கவுதமாலா: இஸ்ரேலுக்கான தூதரகம் ஜெருசலேமில் திறப்பு

பதிவு செய்த நாள் : 16 மே 2018 20:54

ஜெருசலேம்:

அமெரிக்காவை தொடர்ந்து கவுதமாலா நாடு இஸ்ரேலுக்கான தனது தூதரகத்தினை ஜெருசலேமில் இன்று திறந்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் டெல் அவிவ் நகரில் இருந்த இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதரகத்தினை ஜெருசலேம் நகருக்கு கடந்த திங்கள்கிழமை இடமாற்றினார்.
இதற்கு பாலஸ்தீனர்கள் மத்தியில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து இஸ்ரேலுக்கு எதிராக காசா எல்லையில் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கட்டுப்படுத்த இஸ்ரேல் படைகள் துப்பாக்கி சூடு நடத்தின.

இச்சம்பவத்தில் 59 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். 2,400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்நிலையில், அமெரிக்காவை தொடர்ந்து கவுதமாலா நாடும் இஸ்ரேலுக்கான தனது தூதரகத்தினை ஜெருசலேம் நகரில் திறந்தது.

இதற்கான தொடக்க நிகழ்ச்சியில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு, கவுதமாலா அதிபர் ஜிம்மி மொரேல்ஸ் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவின் இந்த முடிவை புகழ்ந்து பேசிய பெஞ்சமின் நேதன்யாஹு, அடுத்து கவுதமாலாவுக்கு பயணிக்க இருப்பதாக என்று கூறினார்.