விஜய் சேது­பதி, நயன்­தாரா, ஏ.ஆர். ரஹ்­மான், சிவ­கு­மா­ருக்கு விஜய் விரு­து­கள்!

பதிவு செய்த நாள் : 06 ஜூன் 2018

பத்­தா­வது வரு­டாந்­தர விஜய் விருது வழங்­கும் விழா அண்­மை­யில் சென்­னை­யில் வழக்­கம் போலவே மிகுந்த கோலா­க­ல­மாக நடந்­தது. சினிமா நடி­கர் – நடி­கை­கள், தொழில்­நுட்ப கலை­ஞர்­கள் முத­லா­னோர் விரு­து­கள் வழங்கி கவு­ர­விக்­கப்­பட்­ட­னர்.

விஜய் விருது பெற்­ற­வர்­கள் பின்­வ­ரு­மாறு:–

விஜய் சேது­பதி (சிறந்த நடி­கர் – 'விக்­ரம் வேதா'), நயன்­தாரா (சிறந்த நடிகை & பேவ­ரிட் நடிகை 'அறம்'), தனுஷ் (சிறந்த என்­டர்­டெய்­னர்), சிவ­கு­மார் (சிறந்த சாத­னை­யா­ளர்), விவேக் பிர­சன்னா (சிறந்த துணை நடி­கர் – 'மேயாத மான்'), ரேவதி (சிறந்த துணை நடிகை – 'பா. பாண்டி'), எஸ்.ஜே. சூர்யா (சிறந்த வில்­லன் – 'ஸ்பைடர்'), வசந்த் ரவி (சிறந்த புது­முக நடி­கர் – 'தர­மணி'), அதிதி பாலன் (சிறந்த புது­முக நடிகை – 'அருவி'), 'அருவி' (சிறந்த படம்), புஷ்­கர் காயத்ரி (சிறந்த திரைக்­க­தா­சி­ரி­யர் & டைரக்­டர் – 'விக்­ரம் வேதா'), ராஜ்­கு­மார் பெரி­ய­சாமி (சிறந்த கதா­சி­ரி­யர் – 'ரங்­கூன்'), ரவி­வர்­மன் (சிறந்த ஒளிப்­ப­தி­வா­ளர் – 'காற்று வெளி­யிடை'), பிலோ­மின் ராஜ் (சிறந்த படத்­தொ­குப்­பா­ளர் – 'மாந­க­ரம்'), திலிப் சுப்­ப­ரா­யன் (சிறந்த ஸ்டண்ட் மாஸ்­டர் – 'தீரன் அதி­கா­ரம் ஒன்று'), பிருந்தா (சிறந்த டான்ஸ் மாஸ்­டர் – 'அழ­கியே' பாடல் – 'காற்று வெளி­யிடை'), முத்­து­ராஜ் சிறந்த ஆர்ட் டைரக்­டர் – 'வேலைக்­கா­ரன்'), லோகேஷ் கன­க­ராஜ் (சிறந்த அறி­முக டைரக்­டர்  – 'மாந­க­ரம்'), ஏ.ஆர். ரஹ்­மான் (சிறந்த இசை­ய­மைப்­பா­ளர் – 'காற்று வெளி­யிடை'), சாம் சி.எஸ். (சிறந்த பின்­னணி இசை­ய­மைப்­பா­ளர் – 'விக்­ரம் வேதா'), அனி­ருத் (சிறந்த பின்­னணி பாட­கர் – 'இறைவா' பாடல் – 'வேலைக்­கா­ரன்'), லக்சிமி சிவ­னேஸ்­வ­ர­லிங்­கம் (சிறந்த பின்­னணி பாடகி – 'செந்­துாரா' பாடல் – 'போகன்'), சூரி (சிறந்த நகைச்சுவை நடிகர் – 'சங்கிலி புங்கிலி கதவ திற'), சுரேஷ் செங்கையா சி. குருநாதன் (சிறந்த வச­ன­கர்த்தா – 'ஒரு கிடா­யின் கருணை மனு'), உமா தேவி (சிறந்த பாட­லா­சி­ரியை – 'தோரண ஆயி­ரம்' பாடல் – 'அறம்'), அட்லீ (சிறந்த பேரிட் டைரக்­டர் –'மெர்­சல்'), 'மெர்­சல்' (சிறந்த பேவ­ரிட் படம்), 'ஆளப்­போ­றான் தமி­ழன்' (சிறந்த பேவ­ரிட் பாடல் – 'மெர்­சல்').

விரு­து­க­ளின் சிறப்பை பிர­தி­ப­லிப்­ப­தற்­காக அனைத்து விரு­து­க­ளும் கிரிஸ்­ட­லில் உரு­வாக்­கப்­பட்­டி­ருந்­தன. நடி­கை­கள் கீர்த்தி சுரேஷ், பிரியா பவானி சங்­கர், சயீஷா சைகல், நடி­கர்­கள் கார்த்தி, துல்­கல் சல்­மான், டைரக்­டர்  பாலா உட்­பட பல சினிமா பிர­மு­கர்­க­ளும் விழா­வில் கலந்து கொண்­ட­னர்.  திவ்­ய­தர்­ஷனி, கோபி­நாத், மா.கா.பா. ஆனந்த் ஆகிய மூவ­ரும் இணைந்து நிகழ்ச்­சி­களை தொகுத்து வழங்கி கல­க­லப்­பூட்­டி­னர்.

இவ்­வி­ழாவை விரை­வில் விஜய் டிவி­யில் கண்டு களிக்­க­லாம்.