கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 137

பதிவு செய்த நாள் : 23 ஜூலை 2018 சிறுமியாக பாட்டு  ராணி குடும்பத்திற்கு வீட்டு  ராணி!

எழு­பத்தி ஐந்து வய­தில் பழம்­பெ­ரும் பாடகி கே. ராணி மறைந்­தி­ருக்­கி­றார். ‘மகா­நடி’ என்­றும் ‘நடி­கை­யர் தில­கம்’ என்­றும் மகா­பெ­ரிய தாரை தப்­பட்­டை­யு­டன் சில மாதங்­க­ளுக்கு முன்பு வலம் வந்­ததே ஒரு ‘பயோ­பிக்’ (வாழ்க்கை வர­லாற்­றுப்­ப­டம்), அதன் நாய­கி­யான சாவித்­தி­ரிக்கு தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழி­க­ளி­லும் ‘தேவ­தாஸ்’ படத்­தில் பாடி­ய­வர் கே. ராணி.

‘எல்­லாம் மாயை­தானா’ என்று தமி­ழி­லும் ‘அந்தா பிராந்­தி­யேனா’ என்று தெலுங்­கி­லும் ராணி பாடிய ‘விஷாத கீதம்’ (அதா­வது சோகப்­பா­டல்), சாவித்­தி­ரி­யின் சிறந்த நடிப்­பு­டன் இன்­றும் முழங்­கிக்­கொண்­டி­ருக்­கி­றது.

இதில் என்ன ஆச்­ச­ரி­யம் என்­றால், தமி­ழி­லும் தெலுங்­கி­லும் அட்­சர சுத்­த­மா­க­வும் வளர்ந்த பாட­கி­யை­யைப் போல­வும் ராணி இந்­தப் பாடல்­க­ளைப் பாடி­ய­போது, அவ­ருக்கு எட்டு, ஒன்­பது வய­து­தான் இருக்­கும்!

இன்­னொன்று, அவ­ரது தாய்­மொழி தமி­ழும் இல்லை, தெலுங்­கும் இல்லை. இந்தி! கான்­பூ­ரி­லி­ருந்து தெற்கே குடி­யே­றிய ஒரு குடும்­பத்­தைச் சேர்ந்­த­வர் அவர். அப்பா கிஷன் சிங், ஸ்டேஷன் மாஸ்­ட­ராக இருந்­த­தால், பல இடங்­க­ளுக்கு செல்­லும் வாய்ப்பு ராணிக்­குத் தொடர்ந்து வந்­து­கொண்­டி­ருந்­தது. அத­னால்­தானோ என்­னவோ, மொழி­கள் அவ­ருக்­குத் தடை கற்­க­ளாக இருக்­க­வில்லை!

சிறு­மி­யாக இருக்­கும்­போதே, ராணிக்கு மேடை­யில் பாடும் வாய்ப்பு வந்­து­விட்­டது. அவ­ருக்கு ஐந்­தாறு வய­தா­ன­போது, மேடை­யில் வைஜெ­யந்­தி­மா­லா­வின் நாட்­டிய நிகழ்ச்­சி­க­ளுக்­குப் பாட ஆரம்­பித்­தார். நடன நிகழ்ச்­சிக்­குப் பாட்டு என்­றால் நட­னப்­பா­டல்­கள் அல்ல. நிகழ்ச்­சிக்கு இடை­யில் வைஜெ­யந்­தி­மாலா காஸ்­டி­யூம் மாற்ற நேரும்­பொ­ழுது, இடை­யில் தொய்வு வந்­து­வி­டக்­கூ­டாதே என்று சிறுமி ராணி சில பிர­ப­ல­மான பாடல்­க­ளைப் பாடு­வாள். நடன நிகழ்ச்சி முடி­யும் போது, சிறுமி ராணி தூங்­கி­வி­டு­வா­ளாம்.   வைஜெ­யந்­தி­மா­லா­வும் அவ­ரு­டைய பாட்டி யது­கிரி அம்­மா­ளும் ராணி­யைத் தூக்­கிக்­கொண்டு, காரில் ஏற்றி வந்து வீட்­டில் விட்­டு­விட்­டுப் போவார்­க­ளாம். இது ராணி தன்­னு­டைய நினை­வு­க­ளி­லி­ருந்து பகிர்ந்­து­கொண்ட செய்தி.

