திரிபுராவில் கன மழை, 2 பேர் பலி, 3000பேர் வீடு இழப்பு

பதிவு செய்த நாள் : 13 ஜூன் 2018 19:27

அகர்தலா,

   திரிபுராவில்  கன மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில்  86 மி.மீ மழை பெய்துள்ளது

.கனமழைக்கு   2 பேர் பலியானார்கள்.  மேலும் 24 மணிநேரத்துக்கு மழை நீடிக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  

திரிபுராவில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு காணப்பட்டது. இதில் 3500 பேர் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள். தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  

கடந்த மாதம் பெய்த மழையில் 6பேர் பலியானார்கள். 17ஆயிரம் குடும்பத்தினர் வீடுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது.