சென்செக்ஸ் 373 புள்ளி உயர்வு; நிப்டி 145 புள்ளி ஏற்றம்

பதிவு செய்த நாள் : 14 செப்டம்பர் 2018 18:46

மும்பை,

     இன்றைய வர்த்தகத்தில் பங்குச் சந்தை குறியீட்டெண்கள் ஏற்றத்துடன் தொடங்கின. மாலை நேர வர்த்தகத்திலும் சென்செக்ஸ் ஏற்றத்துடன் முடிந்து புதிய உச்சத்தை தொட்டது.

மாலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 373 புள்ளிகள் உயர்ந்து 38,090.64 புள்ளிகளில் நிலைபெற்றது. தேசியப் பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிப்டி 145.30 புள்ளிகள் உயர்ந்து 11,515.20 புள்ளிகளில் நிலைபெற்றது.

இந்திய ரூபாயின் மதிப்பு

இன்று காலை (14-08-2018) வர்த்தகம் துவங்கியதும், அந்நிய செலவாணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று மேலும் 50 காசுகள் உயர்ந்து ரூ.71.68 காசுகளாக உள்ளது.

சென்னை பெட்ரோல், டீசல் விலை

கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.

இந்தியாவில் இன்று (14-09-18) பெட்ரோல் விலை லிட்டருக்கு 28 காசுகளும் டீசல் விலை லிட்டருக்கு 22 காசுகளும் உயர்ந்துள்ளன.

டில்லியில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.81.28.க்கும், டீசல் விலை ரூ.73.30 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதைபோல் மும்பையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.88.67.க்கும், டீசல் விலை ரூ.77.82 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.49க்கும், டீசல் விலை ரூ.77.49 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கொல்கத்தாவில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.83.14க்கும், டீசல் விலை ரூ.75.15 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.