மொத்தவிலைக் குறியீட்டெண்ணை அடிப்படையாகக்கொண்ட பண வீக்கம் குறைந்தது

பதிவு செய்த நாள் : 14 செப்டம்பர் 2018 18:19

புது டில்லி,

    மொத்த விலை குறியீட்டெண்ணை அடிப்படையாக கொண்ட பணவீக்கம் 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 4.53 சதவீதமாகக் குறைந்துள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் பணவீக்க அளவு கடந்த 4 மாத காலத்தில் வெளியிடப்பட்ட பணவீக்க அளவுகளில் மிகக் குறைவானது. இது 2018ம் ஆண்டு ஜூலை மாதத்தில் 5.09 சதவீதமாக இருந்தது.

இது கடந்த ஆண்டு 2017ல் ஆகஸ்ட் மாத மொத்த விலை குறியீட்டெண்ணை அடிப்படையாக கொண்ட பணவீக்கம் 3.24 சதவீதமாக இருந்தது.

உணவு பொருள்களின் மொத்த விலை குறியீட்டெண்ணை அடிப்படையாக கொண்ட பணவீக்கம் 4.04 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 2.16 சதவீதமாக இருந்தது.

காய்கறிகளின் மொத்த விலை குறியீட்டெண்ணை அடிப்படையாக கொண்ட பணவீக்கம் சென்ற ஆகஸ்ட் மாதத்தில் 20.18 சதவீதமாக குறைந்தது. இது சென்ற ஜூலை மாதத்தில் 14.07 சதவீதமாக இருந்தது.

ஆகஸ்ட் மாதத்தில் எரிபொருள் மீதான பணவீக்கம் இரட்டை இலக்க அளவுக்கு 17.73 சதவீதம் உயர்ந்துள்ளது.

சமையல் எரிவாயு மீதான மொத்த விலை குறியீட்டெண்ணை அடிப்படையாக கொண்ட பணவீக்கம் 46.08 சதவீதமும், பெட்ரோல் 19.90 சதவீதமும், டீசல் 16.30 சதவீதம் உயர்ந்துள்ளன.

உருளைக்கிழங்கின் மீதான பணவீக்கம் விலை 71.89 சதவீதம் உயர்ந்தது.  இதைபோல் வெங்காயம் மீதான பணவீக்கம்  26.80 சதவீதம் குறைந்தது. பழங்களின் மீதான பணவீக்கமும் 16.40 சதவீதம் குறைந்துள்ளது.

பருப்புகளின் விலையும் 14.23 சதவீதம் குறைந்துள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் பணவீக்க அளவு கடந்த 4 மாத காலத்தில் வெளியிடப்பட்ட பணவீக்க அளவுகளைவிடக் குறைந்ததாகும். ஆகஸ்டு மாத பண வீக்க அளவு 4.53 சதவீதம் ஆகக் குறைந்துள்ளது. 2017ம் ஆண்டு கடந்த ஏப்ரல் மாதத்தில் பணவீக்க அளவு 3.62 சதவீதமாக இருந்தது.