இடைத்தேர்தல் தோல்விகளை தாங்கி கொள்ள முடியாமல் தவிக்கும் பாஜக சதி: அகிலேஷ் குற்றச்சாட்டு

பதிவு செய்த நாள் : 13 ஜூன் 2018 18:56

லக்னோ

     முதல்வராக அகிலேஷ் வசித்த வீட்டின் பொருத்தப்பட்டிருந்த அரசு பொருள்களை காணவில்லை. வீட்டையும் நாசம் செய்து விட்டார்கள் என்று குறை கூறுவது பாஜக அரசின் திட்டமிட்ட சதியாகும் என்று சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று லக்னோவில் கூறினார்.

உத்தர பிரதேச ஆளுநரான ராம்நாயக் அகிலேஷ் வசித்த வீட்டை இடித்து நாசம் செய்தது யார் என்று விசாரணை நடத்தவேண்டும் என மாநில முதல்வர் யோகிக்கு எழுதிய கடிதத்தில் உத்தரவிட்டுள்ளார்.  அதைத் தொடர்ந்து அகிலேஷ் செய்தியாளர்களிடம் பாஜகவின் சதி பற்றி குறிப்பிட்டார்.
உத்தர பிரதேசஆளுநர் ராம்நாயக்கிற்கு சொந்தமாக ஆன்மா கிடையாது. அதனால் ஆர்எஸ்எஸ் ஆன்மா அவர் உடலில் தங்கி உள்ளது. தேர்தல் தோல்வி காரணமாக அவர் விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த முன்னாள் முதல்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாக்களை காலி செய்து அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சமீபத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி எல்லோரும் அவரவர் இருந்த வீடுகளை காலி செய்தனர். அகிலேஷ் யாதவும் வீட்டை காலி செய்து விட்டு அரசு எஸ்டேட் துறையிடம் ஒப்படைத்தார்.

அகிலேஷ் யாதவ் வசித்த பங்களாவில் நீச்சல் குளம் இருந்ததாகவும் அதில் பதிக்கப்பட்டிருந்த ஓடுகளை அகிலேஷ் எடுத்து கொண்டு போய்விட்டதாகவும் கூறப்பட்டது. அந்த வீட்டில் நீச்சல் குளமே இல்லை என்று அகிலேஷ் மறுத்துள்ளார்.

மேலும் காணாமல் போன பொருள்கள் என்னவென்று பட்டியல் கொடுக்க செல்லுங்கள். பணத்தை கட்டி விடுகிறேன் என்று கூறினார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அகிலேஷ் யாதவ், ‘உத்தரப்பிரதேசத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தல்களில் சந்தித்த தோல்விகளை ஜீரணிக்க முடியாமல் பா.ஜ.க.வினர் என் மீது அவதூறுகளை பரப்பி வருகின்றனர்.

உடற்பயிற்சி சாதனங்கள் மற்றும் பேட்மிண்டன் மைதானத்தில் இருந்த இருந்த பொருட்கள் நான் வாங்கியது. எனவே, நான் அதை எடுத்து சென்றதில் என்ன தவறு உள்ளது ? மாநில ஆளுநர் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.