தினமும் வெளிநடப்பு செய்வதற்கு காரணங்களைத் தேடிக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின்: தமிழிசை

பதிவு செய்த நாள் : 13 ஜூன் 2018 18:52

சென்னை,

    தமிழக சட்டசபையில் இருந்து தினமும் வெளிநடப்பு செய்வதற்கு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் காரணங்களைத் தேடிக் கொண்டிருப்பதாக, பாஜக தமிழக தலைவர் தமிழிசை விமர்சித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் இருந்து தினமும் வெளிநடப்பு செய்வதற்கு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் காரணங்களைத் தேடிக் கொண்டிருப்பதாக, பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக தி.நகரில் உள்ள கட்சியில் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது தமிழிசை கூறியதாவது: நாட்டில் முக்கியத்துவம் கொடுப்பதற்கு எத்தனையோ விஷயங்கள் உள்ளன. உதாரணமாக காவிரி மேலாண்மை ஆணையத்தில் உறுப்பினர்களை பரிந்துரை செய்வதற்கான நேரம் முடிந்தும் கர்நாடகா  இன்னும் செய்யவில்லை.

அதை பற்றியெல்லாம் திமுக கவலைப்படவில்லை. ஆனால் எஸ்.வி.சேகர் விவகாரத்திற்காக திமுகவின் 89 சட்டப்பேரவை உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்வது ஏற்றுக் கொள்ள இயலாத ஒன்று. இந்த விவகாரம் நீதிமன்றம் தொடர்புடையது. அதனை தமிழக அரசு கவனித்துக் கொள்ளும்

ஆனால் இதற்காக வெளிநடப்பு செய்வது என்பதன் மூலம் தமிழக சட்டசபையில் இருந்து தினமும் வெளிநடப்பு செய்வதற்கு எதிர்க்கட்சி தலைவர் சகோதரர் ஸ்டாலின் காரணங்களைத் தேடிக் கொண்டிருப்பதையே காட்டுகிறது.

இவ்வாறு தமிழிசை  தெரிவித்துள்ளார்.