அமெரிக்காவில் மூன்று மாநிலங்களை குறிவைக்கும் புளோரன்ஸ் புயல்

பதிவு செய்த நாள் : 14 செப்டம்பர் 2018 17:48

வில்மிங்டன்,

    அமெரிக்காவில் தற்பொழுது மழைக்காலம் தொடங்கி உள்ளது. அட்லாண்டிக் கடல் பகுதியில் புதிய புயல் சின்னம் ஒன்று உருவாகியுள்ளது. அதற்கு புளோரன்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது.  புளோரன்ஸ் புயல் இன்று கரோலினா மாகாணத்தைக் தாக்கும் என்று அந்நாட்டு வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

புயல் தாக்கும் என கணிக்கப்பட்ட வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா, விர்ஜினியா ஆகிய மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 3 மாகாணத்திலும் கடலோர பகுதி மக்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை வேறு மேடான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடற்கரை பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

புளோரன்ஸ் புயல் காரணமாக கரோலினா மாகாணத்தில் கடுமையான மழை பெய்து வருகிறது. கடலோர பகுதி கடுமையான காற்று வீசத் தொடங்கியது. புயல் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக 1,50,000 மக்கள் இருளில் மழை வெள்ளத்தில் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மீட்புப் பணிகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்கும்படி மாநில கவர்னர் அறிவுறுத்தியுள்ளார்.

.