வரதட்சணை கொடுமை புகாரில் உடனடியாக கைது செய்யலாம்: உச்சநீதிமன்றம்

பதிவு செய்த நாள் : 14 செப்டம்பர் 2018 12:38

புதுடில்லி

வரதட்சணை கொடுமை வழக்கில் பிரிவு 498ஏ கீழ் பதிவு செய்யப்படுபவரை உடனடியாக கைது செய்யலாம் என உச்சநீதிமன்றம் இன்று அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

வரதட்சணை கொடுமை வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான நீதிபதிகள் ஏஎம் கான்வில்கர், டிஒய் சதிர சூட் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தி வந்தது. இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது.

வரதட்சணை கொடுமையில் ஒரு பெண் அவர்களுக்கு எதிராக புகார் அளித்த பிறகு, கணவர் மற்றும் அவரது உறவினர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்று நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.

2017 ஜூலையில், பிரிவு 498A இன் 'தவறான பயன்பாடு' தடுக்கும் பொருட்டு, ஒவ்வொரு நபரும் ஒரு ஆரம்ப விசாரணையின்றி கைது செய்ய முடியாது என்று உச்சநீதிமன்ற 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்னர் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.