சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜர்

பதிவு செய்த நாள் : 13 ஜூன் 2018 18:48

சென்னை,

    ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் சென்னை மாநகர  காவல்துறை முன்னாள் ஆணையர் ஜார்ஜ் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் தெரிவித்ததை அடுத்து அது குறித்து விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த ஆணையம் ஜெயலலிதாவுடன் இருந்தவர்கள், அரசு உயர் அதிகாரிகள், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம், அப்போலோ மருத்துவர்கள், அரசு மருத்துவர்கள் உள்ளிட்ட பலருக்கும் சம்மன் அனுப்பி விசாரித்து வருகிறது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த ஜார்ஜ் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது

இதையடுத்து  சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் உள்ள ஆறுமுகசாமி ஆணையத்தில் ஜார்ஜ் இன்று ஆஜராகி விளக்கம் அளித்தார்.