தமிழகத்தில் பயங்கரவாதத்தை ஒழிக்க மத்திய அரசு நடவடிக்கை: பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்

பதிவு செய்த நாள் : 11 ஜூலை 2018 19:42

சென்னை,

     தமிழகத்தில் பயங்கரவாதத்தை ஒழிக்க மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருவதாக பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் உள்ளதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். பயங்கரவாதிகள் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், மத்திய அரசு தலையிடும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கையும் விடுத்தார்.
ஆனால் தமிழகத்தில் பயங்கரவாதம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.
தீவிரவாதிகள் யார் என்பதை மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மத்திய அமைச்சர்  பொன்.ராதாகிருஷ்ணனின் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

தற்போது, தமிழகத்தில் பயங்கரவாதத்தை ஒழிக்க மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.