புதிய வகை தொழில்நுட்பங்கள்

பதிவு செய்த நாள் : 16 ஜூலை 2018

நாம் அன்றாட வாழ்வில் தினசரி பயன்படுத்தப்படும் மொபைல் போன், கணினி, மடிக்கணினி, புகைப்பட சாதனங்கள் என பல்வேறு சாதனங்களை அதிகமாக பயன்படுத்தி வருகிறோம். இது போன்ற சாதனங்களை நாம் இன்னும் எளிமையாக பயன்படுத்துவதற்கு ஒரு பக்கம் ஆட்டோமேஷன் மற்றும் செயற்கை நுண்ணறிவு கொண்ட தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இது போன்ற தொழில்நுட்ப வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் நவீன சாதனங்களும் நாளுக்கு நாள் அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இவை நமது பணிச் சுமையை குறைக்கின்றன. பழைய கணினி மற்றும் பிற சாதனங்களுடன் இணைந்து இயங்கும் நவீன சாதனங்கள் பற்றியும் அவற்றுக்கான தொழில்நுட்ப மேம்பாடுகள் குறித்தும் இக்கட்டுரையில் பார்ப்போம்.

பி.யு.பி. (PUP) ஸ்கேனர்

நாம் பொதுவாக ஆவணங்களை ஸ்கேன் செய்வதற்கு பெரிய ஸ்கேனிங் இயந்திரம் தேவைப்படும். அதுவும் நாம் ஒரு இடத்தில் இருந்து ஸ்கேனிங் இருக்கும் இடத்திற்கு சென்றுதான் ஆவணங்களை ஸ்கேன் செய்ய முடியும். தற்பொழுது நாம் மிக எளிமையாக ஸ்கேன் செய்வதற்கு புதிய ஸ்கேனர் ஒன்று அறிமுகம் செய்துள்ளனர். அது தான் பி.யு.பி. ஸ்கேனர். இதை உங்கள் சட்டைப் பையில் வைத்துக் கொள்ளலாம். எளிதாக கையாள கூடியவை. எங்கு வேண்டுமானலும் எடுத்துச் செல்லலாம். இது வயர்லெஸ் டைப் ஸ்கேனர் ஆகும்

பி.யு.பி. ஸ்கேனரில் நாம் ஒரு முறை மின்சக்தியை சார்ஜ் செய்தால் 1000 பக்கங்கள் வரையிலான ஆவணங்களை ஸ்கேன் செய்யலாம். ஒரு கிளிக்கில் ஆவணங்களை ஸ்கேன் செய்ய முடியும். இதில் ப்ளூ டூத், வை-பை இணைப்பும் உள்ளது.

நாம் இந்த பி.யு.பி ஸ்கேனரில் ஸ்கேன் செய்த ஆவணைங்களை உங்கள் கணினி மற்றும் லேப்டாபிற்கு பரிமாற்றி கொள்ளலாம்.  ஸ்கேனர் ஒன்றின் விலை $299 ஆகும். (இந்திய ரூபாயின் மதிப்புப்படி 20,000 ஆகும்)

பைலட் பிக்சிங் எரேசபில் பென் (Pilot Fixing Erasable Pen)

பைலட் பிக்சிங் எரேசபில் பென். இந்த வகை பென் மாணவர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். பொதுவாக மாணவர்கள் தேர்வு நேரங்களில் எழுதிக்கொண்டு இருக்கும் பொழுது தவறு எதும் வரமால் எழுதுவதற்கு மிகவும் கவனமுடன் செயல்படுவார்கள். 


அப்பொழுது எழுதிக்கொண்டு இருக்கும் பொழுது ஏதேனும் தவறாகிவிட்டல் ஏதேனும் ஒரு ரப்பரை கொண்டு அதனை அழித்து திருத்துவார்கள். ஆனால், அழித்த இடத்தில் பேப்பர் சற்று அழுக்காகலாம் அல்லது சில நேரங்களில் சேதமடைந்து துளை விழலாம். இது. பார்ப்பவர் கண்களுக்கு குறிப்பாக விடைத்தாளை திருத்தும் ஆசிரியருக்கு சற்று அதிருப்தியைத் தரலாம். இது போன்று பிரச்சனைகளை எரேசபில் பென்னைக் கொண்டு  எளிதாக மாணவர்கள் சமாளிக்கலாம். நாம் எழுதிக் கொண்டு இருக்கும் பொழுது தவறு நடந்தால் பைலட் பிக்சிங் எரேசபில் பென்னில் உள்ள ரப்பரைக் கொண்டு அளித்தால் அந்த இடத்தில் திருத்தி எழுதப்பட்டது போன்று எதுவும் தெரியாது.

பேப்பர் எந்த ஒரு சேதம் இல்லாமல் இருக்கும். ஏன்னென்றால் இந்த பென் பிக்சிங் ரெவொலுஷனரி (revolutionary) எரேசபில் இங் தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கி உள்ளனர். அதனால் எளிதில் திருத்தி எழுதிக்கொள்ளலாம்.
போலராய்டு ஜிப் மொபைல் பிரிண்டர் (polaroid zip mobile printer) 

பொலராய்டு ஜிப் மொபைல் பிரிண்டர் நம்மிடம் இருந்தால் 60 விநாடிகளுக்கு குறைவான நேரத்தில் நாம் மொபைல் போனில் இருக்கும் புகைப்படங்களை உடனடியாக பிரிண்ட் போட்டு எடுத்துக்கொள்ளலாம்.பொதுவாக நாம் பிரிண்டர் பயன்படுத்துவதற்கு இங் மற்றும் கார்ட்ரிட்ஜை பயன்படுத்துவேம். ஆனால் இந்த பொலராய்டு ஜிப் மொபைல் பிரிண்டரில் ஜிங்க் டெக்னாலஜி அதாவது (zero ink printing technology) உள்ளது. ஜிங்க் பிரிண்டிங் ஷீட் 2 × 3 (சுமார் 5 × 8 cm) கொண்டு நாம் மொபைல் போனில் இருக்கும் படங்களை polaroid print app மூலம் புகைப்படங்களாக பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம்.

