ஒலிம்பிக்கில் ஹர்தீப்

பதிவு செய்த நாள்

22
மார்ச் 2016
19:24

அஸ்தானா: பிரேசிலில் நடக்க உள்ள ரியோ ஒலிம்பிக்கிற்கு இந்திய மல்யுத்த வீரர் ஹர்தீப் தகுதி பெற்றார்.

கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் ஆசிய மல்யுத்த ஒலிம்பிக் தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்று வந்தது. தன் ‘கிரேக்கா&ரோமன்’ 98 கி.சி., எடை பிரிவு அரைஇறுதியில் இந்தியாவின் ஹர்தீப், கஜகஸ்தானின் அசம்பெகோவை வீழ்த்தி அசத்தினார். இவர் பைனலில் சீனாவின் டிசெயோவை எதிர்கொண்டார். ஆனால், காயம் காரணமாக போட்டியிலிருந்து ஹர்தீப் விலகினார். இதையடுத்து டிசெயோவுக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது. ஹர்தீப் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஒவ்வொரு பரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் வீரர்கள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறலாம் என்ற நிலை உள்ளது. இதன்படி ஹர்திப், இந்த ஆண்டு பிரேசில் தலைவகர் ரியோ டி ஜெனீரோவில் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டியில் விளையாட நேரடி தகுதி பெற்றார். இந்த இலக்கை எட்டிய 3வது இந்திய வீரர் என்ற பெருமையை ஹர்தீப் பெற்றார். ஏற்கனவே நார்சிங் யாதவ், யோகேஷ்வர் தத் இருவரும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தனர்.

கடந்த 2004க்குப் பின் ‘கிரேக்கா&ரோமன்’ பிரிவிலிருந்து ஒலிம்பிக்கிற்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் ஹர்தீப் ஆவார். இதற்கு முன் மசோம் கடாரி (2004ல ஏதென்ஸ்) ஒலிம்பிக்கில் பங்கற்றது குறிப்பிடத்தக்கது.