காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி, மு.க. ஸ்டாலின் மலர்ப் போர்வை அணிவித்து அஞ்சலி

பதிவு செய்த நாள் : 05 ஜூன் 2018 15:16

சென்னை:

காயிதே மில்லத் அவர்களின் 123ஆவது பிறந்த நாளையொட்டி, சென்னை – திருவல்லிக்கேணி, வாலாஜா பெரிய பள்ளி வாசலில் அமைந்துள்ள காயிதே மில்லத் நினைவிடத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர்ப்போர்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.


இந்த நிகழ்வின்போது, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர் பெருமக்கள், தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவர் அன்வர் ராஜா எம்.பி., நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உடன் இருந்தனர். தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

ஸ்டாலின் மரியாதை


காயிதே மில்லத்தின் 123வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை, திருவல்லிகேணி பெரிய மசூதி வளாகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் திமுக உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.