ஒரு நாள், வைஜெ­யந்­தி­மா­லா­வின் நடன நிகழ்ச்சி   ராஜா அண்­ணா­மலை மன்­றத்­தில் நடந்­து­கொண்­டி­ருந்­தது. அன்று இசை மேதை­யும் இசை­ய­மைப்­பா­ள­ரு­மான சி.ஆர். சுப்­ப­ரா­மன் நிகழ்ச்­சிக்கு வந்­தி­ருந்­தார். நட­னம் நன்­றா­கத்­தான் இருந்­தது. ஆனால் சுப்­ப­ரா­மனை அன்று கவர்ந்­தது, இடை­யி­டையே பாடிய சிறு­மி­யின் பாட்­டுத்­தான்! அடுத்த நாள் தன்­னு­டைய காரில் ஆர்­மோ­னி­யத்தை ஏற்­றிக்­கொண்டு ராணி­யின் வீட்­டுக்கு வந்­து­விட்­டார்!

சிறுமி அவ­ருக்கு முன்னே நின்­ற­வு­டன், சுப்­ப­ரா­ம­னின் வைர மோதி­ரம் ஜொலிக்­கும் விரல்­கள், கறுப்பு வெள்­ளைக் கட்­டை­கள் மேல் விளை­யாட ஆரம்­பித்­தன. ‘என்ன ஸ்ருதி?’ என்று கேட்­டார் சுப்­ப­ரா­மன். ‘ஸ்ருதின்னா என்ன?’வென்று கேட்­டாள் ராணி!

ஆகா­வென்று வியந்­தார் சுப்­ப­ரா­மன். பல பாடல்­களை அற்­பு­த­மா­கப் பாடிய இந்த சிறுமி, தன்­னு­டைய கேள்வி ஞானத்­தின் பலத்­தி­லேயே இதை­யெல்­லாம் செய்து கொண்­டி­ருக்­கி­றாள். அவள் சாத்­தி­ரம் அரி­யாள்...ஆனால் பாத்­தி­றம் அறி­வாள் என்று சுப்­ப­ரா­மன் புரிந்­து­கொண்­டார்.

‘தேவ­தா’­ஸின் தமிழ், தெலுங்கு ஆகிய இரு பிர­தி­க­ளி­லும்  ராணி­யைப் பாட­வைத்­தார் சுப்­ப­ரா­மன். ேஸாலோ பாட­லான ‘எல்­லாம் மாயை­தானா (‘அந்தா பிராந்­தி­யேனா’) மற்­றும் கண்­ட­சா­லா­வு­டன் பாடிய ‘உற­வும் இல்லை பகை­யும் இல்லை’ (‘செலிய லேது செலிமி லேது’) ஆகிய இரு பாடல்­க­ளும் நல்ல வெற்றி பெற்­றன.

‘தேவ­தாஸ்’ படம் வெளி­யா­கக் காலம் ஆயிற்று. சுப்­ப­ரா­மன் இசை­ய­மைத்த ‘தர்­ம­தே­வதா’ படத்­தின் தமிழ், தெலுங்கு பிர­தி­க­ளில் ராணி­யைச் சுப்­ப­ரா­மன் பல பாடல்­கள் பாட­வைத்­தார். ஆனால், ராணி­யைத் தேடி­வந்து பின்­ன­ணிப் பாட­கி­யாக்­கிய சுப்­ப­ரா­மன், 1952ல், அவ­ரு­டைய 29வது வய­தில் துர­திர்ஷ்­ட­வ­ச­மாக கால­மா­னார்.

‘தேவ­தாஸ்’ வரு­வ­தற்கு முன்பே,  சுப்­ப­ரா­ம­னின் சங்­கீத கோஷ்­டி­யி­லி­ருந்த சுஸர்ல தட்­சி­ணா­மூர்த்தி என்ற தெலுங்கு தட்­சி­ணா­மூர்த்தி, ‘பர­மா­னந்த சிஷ்­யுல’ (1950) என்ற படத்­தில் கதா­நா­ய­கிக்கு ராணி­யைப் பாட­வைத்­து­விட்­டார். எட்டு வய­தில், ராணி, பாட்டு ராணி­யா­கி­விட்­டார்!  கதா­நா­ய­கன்  ஏ. நாகேஸ்­வர ராவுக்­குப் பின்­ன­ணிப் பாடிய தட்­சி­ணா­மூர்த்தி, ராணி­யு­டன் சேர்ந்து டூயட்­டும் பாடி­னார்!