இந்த பிரிண்டர் மூலம் எடுக்கும் புகைப்படங்களுக்கு ஒரு சிறப்பு உள்ளது. இந்த பிரிண்டர் மூலம் எடுக்கும் புகைப்படங்களில் தண்ணீர் பட்டலும் அல்லது நீரில் முழ்கினாலும் ஒன்றும் ஆகாது. ஏனெனில் இது ”Water Proof” ஆகும். போட்டோ பேப்பரை கிழிக்கவும் முடியாது “Tear proof” ஆகும்.

மேலும் நீங்கள் எடுக்கும் புகைப்படங்களை உங்களுக்கு எற்றவாறு அதில் கொடுக்கப்பட்டுள்ள அப்பிளிகேஷன் மூலம் நிறம், வடிவமைப்பை மாற்றி உங்களுக்கு பிடித்த மாதிரி, பிரிண்ட் போட்டு எடுத்துக் கொள்ளலாம்.பொதுவாக சில வருடங்களுக்கு முன் எடுத்த சில புகைப்படங்களை   நாம் சென்டிமென்டாக வைத்திருப்போம். அதுவே சில ஆண்டுகளுக்கு பிறகு எடுத்து பார்த்தால் பழுப்பு ஏறிவிடும். அல்லது முனை மடங்கி  சேதம் ஏற்பட்டு இருக்கும். அல்லது கிழிந்து போய் இருக்கும். அப்படி ஒரு நிலையை மாற்ற இந்த பிரிண்டர் நமக்கு மிகவும் பயன்படும்.

ஸ்மாரட் போனைக் காக்க ஒரு ஸ்மார்ட் கேஸ்

மொபைல் போன்கள் கீழே விழுந்தாலும் உடையாமல் இருக்க ,புதிய மொபைல் கேஸை கண்டுபிடித்துள்ளனர்.

.இந்த மொபைல் கேஸ், ஸ்மார்ட் போன் கீழே விழுவதை தானாக அறிந்து கொண்டு அதில், பொருத்தப்பட்டு இருக்கும் ஸ்ப்ரிங், போனின் நான்கு முனைகளிலும் விரிந்துகொள்ளும். போன் கேஸில் உள்ள ஸ்பிரிங்குகள் போனில் ரேக்கு ஏற்படுவதையும் அது உடைவதை தடுக்கும். இதனால் கீழே விழும் ஸ்மார்ட் போன் உடையாது. இந்த மொபைல் கேஸ் விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை ஜெர்மனியை சேர்ந்த பிலிப் ஃபிரென்சில் என்கிற பொறியியல் மாணவர் கண்டுபிடித்துள்ளார்

வெர்டிகல் மவுஸ் (Vertical Mouse)நாம் சாதாரணமாக பயன்படுத்தும் மவுஸில் கையை ஒரே கோணத்தில் பயன்படுத்துகிறோம். நாம் தினசரி மவுஸை பயன்படுத்தி வந்தால் கை வலி ஏற்படும். இதுவே வெர்டிகல் மவுஸ் பயன்படுத்துவதன் மூலம் கை நடுநிலையாக இருக்கும். மவுஸில் நாம் கைகளை வைத்திருக்கும் முறையை வைத்து இந்த வெர்டிகள் மவுஸ் வடி வமைக்கப்பட்டிருக்கும்.போலி மற்றும் உண்மையான புகைப்படங்களை கண்டுபிடிக்க புதிய தொழில்நுட்பம்

தற்போது புகைப்படங்களை ஆளுக்கு ஏற்றவாறு மாற்றம் செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். இதன் மூலம் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதை தடுக்க புதிய தொழில்நுட்பத்தை போட்டோஷாப் நிறுவனம். அப்டேட் செய்துள்ளது .

தற்போதுள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல நல்ல விஷயங்கள் இருந்தாலும் அதே தொழில்நுட்பத்தை தவறான வழிகளிலும் பயன்படுத்தி வருகின்றன.

ஒருவர் எடுக்கும் உண்மையான புகைப்படங்களை போட்டோ ஷாப் மூலம் மாற்றம் செய்ய முடியும். இது சில நல்ல விஷயங்களுக்கு பயன்பட்டாலும், சிலர் தவறாக சித்தரித்து பல பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகின்றன. சமூக வலைத்தளத்திலும் இது பெரும்பாலும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

இப்படி போட்டோ ஷாப் மூலம் மாற்றம் செய்யப்படும் புகைப்படத்தில் எது உண்மை மற்றும் போலி என எப்படி கண்டுப்பிடிப்பது?

இதற்கு, போட்டோ ஷாப் நிறுவனம் அதன் அப்டேட்டில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் போலியாக போட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படத்தை எளிதாகக் கண்டுபிடிக்க முடியும். இந்த தொழில்நுட்பம் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது..    

 

 

 

  


கட்டுரையாளர்: முத்துலட்சுமி

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Your comment will be posted after the moderation