காரமடை விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கோலாகலம்

பதிவு செய்த நாள் : 14 செப்டம்பர் 2018 19:28

கோயம்பத்தூர்

கோவை மாவட்டம், காரமடைஅருகே உள்ள விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. 

கோவை மாவட்டம்,காரமடை அருகிலுள்ள சென்னிவீரம்பாளையம் கிராமத்தில் 18 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி திருவிழா, இந்து ஒற்றுமை பெருவிழா மற்றும் 108திருவிளக்கு பூஜை விழா நேற்று நடைபெற்றது. 

காலை 6 மணிக்கு விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, மாலை 6 மணிக்கு மந்திரங்கள் உபதேசம் செய்ய 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. 

காரமடை விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கோலாகலம்! பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்குமஞ்சள் கயிறு, வளையல் உள்ளிட்ட பிராசதங்கள் வழங்கப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.