேடத்­தில் நடிக்­க­வும் செய்­த­போது, துரை­ரா­ஜுக்­குப் பதில் பல காட்­சி­களை அவர் இயக்­கி­னார் (1958). ‘டி.எஸ்.துரை­ரா­ஜின் டைரக் ஷன் சுக­மாக இருக்­கி­றது,’ என்று குமு­தம் விமர்­ச­னம் எழு­தி­யது!

‘அனார்­கலி’ (1955), ‘அம­ர­தீ­பம்’ (1956). ‘காலம் மாறிப்­போச்சு’ (1956) முத­லிய வெற்­றிப்­ப­டங்­க­ளில் கமல் கோஷின் கலை­நேர்த்தி பளிச்­சி­டு­வ­தைக் காண­லாம். அவ்­வ­ள­வாக வர­வேற்பு பெறாத ‘இல்­ல­றமே நல்­ல­றம்’ (1959), ‘நல்ல தீர்ப்பு’ போன்ற படங்­க­ளில்­கூட, அவர் செய்­தி­ருக்­கும் படப்­பி­டிப்பு, கலை­யம்­சங்­க­ளோடு விளங்­கு­வ­தைக் கவ­னிக்­க­லாம்.

சாவித்­திரி நடித்த பல படங்­க­ளில் கமல் கோஷ் பணி­யாற்­றி­னார். சினி­மா­வுக்­குப் பொருத்­த­மான முக­வெட்டு சாவித்­தி­ரிக்கு இருப்­ப­து­போல் வேறு யாருக்­கும் இல்லை என்று கமல் கோஷ் கூறு­வார் என்று அவ­ரு­டைய மூத்த மகன், திரு. சமர் கோஷ் என்­னி­டம் தெரி­வித்­தார். சாவித்­தி­ரிக்கு மிக­வும் நல்ல பெயர் வாங்­கிக்­கொ­டுத்த ‘மா பாபு’ (‘அன்பு மக’ன்) என்ற படத்­தில் கமல் கோஷ் பணி­யாற்­றி­னார். சாவித்­திரி இரட்டை வேடங்­க­ளில் நடித்து இன்று வரை நல்ல பிரிண்ட்­டில் நாம் காணக்­கூ­டிய ‘காத்­தி­ருந்த கண்­கள்’ (1962)

படத்­தின் கேமரா கண், கமல் கோஷி­னு­டை­ய­து­தான்.

காலம் முழு­தும், எந்த நிலை­யி­லும், ஜிப்­பா­வும் பஞ்ச கச்ச வேட்­டி­யும்­தான் அணி­வா­ராம் கமல்­கோஷ். ஒரு முறை ஜெமி­னி­யில் ஒரு குரூப் போட்­டோ­வுக்­காக கோட் சூட் அணிந்து வரச்­சொன்­னார்­க­ளாம். ஊஹும். கமல் கோஷ் கேட்­க­வில்லை. ஜிப்பா வேட்டி அணிந்­தி­ருந்த அவரை நடு­வில் மைய­மாக நிற்க வைத்து, கோட்­டும் சூட்­டும் அணிந்­தி­ருந்த மற்­ற­வர்­கள் சூழ நின்று படம் எடுத்­துக்­கொண்­டார்­க­ளாம்!

இப்­ப­டிப்­பட்ட கோஷுக்கு எஸ்.வி. ரங்­கா­ரா­வும், தயா­ரிப்­பா­ளர், விநி­யோ­கஸ்­தர் சுந்­த­ர­லால் நஹா­தா­வும் நெருங்­கிய நண்­பர்­க­ளாக இருந்­தார்­கள்.

கமல் கோஷின் மனைவி பெயர், சுவர்ணா. அவர்­க­ளுக்கு ஆறு ஆண் பிள்­ளை­கள்,  மூன்று பெண் பிள்­ளை­கள். சென்னை காந்தி நக­ரில் சொந்த பங்­க­ளா­வில் வசித்த கமல் கோஷ், முப்­பது வரு­டங்­க­ளுக்கு மேல் சென்­னை­யில்  திரைத்­து­றை­யில் பணி­யாற்­றி­னார். நல்ல மனி­தா­பி­மானி. ‘சித்தி’ திரைப்­ப­டத்தை ஜெமினி வாசன் ‘அவு­ரத்’ (1968) என்ற பெய­ரில் இந்­தி­யில் எடுத்­துக்­கொண்­டி­

ருந்­த­போது, முன்­னுக்கு வந்­து­கொண்­டி­ருந்த ராஜேஷ் கன்னா, அதி­லொரு துணை வேடத்­தில் நடித்­துக் கொண்­டி­ருந்­தார். அவ­ருக்கு எதிர்­பா­ரா­வி­த­மாக கால் எலும்பு உடைந்­து­விட்­டது.

வாசன் தன்னை படத்­தி­லி­ருந்து நீக்­கி­வி­டு­வாரோ என்ற அச்­சத்­தில், படத்­தின் கேமரா மேனான கமல் கோஷி­டம் வந்து தன்­னு­டைய கால் சரி­யா­கும் வரை கொஞ்­சம் தாம­திக்­கும்­படி கேட்­டுக்­கொண்­டா­ராம். வாச­னுக்­கும்  இடைஞ்­சல் இல்­லா­மல் கோஷ் இப்­படி செய்­த­தால், ராஜேஷ் கன்­னா­வால் ‘அவு­ரத்’­­தில் நடிக்க முடிந்­தது. பிறகு ‘ஆரா­தனா’ வந்­த­தும் ராஜேஷ் கன்னா ‘ரூப் தேரா மஸ்­தானா’ ஆன­தும் எல்­லோ­ருக்­கும் தெரிந்­ததே!

சமூ­கப் படங்­கள் (‘ஊஞ்சே லோக்த், மேஜர் சந்­தி­ர­காந்த்’­­தின் இந்தி வடி­வம், 1965), புரா­ணப்­ப­டங்­கள் (தெலுங்கு ‘பப்­ரு­வா­ஹனா’ 1964), நாட்­டுப்­பு­றப் படங்­கள் (‘கோவுல்ல கோபண்ணா’, ‘மாட்­டுக்­கார வேல’­­னுக்கு முன் வந்த, அதன் தெலுங்கு வடி­வம் 1968) என்று இடை­

வி­டா­மல் பணி­யாற்­றிய கமல் கோஷ், பின்­னா­ளில் கிள­வு­கோமா என்ற கண்­ரோ­கத்­தால் கஷ்­டப்­பட்­டார். அவர் 1983ல் கால­மா­னார். அவர் பணி­யாற்­றிய

திரை உல­கமோ, ‘ஸ்டார்ட் கேமரா’, ‘ஆக் ஷன்’ என்று தனது அடுத்த காட்­சிக்கு சென்­று­விட்­டது.

(தொட­ரும்)