பெண்களின் பாதுகாப்பிற்காக ரயில் பெட்டிகளில் ”பேனிக் பட்டன்”

பதிவு செய்த நாள் : 16 மே 2018 20:34

லக்னோ:

பெண்களின் பாதுகாப்பிற்காக ரயில் பெட்டிகளில் பேனிக் பட்டன் வைக்கப்பட உள்ளதாக வடகிழக்கு ரயில்வே இன்று அறிவித்துள்ளது.

ரயில்களில் சமீப காலமாகப் பெண்களுக்கு பல கொடுமைகள் நடந்து வருகின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் தனியாக பயணம் செய்யும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்களின் பாதுகாப்பை அதிகப்படுத்தும் வகையில் இந்திய ரயில்வே பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இரவு நேரங்களில் பெண்கள் பெட்டிகளில் பெண் போலீசார் இருக்க வேண்டும். பெண்கள் பெட்டிகளை எளிதாக கண்டறிய வித்தியாசமாக பெயிண்ட் அடிக்கப்படும்.

ரெயில் நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என தெரிவித்திருந்தது.

இந்நிலையில், அவசர காலங்களில் பெண்கள் உதவியை பெற ரயில்களில் பேனிக் பட்டன் ஒன்று வைக்கப்பட உள்ளது. பெண்கள் தங்களுக்கு உதவு தேவைப்படும் போது அந்த பட்டனை அழுத்தினால், ரயில் பெட்டியில் இருக்கும் ரெயில்வே ஊழியருக்கு தகவல் சென்று சேரும்.

இதன் மூலம் எளிதாக உதவியை பெற முடியும் என வடகிழக்கு ரயில்வே தலைமை பி.ஆர்.ஓ. சஞ்சய் யாதவ் தெரிவித்தார்