 சுப்­ப­ரா­ம­னி­டம் வாத்­தி­யக் கலை­ஞ­ராக இருந்த இன்­னொ­ரு­வர், டி.ஜி.லிங்­கப்பா. அவர் தன்­னு­டைய முதல் திரைப்­ப­ட­மான ‘மோக­ன­சுந்­த­ர’த்­தில் ராணியை பி.லீலா­வு­டன் ஒரு பாடல் பாட­வைத்­தார். பி.லீலா, கர்­நா­டக சங்­கீ­தத்­தில் தொடர்ந்து பயிற்சி பெற்­ற­வர். ராணிக்கோ, வர்­ணத்­திற்­கும் தோப்­புக்­கர்­ணத்­திற்­கும் வித்­தி­யா­சம் தெரி­யாது. ஆரம்­பத்­தில் அச்­சம் இருக்­கத்­தான் செய்­தது. ஆனால், பளிச்­சென்ற ராணி­யின் குர­லும் எந்த மொழி­யை­யும் தெளி­வா­கப்­பா­டும் திற­னும், சுருதி சுத்­த­மும் அவ­ருக்கு வர­வேற்பை ஏற்­ப­டுத்­தின. அவ­ரு­டைய தன்­னம்­பிக்­கைக் கூடி­யது.

விஜயா – வாஹிணி (‘கல்­யா­ணம் பண்­ணிப்­பார்’, ‘பெள்ளி சேசி சூடு’), மாடர்ன் தியேட்­டர்ஸ் (‘கல்­யாணி’) போன்ற பெரிய ஸ்டூடி­யோக்­கள் அவரை வர­வேற்­றுப் பாட­வைத்­தன. எம்.என். நம்­பி­யார் கதா­நா­ய­க­னாக நடித்த ‘கல்­யாணி’ படத்­தில், டி.எம். சவுந்­த­ர­ரா­ஜ­னு­டன் பாடி­னார் ராணி ( இனிப் பிரி­வில்­லா­மலே வாழ்­வோம் நாம்). இந்­தப் பாட­லைக் குறித்­தும் ராணி­யைக் குறித்­தும் காலஞ்­சென்ற டி.எம்.எஸ். என்­னி­டம் பகிர்ந்து கொண்­டி­ருக்­கி­றார். ‘‘நான் இசை­ய­மைப்­பா­ளர் தெலுங்கு தட்­சி­ணா­மூர்த்­தி­யின் பாணியை எனக்கு ஏற்­ற­படி மாற்­றிக்­கொண்டு பாடு­வேன். ஆனால், ராணி அதை அப்­ப­டியே பாடுவா. நல்ல ஸ்ருதி சுத்­த­மும் வார்த்தை சுத்­த­மும் உள்ள பாட்டு அவ­ளு­டை­யது. ரொம்ப நல்லா பாடுவா. அனு­ப­விச்­சுப் பாடுவா. நல்ல ஞானம் உள்­ளவ. எப்­போ­தும் சிரிச்ச முகத்­தோட இருப்பா. அன்­போடு பழ­கக்­கூ­டிய ஜீவன். நான் நிறைஞ்ச மன­சோட நினைச்­சுப் பார்க்­கிற பாடகி,’’  என்று ராணி­யைப் பற்­றிய  டி.எம்.எஸ்­ஸின் நினை­வ­லை­கள் இனி­மை­யா­ன­வை­யாக அமைந்­தி­ருந்­தன. ராணி­யின் பாட்டு மட்­டும் அல்ல, பழ­கும் வித­மும் இனிமை என்று டி.எம்.எஸ். என்­னி­டம் தெரி­வித்த அபிப்­பி­ரா­யத்­தையே, இசை­ய­மைப்­பா­ளர் ஆர். பார்த்­த­சா­ர­தி­யும் என்­னி­டம் தெரி­வித்­த­துண்டு. தான் இசை­ய­மைத்த ‘மக­த­ல­நாட்டு மேரி’ படத்­தில்

ராணி­யைப் பாட வைத்­த­வர் பார்த்­த­சா­ரதி.

