மழைநீர் சேகரிப்பு தொட்டி இல்லாத கட்டிடங்களுக்கு அபராதம் விதிக்கலாமா?

பதிவு செய்த நாள் : 10 ஆகஸ்ட் 2018 15:07

சென்னை,

மழைநீர் சேகரிப்பு தொட்டி இல்லாத கட்டிடங்களுக்கு அபராதம் விதிக்கலாமா? என உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வீடு, அலுவலக கட்டிடங்கள் என அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும் என்ற திட்டத்தை கட்டாயமாக்கி 2013ம் ஆண்டு தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் மழைநீர் சேமிப்பு வசதியில்லாத கட்டடங்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
மழைநீர் சேகரிப்பு தொட்டி இல்லாத கட்டிடங்களுக்கு அபராதம் விதிக்கலாமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பின்னர், இது தொடர்பாக 8 வாரத்தில் பரிசீலித்து, தமிழக அரசு முடிவெடுக்க நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.