வி.பி., காஞ்சி வீரன்சை வீழ்த்தி ஜோன்ஸ் டூட்டி பேட்ரியாட்ஸ் அணி அசத்தல்

பதிவு செய்த நாள் : 16 ஜூலை 2018 02:56


திருநெல்வேலி:

சங்கர்நகரில் நடந்த டி.என்.பி.எல்., டி–20 கிரிக்கெட் 4வது லீக் போட்டியில் வி.பி., காஞ்சி வீரன்ஸ் அணியை ஜோன்ஸ் டூட்டி பேட்ரியாட்ஸ் அணி 48 ரன்கள் வித்யாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

சங்கர்நகர் இந்தியா சிமென்ட்ஸ் மைதானத்தில் நேற்று மாலை டி.என்.பி.எல்., டி–20 கிரிக்கெட் 4வது லீக் போட்டியில் ஜோன்ஸ் டூட்டி பேட்ரியாட்ஸ் அணியும், வி.பி.காஞ்சி வீரன்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற ஜோன்ஸ் டூட்டி பேட்ரியாட்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஜோன்ஸ் டூட்டி பேட்ரியாட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது.  அந்த அணியின் கேப்டன் கவுசிக் காந்தி அதிரடியாக விளையாடி 68 பந்துகளில் 111 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களம் இறங்கிய வி.பி., காஞ்சி வீரன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்ததால், ஜோன்ஸ் டூட்டி பேட்ரியாட்ஸ் அணி 48 ரன்கள் வித்யாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

காஞ்சி வீரன்ஸ் அணியின் சுப்பிரமணிய சிவா 18 பந்துகளில் 33 ரன்களும், விஷால் வைத்யா 28 பந்துகளில் 33 ரன்களும், கேப்டன் பாபா அபராஜித் 30 பந்துகளில் 29 ரன்களும் எடுத்தனர்.