முன்­ன­ணிப் பாட­கி­யாக ராணி இப்­ப­டிக் கொடி கட்­டிக்­கொண்­டி­ருந்த கால­கட்­டத்­தில், சிங்­க­ளப்­ப­டங்­க­ளின் பாடல்­கள் தமிழ்­நாட்­டில் உரு­வாக்­கப்­பட்டு வந்­தன. சில சிங்­க­ளப் பாடல்­கள் பாடிய ராணி, இலங்­கை­யின் தேசிய கீதத்­தை­யும் பாடி­னார். இலங்­கை­யின் தேசிய கீதம் உரு­வான விதத்­தைப் பற்­றி­யும் அதன் பல பிர­தி­க­ளைக் குறித்­தும் சர்ச்­சை­கள் உள்­ளன. ராணி பாடிய பிர­தி­யைக் குறித்து சரி­யான கருத்து இனித்­தான் வெளி­யி­டப்­ப­ட­வேண்­டும்.

சுப்­ப­ரா­ம­னி­டம் உத­வி­யா­ள­ரா­க­வும் கோரஸ் பாட­க­ரா­க­வும் இருந்­த­வர் கண்­ட­சாலா. அவர் தெலுங்கு சினி­மா­வின் தன்­னி­க­ரற்ற பாட­கர், தலை­சி­றந்த இசை­ய­மைப்­பா­ள­ரும் கூட. அவர் ராணிக்கு ‘குண­சுந்­தரி’ என்ற படத்­தில் சிறந்த பாடல் ஒன்­றைக் கொடுத்­தார். ‘தூது­செல்­லும் கோகி­லம்’ என்று ராணி­யும் ஜிக்­கி­யும் பாடிய பாடல், பாகு, வெல்­லம், சர்க்­கரை என்று கூறக்­கூ­டிய அள­வில் இன்­றும் விளங்­கு­கி­றது. சாவித்­தி­ரி­யின் இரு தோழி­கள்  அவ­ரி­டம் பாடு­வ­தாக அமைந்த இந்­தப் பாட­லில், லட்­சு­மி­பி­ரபா என்ற நடி­கைக்கு ஜிக்கி பாடி­னார், டி.பி. முத்­து­லட்­சு­மிக்கு ராணி பாடி­னார். ஜிக்கி, ராணி ஆகிய இரண்டு சிறந்த பாட­கி­க­ளின் தனித்­தனி குரல்­கள் மாறி மாறி வந்து பாட­லைப் பிர­கா­சிக்­கச் செய்­தன.

இன்­றும் இத்­த­கைய பாடல்­கள் யூடி­யூ­பில் பகி­ரப்­பட்டு ஆயி­ரக்­க­ணக்­கான பழம்­பா­டல் ரசி­கர்­க­ளால் மீண்­டும் மீண்­டும் கேட்­கப்­ப­டு­கின்­றன, பார்க்­கப்­ப­டு­கின்­றன. பழைய நினை­வு­கள் புதிய வண்­ணங்­க­ளில் சிற­க­டிக்­கின்­றன. இது சாதா­ரண விஷ­யம் அல்ல. பழைய நினை­வு­கள், அந்­நா­ளைய இசை­யு­டன்  கொண்ட தொடர்பை, ஆலி­வர் ஸாக்ஸ் என்ற நரம்­பி­யல் நிபு­ணர், ‘மியூ­ஸி­கோ­பீ­லியா’ என்ற நூலில் எடுத்­துக்­காட்­டுக்­கள் தந்து அற்­பு­த­மாக விளக்­கி­யி­ருக்­கி­றார்.

கே.வி. மகா­தே­வனை மேலே ஏற்­றி­விட்­டப் பட­வ­ரி­சை­யில் முத­லில் வந்­தது ‘நால்­வர்’ (1953). இந்­தப் படத்­தில் ராணி­யைப் பாட­வைத்­த­து­டன் தானும் உடன் இணைந்து பாடி­னார் மகா­தே­வன். பாடல், ‘அப­ரா­தம் ரூபா அம்­பது, அகா­ர­ண­மா­கக் கையைப் பிடிச்சா அப­ரா­தம் ரூபா அம்­பது’. இந்­தப் பாட­லி­லும் ராணி­யின் குரல் சிரிப்பு நடிகை முத்­து­லட்­சு­மிக்­காக ஒலித்­தது.  காமெ­டிப்­பா­டல்­கள் பாடு­ப­வர் என்ற முத்­திரை அவர் மீது கொஞ்­சம் விழத் தொடங்­கி­யி­ருந்­தது. வினோ­தம் என்­ன­வெ­என்­றால் ‘எல்­லாம் மாயை­தானா’ என்ற சோகக்­கு­ர­லு­டன்­தான் மாநி­லம் எங்­கும் ராணி முத­லில் வலம் வந்­தி­ருந்­தார். இந்த சோக சாயல் இழை­யோ­டத்­தான் பின்­னர் அவர் ‘வரவே வராதா’ என்று ‘தெய்­வ­ப­லம்’ (1959) படத்­தில், அஸ்­வத்­தா­மா­வின் இசை­யில் பாடி­னார். ராணியை,உணர்ச்­சி­க­ளின் நாய­கி­யா­க­வும் இனி­மை­யின் பிர­வா­க­மா­க­வும் காட்­டும் பாடல் இது. இந்த வகை­யில் ஐம்­ப­து­க­ளில் ஐநூ­றுக்­கும் மேற்­பட்ட பாடல்­களை பல மொழி­க­ளில் பாடி­னார் ராணி.

அவர் பின்­ன­ணிப் பாட­கி­யாக    பிஸி­யாக இருந்த கால­கட்­டத்­தில், ஒரு பத்­தி­ரிகை கட்­டு­ரை­யில் பின்­ன­ணிப் பாட்­டுப் பற்றி தன்­னு­டைய எண்­ணங்­களை முன்­வைத்­தார். ‘‘நாங்­கள் பின்­ன­ணி­யில் இருப்­பது உண்­மை­தான். ஆனால் நாங்­கள் வெறு­மனே பாடி­விட்­டுச் செல்­லும் பாட­கி­கள் அல்ல. படக்­காட்­சி­க­ளின் தேவைக்கு ஏற்ப உணர்ச்­சி­களை வெளிப்­ப­டுத்­து­ப­வர்­கள். எங்­க­ளைப் பின்­னணி நடி­கை­கள் என்று கூற­வேண்­டும்,’’ என்று ராணி தெரி­வித்­தி­ருந்­தார். பின்­ன­ணிப் பாட்­டில் உள்ள சிர­மங்­களை அவர் அந்­தக் கட்­டு­ரை­யில் முன்­வைத்­தார்.

‘‘பாட­லா­சி­ரி­யர் ஒரு பாடலை சந்த நடை­யில் அமைத்­தி­ருப்­பார். அந்த வரி­க­ளும் வேக­மா­கப் பாடு­வ­தாகஅமைந்­தி­ருக்­கும். அது இசை­ய­மைப்­பா­ள­ரி­டம் போன­தும், பாட­லா­சி­ரி­ய­ருக்கு நான் என்ன மட்­டமா என்று அவர் அந்த வேக நடை­யோடு பல சங்­க­தி­க­ளை­யும் வைத்து மெட்டை அமைத்­து­வி­டு­வார். இந்த இரு­வ­ரின் திற­மை­க­ளை­யும் நீங்­கள் தெரிந்­து­கொள்­வது எங்­கள் குர­லின் வாயி­லா­கத்­தான். ஆனால் பாடலை ஒழுங்­கா­கப் பாடும் முன் நாங்­கள் படும் சிர­மங்­கள் கொஞ்­ச­நஞ்­ச­மல்ல. பாடலை வேக­மா­கப் பாடும் போது, ஒரு வார்த்­தைத் தவ­றி­னா­லும், பாட­லின் உடல் ஊன­மா­கி­விட்­டது என்று பாட­லா­சி­ரி­யர் கோபிப்­பார். சரி, எழுத்தை உன்­னிப்­பா­கக் கவ­னித்­துப் பாடு­வோம் என்று முயற்சி செய்­யும் போது ஒரு சங்­கதி கொஞ்­சம் நழு­வி­விட்­டா­லும், மெட்­டின் ஜீவனே செத்­து­விட்­டது என்று மியூ­சிக் டைரக்­டர் வருந்­து­வார்....’’ என்று பின்­ன­ணிப் பாட­கர்­க­ளின் சிர­மங்­களை அடுக்­கி­னார் ராணி.

