சிங்கப்பூர் உச்சி மாநாட்டின் பாணியில் இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தையை தொடங்க ஆளும்கட்சி அழைப்பு

பதிவு செய்த நாள் : 13 ஜூன் 2018 19:21

லாகூர்

     பாகிஸ்தானின் ஆளும்கட்சியான நவாஸ் ஷெரிப் முஸ்லிம் லீக் இடையில் நிறுத்தப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடர வேண்டும். நெடுநாள் எதிரிகளாக இருந்த அமெரிக்காவும் வடகொரியாவும் பேசி உடன்பாட்டுக்கு வர முடியும் என்றால், இந்தியாவும் பாகிஸ்தானும் பேசத் தடையாக இருப்பது என்ன என்று ஆளும்கட்சியின் தலைவரான ஷெபாஸ் ஷெரிப் கேள்வி எழுப்பினார்.

ஆப்கானிஸ்தானில் அமைதி பேச்சுவார்த்தை துவக்கப்பட வேண்டும். இந்திய-பாகிஸ்தான் பேச்சுவார்த்தைகள் காஷ்மீர் பற்றி மீண்டும் துவக்கப்படுவது அவசியம் என ஷெரிப் கூறினார்.
பாகிஸ்தான் ஆளும்கட்சியின் சார்பில் பாகிஸ்தான் பிரதமர் பதவிக்கு ஷெபாஸ் ஷெரிப் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தங்களுடைய கட்சி ஜூலை 25-ம் தேதி நடக்கும் தேர்தலில் வெற்றி பெற்றால் ஆப்கானிஸ்தானத்தில் அமைதி ஏற்படுத்த முயற்சி செய்வோம். இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் பேச நடவடிக்கை எடுப்போம் எனக் கூறினார்.
இதற்கிடையில் பாகிஸ்தான் அரசு இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியாவின் செயல்

தூதரை அழைத்து எல்லையில் நடக்கும் அத்துமீறல்களுக்கு இந்தியாதான் பொறுப்பு. உடனடியாக எல்லையை தாண்டி இந்திய ராணுவம் நடத்தும் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென பாகிஸ்தான் அரசு வலியுறுத்தியது.