இப்­ப­டி­யெல்­லாம் எதிர் நீச்­சல் அடித்­துப் பாடிக்­கொண்­டி­ருந்த ராணி­யின் வாழ்­வில் 1966ல் ஒரு புதிய, இனிய திருப்­பம் வந்­தது. ‘சதர்ன் மூவி­டோன்’ என்ற ஸ்டூடி­யோ­வின் முத­லாளி, சீதா­ராம ரெட்டி ராணி­யைத் திரு­ம­ணம் செய்­து­கொள்ள விரும்­பி­னார். ராணி­யும் சம்­ம­தித்­தார். விஜயா, கவிதா என்று இரு பெண் குழந்­தை­கள்  அமைந்­தன. இந்த நிலை­யில், 1975ல் சீதா­ராம ரெட்டி அகா­ல­மாக மறைந்­தார்.

ரெட்­டி­யின் சொந்த ஊரான கடப்­பைக்கு குடும்­பம் ஒதுங்­கி­யது. இந்­தக் கால­கட்­டத்­தில்­தான், நாகூர் ஹனி­பா­வு­டன் இஸ்­லா­மி­யப் பாடல்­கள் பாடி, குடும்­பத்­திற்­கா­கக் கொஞ்­சம் பணம் ஈட்ட முயன்­றார் ராணி. தி.மு.க. பிர­சா­ரப் பாடல்­க­ளும் பாடி­னார். தனக்கு உதவி தேவை என்று பத்­தி­ரி­கை­ளில் கேட்­டுக்­கொண்­டார்.

எப்­ப­டியோ, தன் இரு மகள்­க­ளுக்­கும் தாயா­க­வும் தந்­தை­யா­க­வும் இருந்து, அவர்­களை வளர்த்து, படிக்­க­வைத்து, திரு­ம­ண­மும் செய்­து­கொ­டுத்­து­விட்­டார் ராணி. ‘‘இரு மகள்­கள், நான்கு பேரப்­பிள்­ளை­கள் என்று எங்­கள் அனை­வ­ருக்­கும் எல்­லா­மு­மாக இருந்­தார்.’’ என்­கி­றார், ராணி­யின் மூத்த மகள் விஜயா. ஒரு சிறந்த பின்­ன­ணிப் பாட­கி­யாக இருந்த ராணி, மிகச்­சி­றந்த குடும்­பத் தலை­வி­யா­க­வும் சாதித்­து­விட்­டுச் சென்­றி­ருக்­கி­றார்.  

சில மேடை நிகழ்ச்­சி­க­ளில் தன்­னு­டைய பாடல்­க­ளைப் பாடி­னா­லும், திரைத் துறை­யி­லி­ருந்து தள்­ளி­யி­ருந்­தார் ராணி. அவ­ருக்கு 2014ல் வாழ்­நாள் சாத­னை­யா­ளர் விருதை கொடுக்­கச் செய்­த­வர், தெலுங்கு திரைப்­பா­ட­லுக்­காக இணை­ய­த­ளம் நடத்­தும், மியூ­ஸி­கா­ல­ஜிஸ்ட் ராஜா. மகள்­க­ளின் உத­வி­யு­டன் ஐத­ரா­பாத்­தில் நடந்த நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்­டார் ராணி.

சவால்­களை சந்­தித்து மகிழ்ச்­சி­யு­டன் வாழும் கலை­யில் வெற்­றி­கண்ட ராணி, 1962ல் பாடிய மெல­டிப் பாடல், ‘இன்­பம் கொண்­டா­டும் மாலை’ (‘இந்­திரா என் செல்­வம்’).  இந்­தப் பாட­லில் ஒலிக்­கும் அமை­தி­யான இன்­னி­சை­போல், மேடு பள்­ளங்­க­ளைத் தாண்டி, ராணி­யின் வாழ்க்கை சென்­றி­ருக்­கி­றது. இசைப்­பாட மட்­டும் அல்ல...இசை­பட வாழ­வும்  தன்­னால் இய­லும் என்று காட்­டி­விட்டு ராணி மறைந்­து­விட்­டார்.